டெல்லி: தொலைத் தொடர்பு துறைக்கு இது மிக மோசமான காலமே. தொலைத் தொடர்பு துறையிலிருந்து அரசாங்கத்திற்கு வருவாய் 2019-ம் நிதியாண்டில் 7 சதவிகிதம் வீழ்ச்சியைக் கண்டுள்ளது என்று மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் தொடர்பு அமைச்சகம் மாநிலங்களவையில் எழுத்து பூர்வமாக அளித்த பதிலில், தொலைத் தொடர்பு துறை ஒழுங்கு முறை ஆணையத்தின் (டிராய்) தகவலின் படி, தொலைத் தொடர்பு சேவைத் துறையின் சரிசெய்யப்பட்ட வருவாய் கடந்த 2018 - 2019ல் 1,44,681 கோடி ரூபாயாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
எனினும் இது கடந்த 2017 - 2018ல் 1,55,680 கோடி ரூபாயாக இருந்தது. இதன் படி சுமார் 7.06 சதவிகிதம் வருவாய் வீழ்ச்சியாகும்.
வருவாய் வீழ்ச்சி
சராசரியாக ஒரு பயனுருக்கான சராசரி வருவாய் 2017 -2018ல் 124.85 ரூபாயாக இருந்துள்ளது. ஆனால் இதுவே 2019ம் நிதியாண்டில் 71.39 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. இதே மற்றொரு மத்திய அமைச்சரான ரவிசங்கர் பிரசாத் தொலைத் தொடர்பு துறை எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து விவரித்துள்ளார். மேலும் தொலைத் தொடர்பு துறையினரிடமும், இது குறித்து பல முறை சமீபகாலமாக பல சந்திப்புகளை நடத்தி வருகிறது.
கால அவகாசம் நீட்டிப்பு
அமைச்சரவை செயலாளர் தலைமையில் Committee of Secretaries குழு, தொலைத் தொடர்பு துறையில் உள்ள பிரச்சனைகளையும் பரீசிலித்து வருகிறது. இந்த குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் தொலைத் தொடர்பு துறை எதிர்கொள்ளும் நிதி அழுத்தத்தினை தணிப்பதற்காக, 2020 - 2021 மற்றும் 2021 - 2022ம் ஆண்டுக்கான செலுத்த வேண்டிய ஸ்பெக்ட்ரம் தொகையை செலுத்த அரசு கால அவகாசம் கொடுத்துள்ளது.
வருவாய் அதிகரிக்கலாம்
இருப்பினும் தொடர்புடைய ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் நிர்ணயிக்கப்பட்ட தொகை வட்டியுடன் வசூலிக்கப்படும் என்றும் கருதப்படுகிறது. இதனால் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையின் நிகர மதிப்பும் பாதுக்காக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. எப்படி இருப்பினும் நடப்பு நிதியாண்டில் இந்த வருவாயானது அதிகரிக்கலாம் என்றும் கருதப்படுகிறது. ஏனெனில் நஷ்டத்தில் உள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்கள், அதிலிருந்து மீள கட்டண உயர்வு என்ற அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளன.
தொடர்ந்து கட்டணம் அதிகரிப்பு
வோடபோன் ஐடியா, ஏர்டெல் மற்றும் ஜியோ உள்ளிட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களது மொபைல் சேவைகளுக்கான கட்டணத்தை, ஒரே நேரத்தில் அதிகரித்துள்ளன. இதனால் நடப்பு நிதியாண்டில் இந்த நிறுவனங்களின் வருவாய் அதிகரிக்கும் என்றும் கருதப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்களின் சராசரி வருவாய் அதிகரிக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications