இன்ஸ்டாகிராமில் விஜய் – ராகுல் காந்தி புகைப்படம், வீடியோ பதிவுகளை முடக்கியதா மத்திய அரசு?

அண்மையில் நடந்த சட்டமன்ற தேர்தலில் விஜய்-இன் தமிழக வெற்றி கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. 108 இடங்களில் வென்ற விஜய்யின் தவெக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.

பெரும்பான்மை நிரூபிக்க 118 இடங்கள் தேவை என்ற சூழலில் திமுக கூட்டணியை உடைத்து கொண்டு காங்கிரஸ் முதல் ஆளாக வந்து விஜய்க்கு ஆதரவு தந்தது. அந்த வகையில் தவெக ஆட்சி அமைத்து விஜய் முதலமைச்சர் ஆவதற்கு முதலில் கை கொடுத்தது காங்கிரஸ் தான். இந்நிலையில் விஜய் முதலமைச்சராக பதவியேற்கும் விழாவுக்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நேரில் வருகை தந்திருந்தார். அப்போது விஜய் மற்றும் ராகுல் காந்தி எடுத்த புகைப்படங்கள், வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராகுல் காந்தி பதிவு செய்திருந்தார்.

இன்ஸ்டாகிராமில் விஜய் – ராகுல் காந்தி புகைப்படம், வீடியோ பதிவுகளை முடக்கியதா மத்திய அரசு?

விஜயின் புதிய பயணத்திற்கு வாழ்த்து கூறி ராகுல்காந்தி இன்ஸ்டாவில் பதிவுகளை வெளியிட்டிருந்தார். ராகுல் - விஜய் இணைந்திருக்கும் படங்கள் கொண்ட அந்த ரீல்ஸை இன்ஸ்டாகிராம் முடக்கியதாக ராகுல்காந்தி தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இதன் பின்னணியில் இருப்பதாக காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது.

இன்ஸ்டாகிராமில் விஜய் – ராகுல் காந்தி புகைப்படம், வீடியோ பதிவுகளை முடக்கியதா மத்திய அரசு?

ராகுல் காந்தியின் இந்த பதிவு ஒரு மணி நேரத்திலேயே 12 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது. அதேவேளையில் வைரலான அந்தப் புகைப்படப் பதிவு 46 மில்லியன் ரீச் பெற்றது. இந்நிலையில் திடீரென இன்ஸ்டாகிராம் விஜய்- ராகுல் சந்திப்பு புகைப்படம் , வீடியோ கொண்ட ரீல்ல்ஸ் காணொளியை முடக்கியதாக கூறி அதற்கான ஸ்கிரீன் ஷாட்டையும் ராகுல் காந்தி தனது இன்ஸ்டாவில் ஸ்டோரியாக பதிவு செய்திருந்தார்.

Also Read

இளைஞர் காங்கிரஸ் பிரிவு நிர்வாகியான ஸ்ரீவத்ஸாவும் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் தளபதி விஜய்யும் இடம்பெற்றிருந்த ரீல்ஸ் மற்றும் புகைப்படப் பதிவை இன்ஸ்டாகிராம் முடக்கியுள்ளது. வைரலான அந்த ரீல் ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் 1.2 கோடி பார்வைகளையும், வைரலான புகைப்படப் பதிவு ஏற்கனவே 4.6 கோடி மக்களையும் சென்றடைந்திருந்தது. ஆனால் திடீரென அதனை முடக்கியுள்ளது இன்ஸ்டாகிராம் . ராகுல் காந்தியின் சமூக ஊடகக் கணக்குகள் நீண்ட காலமாகவே முடக்கப்பட்டுள்ளன என கூறியுள்ளார். இப்படித்தான் இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவர்களின் குரல் ஒடுக்கப்படுகிறது என அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையி இந்த நடவடிக்கையில் மத்திய மின் மற்றும் தகவல் தொழில் நுடபத்துறைக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை என அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராமின் சொந்த உள் அமைப்பு, பதிவுகளைத் தவறுதலாக இந்த பதிவு முடக்கப்பட வேண்டியது என கூறியதே இதற்கு காரணம். தற்போது முடக்கப்பட்ட அந்தப் பதிவுகள் அந்தத் தளத்தில் மீண்டும் மீட்டெடுக்கப்பட்டுள்ளன என பதில் தந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+