இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நிறுவனங்களின் வர்த்தகம் அதிகளவிலான பாதிப்பு எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலை விரைவில் முன்னேற்றம் அடைய வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருக்கும் காரணத்தால் நிறுவனங்கள் முக்கியமான மாற்றத்தைச் செய்துள்ளது.
2020ல் அறிவிக்கப்பட்ட லாக்டவுனில் இருந்து முழுமையாக மீள முடியாமல் தவித்து வரும் இந்திய நிறுவனங்கள் 2வது கொரோனா அலை காரணமாக அறிவிக்கப்பட்டுப் புதிய தளர்வு கட்டுப்பாடுகள் நிறுவனங்களைப் பெரிய அளவில் பயமுறுத்தியுள்ளது என்றால் மிகையில்லை.
கொரோனா லாக்டவுன்
கொரோனா லாக்டவுன் மூலம் இந்தியாவில் வர்த்தகம் பாதித்துள்ளது வெளிப்படையாகத் தெரியும் நிலையில், இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீளவும், நிறுவனத்தில் சுமையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக நிரந்தர ஊழியர்களைச் சேர்ப்பதைக் காட்டிலும் தற்காலிகமாக ஊழியர்களைச் சேர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஒப்பந்த ஊழியர்களின்
2020 லாக்டவுன் காலத்தில் இங்கொன்றும் அங்கொன்றுமாக இருந்த இந்த நிலை, தற்போது நாடு முழுவதும் இருக்கும் நிறுவனங்களில் தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
உயர் பதவிகள்
இதுமட்டும் அல்லாமல் லாக்டவுன் துவக்கத்தில் ஆரம்பக்கட்ட ஊழியர்கள், கள வர்த்தகப் பணியில் இருப்பவர்கள் மட்டுமே தற்காலிக ஊழியர்களாகச் சேர்க்கப்பட்ட நிலையில் தற்போது உயர் பதவி பணியிடங்களில் தற்காலிக ஊழியர்களை அதிகளவில் சேர்க்கப்பட்டு வருகிறது.
டார்கெட் அதிகம்
மேலும் தற்காலிக பிரிவில் பணியில் அமர்த்தப்படும் ஊழியர்களுக்குக் குறிப்பிட்ட காலத்திற்குள் குறிப்பிட்ட பணியை டார்கெட் உடன் முடிக்க வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையும் நிலவுகிறது எனச் சந்தை நிலவரம் கூறுகிறது.
குறைவான சம்பளம்
இதோடு இத்தகைய இலக்குடன் பணியில் சேரும் ஊழியர்களுக்குச் சம்பளம் குறைவாக இருந்தாலும், ஆனால் நிறுவனங்களின் இலக்கை அடைவதன் மூலம் அதிகக் கமிஷன் தொகையும் நிறுவனங்கள் அளிக்கிறது.
இரட்டிப்பு வளர்ச்சி
இந்நிலையில் டீம்லீஸ் சர்வீசஸ் நிறுவனத்தின் தலைவர் தேவல் சிங் கூறுகையில், இந்தியாவில் தற்காலிக ஊழியர்களுக்கு அளிக்கப்படும் பணிகளின் எண்ணிக்கை 2020ஐ விடவும் 2021ல் இரட்டிப்பு வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications