ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவற்றின் ரீசார்ஜ் திட்டத்தின் விலை உயர்வு காரணத்தினால் BSNL அதிகளவில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் ஜியோ, வோடபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் ஆகிய டெலிகாம் நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டண உயர்வை அறிவித்தன. இதனால் பலரும் தங்களுடைய எதிர்ப்பை சோசியல் மீடியா தளங்களில் பகிர்ந்து வந்தனர். மேலும் பலர் தங்களுடைய சிம் கார்டுகளை ஜியோவில் இருந்து BSNL-க்கு மாற்றுவது குறித்து பரிசீலித்து வந்தனர். சிலருக்கு இன்னும் எந்த டெலிகாம் நிறுவனம் சிறந்த ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகிறது என்பது தெரியாமல் உள்ளது. எனவே இந்த பதிவில் சில டெலிகாம் நிறுவனங்களின் ரீசார்ஜ் திட்டத்தை ஒப்பிட்டுப் பார்த்து அவற்றில் எது சிறந்த திட்டத்தை வழங்குகிறது என்பதைப் பார்ப்போம்.
BSNL ஆப்பரேட்டருக்கு மக்கள் அதிக ஆதரவு தருவதாக தற்போது சமூக ஊடகங்களின் வாயிலாக தெரிகிறது. ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவற்றின் சமீபத்திய விலை உயர்வுக்குப் பிறகு, பல பயனர்கள் அரசுக்கு சொந்தமான BSNL சிம்களுக்கு மாறி வருகின்றனர்.

மற்ற நிறுவனங்களின் விலை 25 சதவீதம் அதிகரித்துள்ளது. நீண்ட கால திட்டங்கள் அல்லது வருடாந்திர திட்டங்களில் மிகப்பெரிய விலை வித்தியாசத்தை நம்மால் காண முடியும். BSNL-இன் 1 வருட திட்டத்தை மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்போம்.
BSNL ரூ.2,395 பிளான்: இந்தத் திட்டத்தின் செல்லுபடி காலம் 395 நாட்கள். மேலும் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதற்கு அன்லிமிடெட் கால் வசதி வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 100 SMS வரை அனுப்பிக் கொள்ளலாம்.
உண்மையில் மற்ற நிறுவனங்களின் வருடாந்திர திட்டங்களை விட BSNL-இல் கிட்டத்தட்ட ஒரு மாதம் கூடுதலாக செல்லுபடியாகும். ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் உடன் ஒப்பிடும்போது BSNL-இன் டேட்டா திட்டங்கள் மலிவானவை. ஆனால் 4G, 5G சேவைகளில் மற்ற நிறுவனங்கள் முன்னிலையில் உள்ளது. மேலும் BSNL-இன் நெட்வொர்க் கிடைப்பதில் சில இடங்களில் பிரச்சனை உள்ளது
ஏர்டெல் ரூ.3,599 பிளான்: இந்தத் திட்டத்தின் செல்லுபடி காலம் 365 நாட்கள். ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதற்கு அன்லிமிடெட் கால் வசதி வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 100 SMS வரை அனுப்பிக் கொள்ளலாம்.
5G இணைப்பைப் பெறும் பகுதியில் வசிக்கும் பயனர்களுக்கு இந்தத் திட்டம் பெரிதும் உதவிகரமானதாக உள்ளது.
BSNL ஐ விட ஏர்டெல் விலை அதிகம். BSNL உடன் ஒப்பிடும்போது, ஏர்டெல் திட்டங்களின் விலை கிட்டத்தட்ட 50% அதிகமாகும் . இருந்தாலும் இது 5G நெட்வொர்க் போன்ற சில நன்மைகளை பெற்றுள்ளது. ஏர்டெல் அனைத்து திட்டங்களிலும் ஒரு நாளைக்கு 2ஜிபி அல்லது அதற்கு மேற்பட்ட டேட்டாவுடன் வரம்பற்ற 5ஜி சேவையை வழங்குகிறது. 5ஜி மொபைல்களை பயன்படுத்தும் பயனர்களுக்கு இது நல்ல வசதியாக இருக்கும்.
ரிலையன்ஸ் ஜியோ ரூ 3,599 பிளான்: இந்தத் திட்டத்தின் செல்லுபடி காலம் 365 நாட்கள். இதில் ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதற்கு அன்லிமிடெட் கால் வசதி வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 100 SMS வரை அனுப்பிக் கொள்ளலாம்.
ஜியோ திட்டத்தில் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்கும் வருடாந்திர திட்டங்கள் இல்லை. இதற்கு பதிலாக கூடுதலாக 0.5 ஜிபியுடன் மொத்தமாக 2.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ஏர்டெல் திட்டங்களைப் போலவே, ரிலையன்ஸ் ஜியோ திட்டங்களும் ஒரு நாளைக்கு 2 ஜிபி அல்லது அதற்கு மேற்பட்ட டேட்டாவுடன் வரம்பற்ற 5ஜி டேட்டாவை வழங்குகின்றன.
வோடபோன் ஐடியா ரூ 3,699 பிளான்: இந்தத் திட்டத்தின் செல்லுபடி காலம் 365 நாட்கள். இதில் ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதற்கு அன்லிமிடெட் கால் வசதி வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 100 SMS வரை அனுப்பிக் கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் 1 வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவைப் பெற முடியும்.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications