சென்னை: இந்தியாவில் குவிக் டெலிவரி சேவைகள் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் 2024-ம் ஆண்டில் இந்திய மக்கள் எப்படி ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் தளத்தில் ஷாப்பி செய்துள்ளார்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டும் ரிப்போட்டை ஸ்விக்கி வெளியிட்டுள்ளது. மளிகைப் பொருட்கள் மட்டுமின்றி அழகு சாதனப் பொருட்கள், பொம்மைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், பர்சனல் கேர், பர்சனல் வெல்னஸ் வரை பல்வேறு பொருட்களை அதன் வாடிக்கையாளர்கள் நாடு முழுவதும் வாங்கியுள்ளனர்ய
குவிக் டெலிவரி துறையில் முன்னணி வகிக்கும் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் 2024 ஆம் ஆண்டு அதன் வாடிக்கையாளரின் ஷாப்பிங் குறித்து சுவாரஸ்யமான தகவல்களை வெளியிட்டுள்ளது.

15 லட்சம் டூ 3 ரூபாய்: மும்பையைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளர், ரு.15 லட்சம் மதிப்பிலான செல்லப்பிராணிகளுக்கான பொருட்களை வாங்கியுள்ளார், இவர் முக்கியமாக நாய் மற்றும் பூனை உணவுப் பொருட்களுக்காக அதிகமாக செலவு செய்துள்ளார். இதேபோல் ஒருவர் வெறும் 3 ரூபாய்க்கு ஷார்ப்னர் வாங்கியுள்ளத மிகவும் குறைவான மதிப்புடைய ஆர்டராக இருந்துள்ளது.
எலக்ட்ரானிக்ஸ்: சென்னை வாடிக்கையாளர் ஒருவர், கேமிங் ஈயர்போன்கள், ஸ்மார்ட் வாட்ச்கள், சமையல் கருவிகள், பர்சனல் கேர் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு ரு.1,25,454 செலவிட்டுள்ளார், இவர் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் அதிகம் வாங்கிய வாடிக்கையாளராக உள்ளார்.
மாம்பழம் பிரியர்: மே மாதம் மாம்பழ பிரியர்களுக்கு மிகவும் சிறப்பான மாதமாக இருந்தது, இதை தொடர்ந்து ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளர் ரு.35,000 மதிப்பிலான மாம்பழங்களை வாங்கியுள்ளார்.
'அந்த' நேரம்: இந்த ஆண்டு தினமும் இரவு 10 மணி முதல் 11 மணி வரை மசாலா சுவை கொண்ட சிப்ஸ், குர்குரே, பல்வேறு சுவை கொண்ட காண்டம்களை இந்திய மக்கள் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட பொருட்கள் என ஸ்விக்கி பட்டியலிட்டுள்ளது. ஒவ்வொரு 140 ஆர்டர்களில் ஒரு sexual wellness பொருட்கள் இருப்பதாக ஸ்விக்கி தெரிவித்துள்ளது.
பண்டிகை காலம்: தீபாவளி அன்று, அகமதாபாத்தைச் சேர்ந்த ஒருவர் ரு.8,32,032 மதிப்பிலான தங்கக் காசுகளை வாங்கியுள்ளார். தீபாவளி பண்டிகையின் போது, இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் ரு.45,00,000 மதிப்பிலான துடைப்பத்தை வாங்கியுள்ளனர். அதே நாளில், டெல்லிவாசிகள் ரு.4,60,000 மதிப்பிலான poker chips-களை வாங்கியுள்ளனர்.
ரக்ஷா பந்தன்: ராகி பண்டிகையின் போது, ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் மூலம் சுமார் 8,00,000 ராகிகள் விநியோகிக்கப்பட்டன. மும்பையைச் சேர்ந்த ஒருவர் 31 ராகிகளை வாங்கியுள்ளார். அன்று "order for others" என்ற பிரிவின் கீழ் 2,85,000 டெலிவரிகள் செய்யப்பட்டன. பண்டிகையின் போது ஒவ்வொரு நிமிடமும் 273 சாக்லேட்டுகள் ஆர்டர் செய்யப்பட்டன.
உள்ளாடை: பெங்களூருவாசிகள் உள் ஆடைகளுக்கு அதிக விருப்பம் காட்டியுள்ளனர். அவர்கள் வாங்கிய உள்ளாடை அளவு ஹைதராபாத் மற்றும் மும்பை வாடிக்கையாளர்கள் வாங்கிய அளவை விட அதிகமாகும்.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications