இன்றைய டிஜிட்டல் உலகில் வேலைபார்க்கும் பெரும்பாலானவர்கள் தங்கள் முன்னர் உள்ள கம்ப்யூட்டர் ஸ்கீரினை நீண்ட நேரம் பார்க்க வேண்டிய சூழலில் உள்ளோம். சமூக வலைத்தளங்கள் போன்ற வேடிக்கையான விஷயங்களை மொபைல் போனிலும், ஓடிடி ஆகியவையும் நம்மை பெரிய ஸ்கிரீன் கொண்ட டிவி-களிலும் மக்களை மூழ்கடிக்கிறது.
கம்ப்யூட்டர்களும் ஸ்மார்ட் போன்களும் நமது வாழ்க்கையை எளிமையாக்கி விட்டபோதிலும் நீண்டநேரம் பயன்படுத்துவதால் நம் கண்களுக்கு ஏற்படும் ஆபத்தை அறியாமல் விட்டுவிடுகின்றோம்.

இவ்வாறு பெரிய ஸ்கிரீன்கள், கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன் ஸ்கிரீன்களால் நமது கண்கள் பாதிக்கப்படுவதை டிஜிட்டல் கண் பிரச்னை அல்லது கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் எனப்படுகிறது.
இந்தப் பாதிப்பினால் கண்களில் வறட்சி, சிவத்தல், அரிப்பு, கண்ணீர் ஒழுகுதல் போன்ற கோளாறுகள் ஏற்படும். கண்களில் எரிச்சல் அல்லது பார்வையில் சிரமம் இருக்கும். இதனால் ஒரு இடத்தைப் பார்ப்பதில் கஷ்டம் இருக்கும். கம்ப்யூட்டர் மற்றும் பிற சாதனங்களை அடிக்கடி பயன்படுத்துவதால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.
ப்ளூ ஸ்கிரீனை நீண்ட நேரம் தொடர்ச்சியாகப் பார்ப்பதால் தெளிவற்ற பார்வை ஏற்படுவதோடு தலைவலியும் வேறு சில பிரச்னைகளும் ஏற்படலாம். கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் பாதிப்பின் அறிகுறிகளை இனி பார்க்கலாம்.
தெளிவற்ற பார்வை: ப்ளூ ஸ்கிரீனை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருப்பதால் ஏதோ ஒன்று உங்கள் பார்வையை மறைப்பது போன்று நீங்கள் அடிக்கடி உணரலாம். கண்ணில் சில வெளிப்புற துகள்கள் உறுத்துவது போல் உங்கள் பார்வையை மங்கலாக்குகிறது.
கண்களில் அயர்ச்சி: நீண்ட தூரம் வாகனம் ஓட்டுவது அல்லது கம்ப்யூட்டர்கள், பிற எலக்ட்ரானிக் சாதனங்களின் ஸ்கிரீன்களை உற்றுப் பார்ப்பது போன்ற நீண்ட கால பயன்பாட்டினால் உங்கள் கண்கள் சோர்வடையும் போது ஏற்படும் ஒரு பொதுவான நோயாகும். இதனால் உங்கள் கண்களில் இருந்து நீர் வழிய ஆரம்பிக்கலாம்.
போதுமான ஓய்வு அல்லது தூக்கம் இல்லாமல் நீண்ட நேரம் ஸ்கிரீனைப் பார்ப்பதால் கண்களைச் சுற்றியுள்ள தசைகள், நரம்புகளுக்கு தீங்கு விளையும், இதன் விளைவாக தலைவலி ஏற்படலாம்.
வறண்ட விழிகள்: டிஜிட்டல் ஸ்கிரீனை நீங்கள் பார்க்கிறீர்கள் என்றால் உங்களது கண் சிமிட்டல்கள் எண்ணிக்கை குறையும். இதனால் கண்களுக்கு இயற்கையாகக் கிடைக்க வேண்டிய வழவழப்பான திரவங்கள் கிடைக்காது. இதனால் உங்களது கண்கள் வறண்டு எரிச்சல் ஏற்படலாம். எனவே அவ்வப்போது டிஜிட்டல் ஸ்கிரீனில் இருந்து உங்களது கண்களை விலக்கி விழிகளுக்கு சற்று ஓய்வு தரவேண்டும்.
கண்களைப் பாதுகாக்கும் வழிமுறைகள்: 20-20-20 விதியை பின்பற்றுக ஒவ்வொரு 20 நிமிடத்துக்கும் 20 நொடிகளுக்கு உங்கள் கண்களுக்கு ஓய்வு கொடுங்கள். இந்த இடைவெளியின்போது டிஜிட்டல் ஸ்கிரீனை பார்க்கக் கூடாது. பின்னர் 20 அடிக்கு அப்பால் உள்ள ஏதாவது ஒரு பொருளை 20 நொடிகளுக்கு உற்றுப் பாருங்கள்.
இதன் விளைவாக உங்களது பாதிப்பு சற்று குறைந்து கண்களில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் கண்களின் தசைகள் நீட்சி பெற்று பிரச்னை தீரும்.
சரியான பிரகாசம்/வெளிச்சம்: உங்களது ஸ்கிரீனின் வெளிச்சம் அல்லது பிரகாசத்தை உங்களது கண்களுக்கு ஏற்றபடி உறுத்தாதவாறு அட்ஜஸ்ட் செய்யுங்கள். கம்ப்யூட்டர், டேப்லெட் போன்ற டிஜிட்டல் ஸ்கிரீனில் ஆன்டி கிளார் ஸ்கிரீன்களைப் பொருத்துங்கள்.
இது உங்கள் கண்களுக்கு அவ்வளவு சிரமத்தைக் கொடுக்காது. அதேபோல் நீங்கள் ப்ளூ லைட் ஃபில்டர்களையும் பயன்படுத்தலாம்.
எர்கோனோமிக் செட்டிங்: உங்களது கம்ப்யூட்டர் அல்லது மொபைலை ஒரு கை தூர இடைவெளியில் வைக்க வேண்டும். இது கண்களில் இருந்து மட்டுமல்லாமல் உங்களது கழுத்து மற்றும் தலையில் இருந்தும் இடைவெளி விட்டு வைக்க வேண்டும்.
Story written by: I.Jayachandran
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications