காண்டம், நீரிழிவு, காசநோய், HIV உட்பட 34 மருந்துகளின் விலை குறைய போகிறது.. NLEM லிஸ்டில் மாற்றம்..!

இந்திய மக்களுக்கு நிறுவனங்களின் போட்டிக்கு மத்தியில் தரமான மருந்துகளைக் குறைந்த விலைக்கு அளிக்க வேண்டும் என்பதற்காக மக்கள் அதிகம் பயன்படுத்தும் மருந்துகளைத் தேசிய அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டு குறைவான விலையில் அளிக்கப்படுகிறது.

NLEM - National List of Essential Medicines இல் சேர்க்கப்பட்டுள்ள மருந்துகளுக்கு, உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளை அரசு நிர்ணயம் செய்யும் உச்சவரம்பு விலைக்குச் சமமாகவோ அல்லது குறைவாகவோ விற்க வேண்டும்.

குறைந்த பட்சம் 1% சந்தைப் பங்கைக் கொண்ட வெவ்வேறு பிராண்டு மருந்துகளின் சந்தை விலைகளின் எளிய சராசரியின் அடிப்படையில் இந்த விலைக் கணக்கீடு செய்யப்படுகிறது.

மருந்துகள்

மருந்துகள்

மக்கள் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பல மருந்துகள், நீரிழிவு நோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் காப்புரிமை பெற்ற காசநோய், எச்.ஐ.வி மற்றும் ஹெபடைடிஸ் சி சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ஆன்டிவைரல் மருந்துகள், ஆணுறைகள் உள்ளிட்ட கருப்பையக சாதனங்கள் தேசிய அத்தியாவசிய மருந்துகளின் (NLEM) சமீபத்திய அறிக்கையில் சேர்த்துள்ளதன் மூலம் இதன் விலை குறைய உள்ளது.

நீரிழிவு எதிர்ப்பு மருந்துகள்

நீரிழிவு எதிர்ப்பு மருந்துகள்

பிரபலமான நீரிழிவு எதிர்ப்பு மருந்துகளான டெனிலிக்ளிப்டின், இன்சுலின் கிளார்கின் ஊசி மற்றும் மெரோபெனெம் மற்றும் செஃபுராக்ஸைம் போன்ற பொதுவான நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் தேசிய அத்தியாவசிய மருந்துகள் 2022 இல் சேர்க்கப்பட்டுள்ளன.

 பிற முக்கிய மருந்துகள்

பிற முக்கிய மருந்துகள்

இந்தப் பட்டியலில் Morphine, Ibrufen, Diclofenac, Paracetamol, Tramadol, Cetirizine, Prednisolone, Snake venom, Carbamazepine, Albendazole, Ivermectin, Amoxicillin போன்ற பல பொதுவாகப் பயன்படுத்தப்படும் மருந்துகளும் அடங்கும்.

தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியல்

தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியல்

முதன்முறையாக, காசநோய் எதிர்ப்பு பெடாகுலின் மற்றும் டெலாமனிட், ஹெச்ஐவி எதிர்ப்பு Dolutegravir மற்றும் ஹெபடைடிஸ் சி daclatasvir போன்ற காப்புரிமை பெற்ற மருந்துகளும் தேசிய அத்தியாவசிய மருந்துகள் 2022 இல் ஒரு பகுதியாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

மன்சுக் மாண்டவியா

மன்சுக் மாண்டவியா

மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா செப்டம்பர் மாதம் திருத்தப்பட்ட NLEM ஐ வெளியிட்டார். 34 புதிய மருந்துகள் சேர்க்கப்பட்டன மற்றும் 26 அத்தியாவசிய மருந்துகளின் புதுப்பிக்கப்பட்ட பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.

என்ன லாபம்

என்ன லாபம்

இதில் மக்களுக்கு என்ன லாபம் எனக் கேட்டால் தற்போது பட்டியலில் சேர்க்கப்பட்ட மருந்துகள் மற்றும் சாதனங்களைத் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) நிர்ணயித்த விலைக்கு மேல் விற்க முடியாது.

பிற முக்கிய மருந்துகழள்

பிற முக்கிய மருந்துகழள்


தற்போது பட்டியலிடப்பட்டுள்ள புதிய மருந்துகளில் அறிக்கையில் டி-அடிக்ஷன் பார்மூலா மருந்துகளான புப்ரெனோர்பின் மாத்திரை, நிகோடின் ரீப்ளேஸ்மென்ட் தெரபி, கார்டியோவாஸ்குலர் டேப்லெட் dabigatran மற்றும் Tenecteplase இன்ஜெக்ஷன் மற்றும் உள்நாட்டு ரோட்டா வைரஸ் தடுப்பூசி ஆகியவையும் அடங்கும்.

பட்டியலிலிருந்து மருந்து நீக்கம்

பட்டியலிலிருந்து மருந்து நீக்கம்


மேலும் இந்த முக்கியமான பட்டியலில் பிரபலமாகப் பயன்படுத்தப்படும் நெஞ்செரிச்சல் மருந்து ரானிடிடின், பிளீச்சிங் பவுடர் மற்றும் stavudine + lamivudine மற்றும் வைட்டமின் சப்ளிமெண்ட் நிகோடினமைடு போன்ற ஆன்டி ரெட்ரோவைரல்கள் உட்பட 26 மருந்துகளைப் பட்டியலிலிருந்து நீக்கவும் NLEM அறிக்கை கோரியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+