சுயசார்பு இந்தியா என்ற இலக்கை நோக்கி இந்தியா வேகமாக பயணம் செய்து கொண்டிருக்கிறது. இதற்கு விதை போட்ட சில நிறுவனங்கள் குறித்து தான் இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம். இந்த நிறுவனங்கள் பல்வேறு துறைகளிலும் இந்தியா சுயசார்புடன் இருப்பதற்கு உதவிகரமாக இருந்துள்ளன.
அமுல்:1900களில் உலகிலேயே மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக இந்தியா மாறும் என யாரும் கற்பனை செய்து கூட பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் வெற்றிகரமாக செயல்படுத்தி காட்டிய நிறுவனம் தான் அமுல். 1946 ஆம் ஆண்டு Kaira District Cooperative Milk Producers Union என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. பின்னாளில் இது அமுல் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

பால் கொள்முதல் செய்து அதனை மக்களிடம் கொண்டு சேர்ப்பது, பால் சம்பந்தப்பட்ட பொருட்களை தயாரித்து விற்பனை செய்வது ஆகியவற்றை ஒழுங்குப்படுத்தி நாட்டில் பல்வேறு பால் உற்பத்தி நிறுவனங்களுக்கும் முன்னோடியாக அமைந்தது. சர்வதேச அளவில் பால் உற்பத்தி துறையில் சிறந்த நிறுவனமாக உயர்ந்து நிற்கிறது.
பார்லே: இந்தியர்களின் பால்ய பருவத்தை ஆக்கிரமித்த பிஸ்கட்டுகள் என்றால் அது பார்லே ஜி தான். 1929 ஆம் ஆண்டு மோகன்லால் தயால் சவுகான் இந்தியாவின் சுதேசி இயக்கத்தை முன்னோடியாக கொண்டு மும்பையில் ஒரு சிறிய ஆலையை நிறுவினார்.
அந்த இடத்தின் பெயர் வில்லே பார்லே. அதன் நினைவாக நிறுவனத்திற்கு பார்லே என பெயர் சூட்டினார். 1939 ஆம் ஆண்டில் இந்த நிறுவனம் பிஸ்கட் தயாரிப்பில் ஈடுபட தொடங்கியது. இன்று வரை இந்தியாவின் மறக்க முடியாத ஒரு பிஸ்கட்டாக இவர்களின் பார்லே ஜி இருக்கிறது.
மாருதி: மாருதி சுசுகி நிறுவனம் சந்தையில் நுழையும் வரை இந்தியாவில் கார்கள் என்பது பணக்கார குடும்பங்களுக்கு மட்டுமே சொந்தமானதாக இருந்தது. ஆனால் மாருதி சுசுகி நிறுவனம் வந்த பிறகு நடுத்தர மக்களும் கார்களை வாங்க முடியும் என்ற கனவை நினைவாக்கியது.
மாருதி சுசுகி நிறுவனம் தனது முதல் கார் மாருதி 800ஐ 50,000 ரூபாய்க்கு விற்பனை செய்தது. இதனை அடுத்து மாருதியின் வளர்ச்சி வேகமெடுத்தது. நடுத்தர மக்களும் கார்களை வாங்க முடியும் பயன்படுத்த முடியும் என்ற ஒரு நம்பிக்கையை தந்தது மாருதி நிறுவனம்.
டாபர் இந்தியா: கொல்கத்தாவை சேர்ந்த மருத்துவர் எஸ்கே பர்மன் 1880 களில் தன்னுடைய ஆயுர்வேத மருந்துகளுக்கு புகழ்பெற்றவர். அவர் தயாரித்து வழங்கிய மருந்துகள் பல்வேறு நோய்களையும் தீர்த்தன.
எனவே அவரை கிராம மக்கள் 'Daktur Burman' என அழைத்தனர் , பின்னாளில் அவரது நிறுவனத்திற்கு இதன் நினைவாக டாபர் என பெயர் சூட்டப்பட்டது. 1884 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தொடங்கிய டாபரின் பயணம் இந்தியாவின் ஆயுர்வேத மருந்து துறையில் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது.
பாடா: செக் குடியரசு நாட்டை பூர்வீகமாகக் கொண்டது என்றாலும், 1931 ஆம் ஆண்டு முதன் முதலாக பாடா நிறுவனம் கொல்கத்தாவில் தன்னுடைய முதல் கடையை நிறுவியது. பின்னாளில் இதன் நினைவாக அந்த பகுதிக்கு பாடா நகர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
பாடாவை பொருத்தவரை இந்தியர்களுக்கு மிகப் பிடித்தமான ஒரு காலணி பிராண்ட் என கூறலாம். தற்போது சந்தையில் எத்தனை காலணி பிராண்டுகள் வந்தாலும் பாடாவிற்கு என தனி மரியாதை இருந்து கொண்டு தான் இருக்கிறது.
சிப்லா: பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் போது இந்திய மருத்துவத் துறையில் வெளிநாட்டு நிறுவனங்கள்தான் ஆதிக்கம் செலுத்தின. பெரும்பாலான மருந்துகளின் உரிமங்களை வெளிநாட்டு நிறுவனங்களே பெற்றிருந்தன. அப்போது அத்தியாவசிய மருந்துகளுக்கு கூட இந்தியா வெளிநாடுகளையே சார்ந்து இருக்க வேண்டி இருந்தது.
இந்த நிலையில் தான் மருத்துவர் யூசுப் ஹமீது, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தன்னுடைய பிஎச்டி படிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பி சிப்லா என்ற மருந்து நிறுவனத்தை நிறுவினார். பல்வேறு மருந்துகளின் உரிமத்தை இந்திய நிறுவனங்கள் பெற சிப்லா அடித்தளத்தை அமைத்தது.
ஹீரோ: 1956 ஆம் ஆண்டு ஓபி மஞ்சல் ஹீரோ சைக்கிள் என்ற நிறுவனத்தை தொடங்கினார். பஞ்சாப் மாநிலத்தில் மிதிவண்டி சீரமைப்பு நிலையமாக தொடங்கப்பட்ட ஹீரோ சைக்கிள் தான் பின்னாளில் பெரிய நிறுவனமாக வளர்ந்தது.
ஓபி மஞ்சல் அவர்களின் தலைமையின் கீழ் உலகின் மிகப்பெரிய மிதிவண்டி உற்பத்தியாளராக இந்த நிறுவனம் உருவானது. இதனை அடுத்து படிப்படியாக வளர்ந்து இந்த நிறுவனம் தற்போது ஹீரோ மோட்டார் கார்ப் என்ற பெயரில் இந்தியர்களின் மனம் கவர்ந்த இருசக்கர வாகன நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications