அமேசான், பிளிப்கார்ட்டுக்கு செக் வைத்த சிசிஐ.. ஆழ்ந்த தள்ளுபடிகளை பற்றி விசாரிக்க உத்தரவு.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: பிரபல ஈ காமர்ஸ் நிறுவனங்களான அமேசான் பிளிப்கார்ட் நிறுவனங்கள் தொடர்ந்து அதிகப்படியான ஆழ்ந்த தள்ளுபடிகளை தொடர்ந்து வழங்கி வருவதாக கூறப்படுகிறது.

இது இந்திய சிறு குறு வர்த்தகத்தகர்களிடையே பெரும் சல சலப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, இந்த நிறுவனங்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்தும் வருகின்றன.

இந்த நிலையில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் ஆழ்ந்த தள்ளுபடிகளை வழங்கி வருகிறதா? என்று விசாரிக்க இந்தியாவின் போட்டி ஆணையம் (சிசிஐ) தனது புலனாய்வு பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அறிக்கை சமர்பிக்க வேண்டும்

அறிக்கை சமர்பிக்க வேண்டும்

இது குறித்து கடந்த திங்களன்று இந்திய போட்டி ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விசாரணை குறித்தான அறிக்கையை 60 நாட்களுக்குள் சமர்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இதில் வேடிக்கை என்னவெனில் இந்த வாரம் அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பேசோஸ் இந்தியாவுக்கு வரவிருக்கும் இந்த சமயத்தில் தெரிவித்துள்ளது கவனிக்கதக்கது.

என்ன சொல்கிறது அமேசான்

என்ன சொல்கிறது அமேசான்

அமேசான் குறித்த குற்றசாட்டுகளுக்கு தீர்வு காணும் வாய்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். மேலும் நாங்கள் எங்கள் செயல்பாடுகளில் நம்பிக்கையோடு உள்ளோம். மேலும் சிசிஐ உடன் முழுமையாக ஒத்துழைப்போம் என்று செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

என்ன சொல்கிறது அமேசான்

என்ன சொல்கிறது அமேசான்

அமேசான் குறித்த குற்றசாட்டுகளுக்கு தீர்வு காணும் வாய்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். மேலும் நாங்கள் எங்கள் செயல்பாடுகளில் நம்பிக்கையோடு உள்ளோம். மேலும் சிசிஐ உடன் முழுமையாக ஒத்துழைப்போம் என்று செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

 பிளிப்கார்ட் இணங்கும்

பிளிப்கார்ட் இணங்கும்

இதே வால்மார்ட்டுக்கு சொந்தமான பிளிப்கார்ட் நிறுவனம் இந்த உத்தரவை மறு ஆய்வு செய்வதாகவும், நிறுவனம் அனைத்து சட்டங்களும் பொருந்தக் கூடியது என்றும், அனைத்து சட்டங்களுக்கும் முழுமையாக சிசிஐ உடன் ஒத்துழைப்போம் என்றும் தெரிவித்துள்ளது.

பிரத்யேக இணையதளம்

பிரத்யேக இணையதளம்

இந்த நிலையில் ஒரு சில ஆன்லைன் விற்பனையாளர்கள் மட்டுமே அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் பிரத்தியேகமாக அறிமுகப்படுத்தப்பட்ட போன்களை விற்பனை செய்கிறார்கள். ஆக பிரத்தியேகமாக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களுக்கும், இணைய வழி தளங்களுக்கும் இடையில் ஒரு பிரத்யேக கூட்டாண்மை இருப்பதாகத் தெரிகிறது என்றும் கூறப்படுகிறது.

இணையத்தில் அறிமுகம்

இணையத்தில் அறிமுகம்

சிசிஐ அறிக்கையில், பிளிப்கார்ட் பிரத்தியேகமாக 67 மொபைல் போன்களையும், அமேசான் 45 மொபைல் போன்களையும் கடந்த 2018ம் ஆண்டில் அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளது. இந்த பிரத்யேக பிராண்டுகள், விற்பனையாளர்களுக்கும் ஆதரவாகவும், அதிக தள்ளுபடி மற்றும் முன்னுரிமை பட்டியல் மூலம் பாதிக்கப்படக்கூடும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. எனினும் இந்த விசாரணைக்கு பின்பே தெரிய வரும் உண்மை என்னவென்பது..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Competition commission of India orders probe against Amazon and flipkart over discount practices

CCI ordered probe against Amazon and flipkart over discounting practices, and it’s says who investigates such cases, to submit their report within 60 days.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X