டெல்லி: இந்திய பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியமாக செபி செயல்படுகிறது. அதாவது நமது பங்குச்சந்தை முதலீடுகள் அது சார்ந்த நிறுவனங்கள் அவற்றுக்கான ஒழுங்குமுறைகள் அனைத்தும் செபியின் கட்டுக்குள் தான் இருக்கிறது. தற்போது செபியின் தலைவராக மாதவி புரி புச் செயல்பட்டு வருகிறார். அண்மை காலமாகவே இவர் மீது காங்கிரஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறது.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான பவன் கேரா, செபி தலைவர் மாதவி மீது புதிதாக ஒரு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். அதாவது மாதவி புரி கேரோல் இன்ஃபோ சர்வீசஸ் என்ற நிறுவனத்திற்கு தன்னுடைய சொத்துக்களை வாடகைக்கு விடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார். இந்த நிறுவனம் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக செபி விசாரணை நடத்தி வரக்கூடிய Wockhardt நிறுவனத்தின் ஒரு கிளை நிறுவனம் என பவன் கேரா குறிப்பிட்டுள்ளார்.

மாதவி புரி கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் செபியின் முழு நேர உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். 2018 ஆம் ஆண்டில் அவர் செபியின் முழு நேர உறுப்பினராக இணைந்ததற்குப் பிறகு தனக்கு சொந்தமான ஒரு இடத்தை கேரோல் இன்ஃபோ சர்வீசஸ் நிறுவனத்திற்கு வாடகைக்கு விடுத்திருக்கிறார். 2018 - 2019-ஆம் ஆண்டில் அவர் வாடகையாக மட்டும் 7 லட்சம் ரூபாயை பெற்றிருக்கிறார்.
இதே சொத்துக்கு 2019-2020 ஆம் ஆண்டில் அவர் 36 லட்சம் ரூபாயை வாடகையாக பெற்று இருக்கிறார். நடப்பு ஆண்டில் அது 46 லட்சம் ரூபாய் என உயர்ந்துள்ளது. அவர் வாடகைக்கு விடுத்திருக்கக்கூடிய நிறுவனம் தற்போது செபியின் விசாரணைக்கு உட்பட்டிருக்கும் ஒரு நிறுவனத்தின் ஒரு கிளை நிறுவனம் என பவன் கேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
அதே போல மாதவி செபியின் முழு நேர இயக்குனராக பதவி ஏற்றதற்கு பிறகு தனக்கு சொந்தமான ஒரு வீட்டினை ஒரு நிறுவனத்திற்கு வாடகைக்கு விடுத்து அதன் மூலம் 2.16 கோடி ரூபாயை வாடகையாக பெற்று இருக்கிறார். செபி விசாரணை நடத்தி வரக்கூடிய ஒரு நிறுவனத்திற்கு செபியின் தலைவர் தனக்கு சொந்தமான இடத்தை வாடகைக்கு விடுக்க வேண்டிய தேவை என்ன? விசாரணை நியாயமான முறையில் நடைபெறுமா? வாடகை தொகை அடுத்தடுத்த ஆண்டுகளில் ஏன் அதிகரித்துள்ளது? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
செபி தலைவர் மீது நாள்தோறும் புதிய புதிய குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார். கோடிக்கணக்கான இந்திய மக்கள் செபி என்ற அமைப்பை நம்பி தான் இருக்கிறார்கள். ஆனால் அந்த அமைப்பின் தலைவர் மீது முறைகேடு குற்றச்சாட்டுகளும் ஊழல் குற்றச்சாட்டுகளும் எழுகின்றன. ஆனால் நாட்டின் பிரதமரோ இந்த குற்றச்சாட்டுகள் குறித்து கவலைப்படவே இல்லை எனக் கூறியுள்ளார். செபி தலைவர் தலைவருடன் தொடர்பு படுத்தப்படும் நிறுவனங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என பிரதமர் மோடி ஏதேனும் ஒப்பந்தம் செய்து இருக்கிறாரா என அவர் வினவியுள்ளார்.
ஏற்கனவே ஹிண்டன்பர்க் அறிக்கையில் அதானி நிறுவன முறைகேடுகளுடன் செபி தலைவருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
Written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications