டெல்லி: மார்ச் 2020 மாதத்துக்கான நுகர்வோர் பணவீக்கம் (Consumer Price Inflation - CPI Inflation) அனைத்து இந்திய சராசரி கணக்குகள் இன்று ஏப்ரல் 13, 2019 மாலை, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டு இருக்கிறது.
இனி நாம் பார்க்கப் போவது எல்லாமே அனைத்து இந்திய சராசரிகள் தான்.
கடைசியில் தமிழகத்தின் விவரங்கள் தனியாக விளாவாரியாகப் பார்ப்போம்.
பணவீக்கம்
மார்ச் 2020-க்கான நுகர்வோர் பணவீக்கம் 5.91 சதவிகிதமாக குறைந்து இருக்கிறது. கடந்த மார்ச் 2019-ல் நுகர்வோர் பணவீக்கம் 2.86 சதவிகிதமாக இருந்து இருக்கிறது. பிப்ரவரி 2020-ல் நுகர்வோர் பணவீக்கம் 6.58 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
உணவுப் பணவீக்கம்
மார்ச் 2020-க்கான நுகர்வோர் உணவுப் பணவீக்கம் 8.76 சதவிகிதமாக குறைந்து இருக்கிறது. பிப்ரவரி 2020 காலத்தில் நுகர்வோர் உணவுப் பணவீக்கம் 10.81 சதவிகிதமாக இருந்தது. கடந்த மார்ச் 2019-ல் நுகர்வோர் உணவுப் பணவீக்கம் 0.30 சதவிகிதமாக இருந்து இருக்கிறது.
அனைத்து இந்திய கணக்கீடு
அனைத்து இந்திய மாநிலங்களிலும் சராசரியாக அடிப்படை பொருட்களின் விலைவாசி மாற்றம் மார்ச் 2019 விலைக்கு ஒப்பிட்டு மார்ச் 2020-க்கு மத்திய அரசு கணித்துக் கொடுத்து இருக்கிறது. அவைகளின் பட்டியலைக் கீழே காணலாம்
விலை வாசிப் பட்டியல்
தானியங்கள் 5.30 %
மீன் இறைச்சி 9.15 %
முட்டை 5.56 %
பால் 6.47 %
எண்ணெய் & கொழுப்புகள் 7.54 %
பழங்கள் 3.56 %
காய்கறிகள் 18.63 %
பருப்பு வகைகள் 15.85 %
சர்க்கரை 3.85 %
மசாலா பொருட்கள் 9.82 %
எரிபொருள் 6.59 %
மேலே சொன்னது அனைத்து இந்திய மாநிலங்களுக்கான சராசரி விவரங்கள் மற்றும் விலைவாசி விவரங்கள்.
தமிழகம்
தமிழகத்தில் மார்ச் 2020 மாதத்துக்கான நுகர்வோர் பணவீக்கமும் (CPI Inflation) இந்த அறிக்கையிலேயே வெளியாகி இருக்கிறது. தமிழக மாநிலத்துக்கு மட்டும் எனப் பார்த்தால் மார்ச் 2020-க்கான நுகர்வோர் பணவீக்கம் 6.46 சதவிகிதமாக இருக்கிறது. அனைத்து இந்திய சராசரியான 5.91 சதவிகிதத்தை விட கொஞ்சம் அதிகம் தான்.
கிராமம் & நகரம்
தமிழகத்தின் நகர் புறத்தில் நுகர்வோர் பணவீக்கம் 6.50 சதவிகிதமாகவும், தமிழக கிராம புறங்களில் நுகர்வோர் பணவீக்கம் 6.40 சதவிகிதமாகவும் இருக்கிறது. இந்தியாவிலேயே விலை வாசி அதிகமாக உயர்ந்திருக்கும் இந்திய மாநிலங்கள் பட்டியலில் தமிழகத்துக்கு ஏழாவது இடமாம். நுகர்வோர் விலை வாசி அதிகமாக இருக்கும் மாநிலங்கள் பட்டியலில் தெலுங்கானாவுக்கு முதலிடம். தெலுங்கானாவில் சிபிஐ 8.12 % ஆக இருக்கிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications