சென்னை: அனைவருக்கும் தங்களின் கனவு வீட்டை வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் சிலரிடம் அதற்கான பட்ஜெட் இல்லாததால் வீட்டுக் கடன் வாங்க முடிவெடுத்து இருப்பீர்கள். எனவே, வீட்டுக் கடனை வாங்கும் முன்பு வட்டி விகிதங்களை ஒப்பிட்டுப் பார்ப்பது நல்லது. இந்தப் பதிவில் பல்வேறு வங்கிகள், வீட்டுக் கடன்களுக்கு வழங்கும் வட்டி விகிதங்களைப் பார்ப்போம்.
எல்லோருடைய வாழ்விலும் வீட்டுக் கடன் வாங்குவது என்பது ஒரு முக்கியமான மைல்கல் ஆகும். அதனை சட்டென்று முடிவெடுத்து கடனை வாங்கி விட முடியாது. ஏனென்றால், வீட்டுக்கடன் ஒரு தனி நபர் எடுக்கும் மிகப்பெரிய கடனாகும். வட்டி விகிதத்தில் ஒரு சிறிய வித்தியாசம் ஏற்பட்டாலும் நீங்கள் அதற்குப் பிறகு EMI செலுத்த வேண்டிய 10 முதல் 15 ஆண்டுகள் வரை அது பாதிக்கலாம். எனவே வீட்டுக் கடனை வாங்கும் முன்பு வட்டி விகிதங்களை ஒப்பிட்டுப் பார்ப்பது நல்லது.

சில வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள், சிறந்த வட்டி விகிதங்களை வீட்டுக் கடன்களுக்கு வழங்கி வருகிறது. அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து சிறந்த வட்டி விகிதத்துடன் கடன் வழங்கும் வங்கியைத் தேர்ந்தெடுக்கலாம்.
பொதுத்துறை வங்கிகள் வீட்டுக் கடன்களுக்கு வழங்கும் வட்டி விகிதங்கள்:
1. யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா: 8.35 சதவீதம் - 10.90 சதவீதம்.
2. பாங்க் ஆஃப் பரோடா: 8.40 சதவீதம் முதல் 10.90 சதவீதம்.
3. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா: 8.50 சதவீதம் முதல் 9.85 சதவீதம்.
4. பஞ்சாப் நேஷனல் பேங்க்: 8.40 சதவீதம் முதல் 10.85 சதவீதம்.
5. பேங்க் ஆஃப் இந்தியா: 8.40 சதவீதம் முதல் 10.85 சதவீதம்.
6. கனரா பேங்க்: 8.50 சதவீதம் முதல் 11.25 சதவீதம்.
7. UCO பேங்க்: 8.45 சதவீதம் முதல் 10.30 சதவீதம்.
8. பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா: 8.35 சதவீதம் முதல் 11.15 சதவீதம்.
9. இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்: 8.40 சதவீதம் முதல் 10.6 சதவீதம்.
10. சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா: 8.45 சதவீதம் முதல் 9.80 சதவீதம்.
தனியார் துறை வங்கிகள் வீட்டுக் கடன்களுக்கு வழங்கும் வட்டி விகிதங்கள்:
1. சிட்டி யூனியன் பேங்க்: 8.25 சதவீதம் முதல் 10.50 சதவீதம்.
2. HSBC பேங்க்: 8.45 சதவீதத்தில் இருந்து வட்டி விகிதங்களை வழங்குகிறது.
3. கர்நாடகா பேங்க்: 8.50 சதவீதம் முதல் 10.62 சதவீதம்.
4. தமிழ்நாடு மெர்கன்டைல் பேங்க்: 8.60 சதவீதம் முதல் 9.95 சதவீதம்.
5. கோடக் மஹிந்திரா பேங்க்: 8.70 சதவீதம் முதல் வட்டி விகிதங்களை வழங்குகின்றன.
6. சவுத் இந்தியன் பேங்க்: 8.70 சதவீதத்தில் இருந்து வட்டி விகிதங்களை வழங்குகிறது.
7. பந்தன் பேங்க்: 9.16 சதவீதம் முதல் 15.00 சதவீதம்.
8. RBL பேங்க்: 8.90 சதவீதத்திலிருந்து வட்டி விகிதங்களை வழங்குகிறது.
9. ஹச்டிஎஃப்சி பேங்க்: 9.40 சதவீதம் முதல் வட்டி விகிதங்களை வழங்குகின்றன.
10. CSB பேங்க்: 10.73 சதவீதம் முதல் 12.58 சதவீதம்.
நிதி நிறுவனங்கள் வீட்டுக் கடன்களுக்கு வழங்கும் வட்டி விகிதங்கள்:
1. எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ்: 8.35 சதவீதம் முதல் 10.75 சதவீதம்.
2. பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ்: 8.50 சதவீதத்தில் இருந்து வட்டி விகிதத்தை வழங்குகிறது.
3. PNB ஹவுசிங் ஃபைனான்ஸ்: 8.50 சதவீதம் முதல் 14.50 சதவீதம்.
4. SMFG இந்தியா ஹோம் ஃபைனான்ஸ்: 10.00 சதவீதம் முதல் வட்டி விகிதங்களை வழங்குகிறது.
5. ஐசிஐசிஐ ஹோம் ஃபைனான்ஸ்: 9.20 சதவீதத்தில் இருந்து வட்டி விகிதங்களை வழங்குகிறது.
More From GoodReturns

ரெப்போ வட்டியை விடுங்க!! RBI வெளியிட்ட இந்த அறிவிப்ப கவனிச்சீங்களா? கடன் வாங்குனவங்களுக்கு நிம்மதி!!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?



Click it and Unblock the Notifications