பெங்களூரின் பிரபலமான கான்ஃபிடன்ட் குரூப் நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சிஜே.ராய் வெள்ளிக்கிழமை மாலை தனது லாங்ஃபோர்ட் சாலை இல்லத்தில் உயிரிழந்தார். வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்திய போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூர் அனேபாலையா பகுதியில் இருக்கும் தனது பர்சனல் அலுவலகத்தில் ராய் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாகக் போலீஸார் உறுதி செய்துள்ளனர். இந்த நிலையில் ராய் வீட்டில் இருந்தவர்கள் காவல் துறைக்கு தெரிவித்தனர். இந்த செய்தி தற்போது பெங்களூர் தொழிற்துறையை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சிஜே.ராய் அன்று மதியம் ரிச்மண்ட் சாலையில் உள்ள தனது அலுவலகத்திற்கு வந்திருந்தார். இப்போது தான் அமலாக்க துறை சோதனை நடந்தது. வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்திக்கொண்டிருந்த நேரத்தில், அவர் தனது அறைக்குள் சென்றார். அங்கு துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார். துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் அலுவலக ஊழியர்களும் அதிகாரிகளும் ஓடிச் சென்று பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் கிடந்திருந்தார்.
மேலும் துப்பாக்கிசுடு சம்பவத்திற்குப் பிறகு அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் நாராயணா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால் மருத்துவர்கள் அவரை இறந்துவிட்டதாக அறிவித்தனர் என நியூஸ் மினிட் தெரிவித்துள்ளது. உடற்கூறாய்வு முடிவுகள் மற்றும் மரண காரணம் குறித்த முழு விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
சிஜே. ராய் கேரள மாநிலம் கொச்சியை பூர்வீகமானவர். கான்ஃபிடன்ட் குரூப் நிறுவனத்தைத் தொடங்கி தென்னிந்தியாவில் பெரும் ரியல் எஸ்டேட் நிறுவனமாக வளர்த்தார். கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பல ரியல் எஸ்டேட் திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். இதுதவிர மலையாள திரைப்படத் தயாரிப்பாளராகவும் இருந்தார். மலையாள ரியாலிட்டி ஷோ பிக் பாஸ் மலையாளத்திற்கு சில சீசன்களில் டைட்டில் ஸ்பான்சராகவும் இருந்தார்.
கான்ஃபிடன்ட் குரூப் வருமான வரித் துறையுடன் நீண்டகால சட்டப் போராட்டத்தில் உள்ளது. வரி மதிப்பீடு, மேல்முறையீடு வழக்குகள் உள்ளிட்டவை இன்கம் டேக்ஸ் அப்பீலேட் டிரிப்யூனல் மற்றும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
இன்று காலையில் சிஜே ராய் அவர்களின் வீடு, அலுவலகம் ஆகியவை அமலாக்க துறையால் சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனை இந்த வழக்குகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
சிஜே. ராய் மரணம் ரியல் எஸ்டேட் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் போலீஸ் விசாரணை தீவிரமடைந்துள்ளது, உடற்கூறாய்வு முடிவுகள் வெளியாகும் வரை மரண காரணம் குறித்து உறுதியான தகவல் இல்லை. இந்த சம்பவம் தொழிலதிபர்களின் பாதுகாப்பு மற்றும் வரி சோதனைகளின் போது ஏற்படும் அழுத்தம் குறித்து புதிய விவாதத்தை தூண்டியுள்ளது.
(தற்கொலை எண்ணங்கள் அல்லது மன உளைச்சல் ஏற்படும் சமயங்களில் உடனடியாக உதவி பெறுவது மிகவும் முக்கியம். தனியாக இருந்து போராட வேண்டிய அவசியமில்லை. உங்களுடன் பேசி ஆதரவளிக்க தயாராக இருக்கும் நிபுணர்கள் உள்ளனர். பின்வரும் எண்களில் தொடர்பு கொள்ளலாம்:
ஹெல்ப்லைன் எண்: 104
மற்றொரு எண்: 044-24640050
இந்த எண்களுக்கு தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்கு உதவி தயாராக உள்ளது. நீங்கள் தனியாக இல்லை.)


Click it and Unblock the Notifications