சர்வதேச அளவில் பொருளாதாரம், தொழில், உற்பத்தி என பல்வேறு பிரிவுகளிலும் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே கடுமையான போட்டி இருந்து வருகிறது. ஆசிய பிராந்தியத்தில் வலிமை மிக்க நாடு சீனாவா அல்லது இந்தியாவா என போட்டி போட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் பொருளாதார அடிப்படையில் பார்க்கும்போது சீனா தான் என்றும் முன்னிலையில் இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது.
Rajesh Sawhney ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலின் முன்னாள் மாணவர் மற்றும் லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸில் பயின்றவர். இவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் இந்திய பொருளாதாரத்தின் தற்போதைய நிலை என்ன சீன பொருளாதாரத்தின் தற்போதைய நிலை என்ன அடுத்த சில ஆண்டுகளில் இந்த இரு நாடுகளும் எவ்வளவு வளர்ச்சி அடையும் என்பதை விளக்கி இருக்கிறார்.

இந்தியா 2027 ஆம் ஆண்டில் 5 டிரில்லியன் டாலர்கள் கொண்ட பொருளாதார நாடாக மாறும், அவ்வாறு மாற வேண்டும் என்றால் அதற்கு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஒவ்வொரு ஆண்டும் 12 சதவீதத்திற்கு மேல் இருக்க வேண்டும் எனக் கூறுகிறார். அப்பொழுது தான் நம்முடைய பொருளாதாரத்தில் ஒரு டிரில்லியன் டாலரை சேர்க்க முடியும் எனக் கூறியிருக்கிறார். ஆனால் தற்போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் கடந்த 10 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது சராசரியாக 6-8 சதவீதம் வரை தான் இருக்கிறது எனக் கூறியிருக்கிறார்.
இந்தியா 3 டிரில்லியன் டாலரில் இருந்து 4 டிரில்லியன் டாலர் பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக மாறுவதற்கு மூன்றிலிருந்து நான்கு ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. அதே நேரத்தில் சீன பொருளாதாரம் இந்தியாவை விட பல மடங்கு வளர்ச்சி அடைந்திருக்கிறது எனக் கூறியிருக்கிறார்.
இந்தியாவில் தொழில் தொடங்குவதை எளிமைப்படுத்தும் வகையில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும், வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்க வேண்டும், மேலும் தொழில் முனைவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
இந்தியாவை பொருத்தவரை 2025 ஆம் ஆண்டில் அதன் ஜிடிபியில் 383 பில்லியன் டாலர்களை சேர்க்கும் என சர்வதேச நாணய நிதியமான ஐ எம் எஃப் கூறுகிறது. அவ்வாறு நிகழ்ந்தால் இந்திய பொருளாதாரம் மிகப் பெரிய சாதனையை எட்டிய ஆண்டாக 2025 ஆம் ஆண்டு இருக்கும். ஆனால் மத்திய அரசு 2025 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.5% ஆகத்தான் இருக்கும் என கணித்துள்ளது.
1980ஆம் ஆண்டு இந்தியாவின் ஜிடிபி 18,632.86 கோடி அமெரிக்க டாலர்கள், சீனாவின் ஜிடிபி 19,114.92 கோடி அமெரிக்க டாலர்கள். அதுவே 2023 ஆண்டு சீனாவின் ஜிடிபி 17.79 லட்சம் கோடி டாலர்கள், இந்தியாவின் ஜிடிபி 3.57 லட்சம் கோடி டாலர்கள் ஆகும். சீனா மற்றும் இந்தியா இரண்டு நாடுகளின் பொருளாதார வளர்ச்சியையும் கடந்த காலத்தோடு ஒப்பிட்டு பார்த்தால் சீனாவின் வளர்ச்சி பிரம்மிக்க வைப்பதாக இருக்கும்.
சீனா 1980 இல் இருந்து தற்போது வரை கிட்டத்தட்ட 15 ஆண்டுகளில் அதன் வளர்ச்சி 10 சதவீதத்திற்கும் மேல்தான் இருந்திருக்கிறது. குறிப்பாக 1983 ஆம் ஆண்டிலிருந்து 1995ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இருக்கும் 13 ஆண்டுகளில் 9 ஆண்டுகள் சீன பொருளாதாரம் இரட்டை இலக்க வளர்ச்சி கொண்டதாகவே இருந்திருக்கிறது. ஆனால் இந்தியா இதுவரை ஒரு முறை கூட இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டவில்லை. அதிகபட்சமாக 1988 ஆம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9.6 சதவீதமாக இருந்தது அதன் பிறகு 2021 ஆம் ஆண்டு இந்திய பொருளாதாரம் 9.7 சதவீதமாக வளர்ச்சி அடைந்தது.
2029 ஆம் ஆண்டில் சீனாவின் ஜிடிபி இந்தியாவின் ஜிடிபி-ஐ விட நான்கு மடங்கு அதிகமாக இருக்கும். இந்தியா சீனாவின் வளர்ச்சி அளவுக்கு ஈடுகட்ட வேண்டுமென்றால் இந்தியாவின் பொருளாதாரம் 32 சதவீத வரை வளர்ச்சி அடைய வேண்டுமாம்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications