மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய புள்ளியியல் அலுவலகம் இன்று நவம்பர் 2019 மாதத்துக்கான நுகர்வோர் பணவீக்கம் குறித்த விவரங்களை வெளியிட்டு இருக்கிறது.
நவம்பர் 2019 மாதத்தில் நுகர்வோர் பணவீக்கம் 5.54 சதவிகிதமாக அதிகரித்து இருக்கிறது. இதே கடந்த நவம்பர் 2018-ல் நுகர்வோர் பணவீக்கம் 2.33 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் 2019-ல் நுகர்வோர் பணவீக்கம் 4.62 சதவிகிதமாக இருந்ததும் ஒரு முறை கவனிக்க வேண்டி இருக்கிறது.

மொத்தமாக நுகர்வோர் பணவீக்கத்தைத் தாண்டி இந்த முறை உணவுப் பணவீக்கம் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது. மறக்க முடியுமா வெங்காயம், முருங்கைக் காயின் விலை ஏற்றத்தை...? நவம்பர் 2019-ல் உணவுப் பணவீக்கம் 10.01 சதவிகிதமாக அதிகரித்து இருக்கிறது. கடந்த நவம்பர் 2018-ல் உணவுப் பணவீக்கம் -2.61 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் 2019-ல் உணவுப் பணவீக்கம் 7.89 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
நவம்பர் 2019-ல் எந்த பொருளுக்கு எவ்வளவு பணவீக்கம் என்கிற பட்டியல்.
தானியங்கள் 3.71 %
இறைச்சி மற்றும் மீன் 9.38 %
முட்டை 6.2 %
பால் மற்றும் பால் சார் பொருட்கள் 3.46 %
எண்ணெய் 2.64 %
பழங்கள் 3.29 %
காய்கறிகள் 35.9 %
பருப்பு வகைகள் 13.9 %
சர்க்கரை 2.0 %
என அத்தியாவசியப் பொருட்களின் பணவீக்கம் அதிகரித்து இருக்கிறது.
இது போக
ஆடைகள் 1.28 %
காலணிகள் 1.37 %
மருத்துவம் 5.49 %
போக்குவரத்து 0.88 %
கல்வி 5.21%
போன்றவைகளுக்கும் பணவீக்கம் அதிகரித்து இருக்கிறது.
தமிழகத்தின் கிராம புறங்களில் நுகர்வோர் பணவீக்கம் 6.22 சதவிகிதமாகவும், தமிழகத்தின் நகர் புறங்களில் நுகர்வோர் பணவீக்கம் 6.36 சதவிகிதமாகவும், ஒட்டு மொத்தத்தில் தமிழகத்தில் நுகர்வோர் பணவீக்கம் 6.26 சதவிகிதமாகவும் இருக்கிறது.

இருப்பதிலேயே ஒடிஸா மாநிலத்தில் தான் நுகர்வோர் பணவீக்கம் 7.23 சதவிகிதம் என விலை அதிகரித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசங்களில் தான் இருப்பதிலேயே மிகக் குறைந்த அளவில் நுகர்வோர் பணவீக்கம் 2.56 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications