ஆண்டுதோறும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போதெல்லாம் மக்களிடையே அதிகம் விவாதிக்கப்படும் பிரச்னை தனிநபர்கள், சம்பளம் வாங்குவோருக்கான வரிவிலக்கு பற்றியதாகத் தான் இருக்கும். இந்த ஆண்டும் அதற்கு விதிவிலக்கு இல்லை.
பணவீக்கத்துக்கு ஏற்றபடி கடந்த காலங்களில் வரி வரம்புகள் எப்படி மாற்றியமைக்கப்பட்ட என்றும் அதை எப்படி மாற்றியமைக்க வேண்டும் என்பது பற்றி பாங்க்பஜார்.காம் ஆய்வு செய்துள்ளது. அதன்படி 2013-14 பெஞ்சுமார்க்கின்படி 20% மற்றும் 30% வரம்புகள் பழைய திட்டத்தில் சீரமைக்கப்பட வேண்டும்.

2013-14க்கான விலை பணவீக்க குறியீடுதான் இப்போதும் நடைமுறையில் உள்ளது. அப்போது 200ஆக இருந்த குறியீடு 2024-25க்கு 363 ஆக உள்ளது. இது கிட்டத்தட்ட 81% அதிகமாகும். அண்மைக்காலமாக நிலவும் விலைவாசியினால் இந்தக் குறியீடு கணிசமாக உயர்ந்துள்ளது. எனவே பழைய வரி திட்டத்தின் கீழ் உள்ள வரம்புகள் அதற்கேற்றபடி உடனடியாக தாமதமின்றி மாற்றியமைக்கப்பட வேண்டும்.இதன் மூலம் நடுத்தர வர்க்க மக்கள் மீதான நிதிச்சுமையைக் குறைக்க வேண்டும்.
80சி பிரிவின் கீழான விலக்கு இன்னும் ரூ.1.5 லட்சமாக இருக்கிறது. இதை ரூ.2 லட்சமாக உயர்த்த வேண்டும்.
80டி விலக்கை மற்றவர்களுக்கு ரூ.50,000 ஆகவும், மூத்த குடிமகன்களுக்கு ரூ.1 லட்சமாகவும் உயர்த்தப்பட வேண்டும்.
அதேபோல் வீட்டுக்கடன் வட்டி மற்றும் அசல் தவணைகளுக்கான விலக்கை தனியாக வைத்து அதன் வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும்.
பாங்க்பஜார் செய்த ஆய்வின்படி ரூ.18 லட்சத்துக்கு மேலான வருமானத்தை 30% வரி விதிப்புக்கு கொண்டு வரலாம் என மக்கள் எதிர்பார்ப்பதாகக் கூறப்படுகிறது. பணவீக்கத்தால் வருவாயின் மதிப்பு மிகவும் குறைந்து விட்டது. ஒரு ரூபாயின் மதிப்பு பணவீக்கத்தால் 55 காசுகளாக ஆகிவிட்டது.
2013-14இல் இருந்த ரூ.10 லட்சத்தின் மதிப்பு இப்போது ரூ.5.5 லட்சமாக ஆகிவிட்டது. அதன் வாங்கும் மதிப்பு கிட்டத்தட்ட பாதிக்குப் பாதியாகக் குறைந்து விட்டது. புதிய வரி திட்டத்தின் கீழ் பணவீக்கத்தினால் ஏற்படும் இழப்பை சரிகட்ட முடியாது. ஆனால் ரூ.15 லட்சம் வரையிலான வருமானம் பெறுபவர்களுக்கு இது ஓரளவு சலுகையைத் தருகிறது. ஆனால் அதற்கு மேல் வருவாய் உள்ளவர்களுக்கு பணவீக்கத்துக்கு ஏற்றபடியான சலுகையைத் தரவில்லை.
2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் ஜூலை 23 ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் பல திட்டங்களை அறிவித்து நாட்டின் பொருளாதார ஏற்றத்துக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணவீக்கம் அதிகரித்துள்ளநிலையில் வருமான வரி செலுத்துவோர் அதற்கேற்றபடியான சலுகைகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என எதிர்பார்த்துள்ளனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications