இப்போதெல்லாம் ஒவ்வொருவரும் சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். முன்பு ஒருவரிடம் சேமிப்பு இருந்தால் மட்டுமே கார் வாங்க முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் இப்போது கார் வாங்க எளிதாக லோன் கிடைக்கிறது. எனவே கார் வாங்க வேண்டும் என்ற லட்சியத்தில் இருப்பவர்களுக்கு இந்த வகை லோன்கள் பெரிதும் உதவுகின்றன. நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும், வங்கி சாரா நிதி நிறுவனங்களும் கார் கடன்களை வழங்குகின்றன. அதில் எந்த கடனைத் தேர்வு செய்து பெறுவது என்பதில் உங்களுக்கு குழப்பம் வரலாம். இந்தப் பதிவில் குறைந்த வட்டியில் கார் கடன்களை வழங்கும் வங்கிகளின் விவரங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
கார் கடன்களை வாங்குவதற்கு முடிவெடுத்து விட்டால் வெவ்வேறு வங்கிகளின் வட்டி விகிதங்கள் மற்றும் நிபந்தனைகள், விதிமுறைகள் ஆகியவற்றை தெரிந்து கொள்ள வேண்டும். வட்டி விகிதத்தில் சிறிதளவு மாற்றம் இருந்தாலும் உங்களுடைய மாதாந்திர தவணையில் அவை பிரதிபலிக்கும். குறைந்த வட்டியில் கடன்களை வழங்கும் வங்கியை தேர்வு செய்வது உங்களுக்கும் லாபகரமானதாக இருக்கும்.

UCO பேங்க்: UCO பேங்க் புதிய பெட்ரோல் அல்லது டீசல் கார்களை வாங்குவதற்கு ஒரு வருடத்திற்கு 8.70% வட்டி விகிதத்தில் கடன்களை வழங்குகிறது. எலக்ட்ரிக் கார்கள் வாங்குவதற்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 8.60% சதவீமாகும்.
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா: புதிய பெட்ரோல் மற்றும் டீசல் கார்களை வாங்குவதற்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 8.80 சதவீதத்தில் இருந்து தொடங்குகிறது. எலக்ட்ரிக் காருக்கு 8.70 சதவீத வட்டியில் கடன் வழங்கப்படுகிறது.
கனரா பேங்க்: கனரா பேங்கில் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் கார்களை வாங்குவதற்கு ஆண்டுக்கு 8.75 சதவீதத்திலிருந்து கடன் வழங்கப்படுகிறது. அதே சமயம் எலக்ட்ரிக் ஆட்டோமொபைல் வாங்குவதற்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 8.70 சதவீதத்தில் தொடங்குகிறது.
பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா: இந்த வங்கியில் கார் கடன்கள் 8.70 சதவீத வட்டி விகிதத்தில் தொடங்குகிறது.
பஞ்சாப் நேஷனல் பேங்க்: புதிய பெட்ரோல் அல்லது டீசல் ஆட்டோமொபைல் வாங்குவதற்கு ஆண்டுக்கு 8.80 சதவீதத்திலிருந்து லோன்கள் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் எலக்ட்ரிக் வாகனம் வாங்குவதற்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 8.75 சதவீதத்தில் தொடங்குகிறது.
சவுத் இந்தியன் பேங்க்: இந்த பேங்கில் ஆண்டுக்கு 8.75 சதவீதத்திலிருந்து கார் கடன்கள் வழங்கப்படுகின்றன.
ஐடிபிஐ பேங்க்: இந்த பேங்கில் ஆண்டுக்கு 8.75 சதவீதத்திலிருந்து 9.40 சதவீதம் வரை கார் லோன்கள் வழங்கப்படுகின்றன.
வாடிக்கையாளர்கள் மேற்கண்ட வங்கிகளில் கார் கடன் வாங்கினால், 8.85 சதவீதம் முதல் 9.40 சதவீதம் வரை வட்டி விகிதத்தில் கடன் பெறலாம்.
பேங்க் ஆஃப் பரோடா: பேங்க் ஆஃப் பரோடாவில் கார் கடனுக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 9 சதவீதத்தில் தொடங்கி 12.65 சதவீதம் வரை இருக்கும்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா: புதிய பெட்ரோல் அல்லது டீசல் ஆட்டோமொபைல் வாங்க 9.15 சதவீதத்திலிருந்து கடன்களை வழங்குகிறது. எலக்ட்ரிக் ஆட்டோமொபைல் வாங்குவதற்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 9.05 சதவீதத்தில் தொடங்குகிறது.
More From GoodReturns

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications