கனவு வீடு வாங்குவோருக்கு எச்சரிக்கை.. 10-15% விலை உயர்வு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா தொற்று மூலம் அதிகம் பாதிக்கப்பட்ட துறைகளில் ஒன்றான ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான துறையை வேகமாக வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக மத்திய அரசு பல ஊக்குவிப்புத் திட்டத்தைக் கொண்டு வந்தது, ஆனால் இத்துறைக்குப் பல வகையில் புதிய பிரச்சனைகள் வந்த காரணத்தால் சொந்த வீட்டை வாங்குவோர் 10 முதல் 15 சதவீதம் வரையிலான தொகையைக் கூடுதலாகச் செலவிட வேண்டிய நிலை தற்போது உருவாகியுள்ளது.

 கட்டுமான பொருட்கள் விலை

கட்டுமான பொருட்கள் விலை

ஜனவரி 2020ல் இருந்து கட்டுமான பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் இதே வேளையில் சந்தையில் அதிகளவிலான டிமாண்ட்-ம் உருவானது. ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் வேறு வழி இல்லாமல் அதிகமாக விலைக்கே பொருட்களை வாங்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

 விலை உயர்வு

விலை உயர்வு

கடந்த ஒரு வருடத்தில் மட்டும் டைல்ஸ், பாத்ரூம் பிட்டிங்க்ஸ், எலக்ட்ரிக்கல் பிட்டிங்க்ஸ், மர பொருட்கள் ஆகியவற்றின் விலை சுமார் 20 முதல் 30 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது. இதனால் இந்த விலை உயர்வை சமாளிக்க முடியாத கட்டுமான நிறுவனங்கள் விலை உயர்வை வாடிக்கையாளர்கள் மீது திருப்பியுள்ளனர்.

 10-15% விலை உயர்வு
 

10-15% விலை உயர்வு

இதனால் புதிய கட்டுமான திட்டங்களில் வீடுகளை வாங்குவோர் 10 முதல் 15 சதவீதம் கூடுதலான தொகையைக் கொடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. மேலும் கட்டுமான பொருட்களின் விலை உயர்வு தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தாலும் இனி வரும் காலத்திலும் வீடுகளின் விலை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம்.

 பண்டிகை கால விற்பனை

பண்டிகை கால விற்பனை

இந்தப் பண்டிகை காலத்தில் நாடு முழுவதும் பெரும்பாலான ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அதிகப்படியான தள்ளுபடி சலுகை உடன் வீடுகளை விற்பனை செய்த காரணத்தால் இத்துறை தாறுமாறான விற்பனையைப் பதிவு செய்தது. இதனால் கட்டுமான பொருட்களுக்கான டிமாண்ட் தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தால் கட்டுமான பொருட்களின் விலை குறைவதில் 50:50 சான்ஸ் மட்டுமே உள்ளது.

 விலை சுமை

விலை சுமை

கடந்த 5 முதல் 6 வருடத்தில் வீடு மற்றும் கட்டிடங்களின் விலையில் பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லாத வேளையில் தற்போது ஸ்டீல், சிமெண்ட் மட்டும் அல்லாமல் டைல்ஸ், அலுமினியம், காப்பர், கேஸ் ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளது. இந்த விலை சுமையைக் கண்களை மூடிக்கொண்டு வாடிக்கையாளர் தலையில் கட்டுப்படுகிறது ரியல் எஸ்டேட் நிறுவனங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Construction materials price hiked from Jan 2020: dream home price may up 10-15 percent

Construction materials price hiked from Jan 2020: dream home price may up 10-15 percent
Story first published: Wednesday, November 17, 2021, 20:16 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X