உலகம் முழுவதும் பரவலாக மக்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு தகவல் தொடர்பு செயலி தான் வாட்ஸ் அப். இந்த செயலி இல்லாத ஸ்மார்ட்போனே இல்லை எனக் கூறும் அளவிற்கு உலகம் முழுவதும் ஒவ்வொரு நொடியும் கோடிக்கணக்கானவர்கள் இந்த whatsapp செயலியை பயன்படுத்துகிறார்கள்.
சாதாரண ஒரு மெசேஜிங் பிளாட்பார்மாக தொடங்கிய இந்த வாட்ஸ் அப் செயலி பின்னர் வீடியோ கால் வசதி , ஆடியோ வாய்ஸ் வசதி, குரூப் கால் வசதி என பல்வேறு வசதிகளை நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப கொடுத்த வண்ணம் இருக்கிறது . தற்போது வாட்ஸ் அப் ஒரு புதிய வசதியை பரிசோதனை செய்து வருவது தெரிய வந்திருக்கிறது.

அதன்படி உங்களுடைய நம்பரை பகிராமலேயே மற்ற நபர்களை நீங்கள் வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ளக்கூடிய ஒரு சேவையை வாட்ஸ் அப் பரிசோதனை செய்து வருவது தெரிய வந்திருக்கிறது . ஒருவரிடம் வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ள வேண்டுமென்றால் அந்த நபருடைய மொபைல் எண் நமக்கு கட்டாயம் தேவை. மொபைல் எண் அடிப்படையில் தான் நம் வாட்ஸ் அப் வாயிலாக குறிப்பிட்ட நபரை தொடர்பு கொள்ள வேண்டும். ஆனால் கூடிய விரைவில் வாட்ஸ் அப்பில் யூசர் நேம் என்ற ஒரு புதிய சேவை அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
இந்த புதிய சேவையின் படி ஒரு நபரின் போன் நம்பர் இல்லாமல் அவருடைய யூசர்நேமை கொண்டே நாம் அவருடன் வாட்ஸப் வாயிலாக தொடர்பு கொள்ள முடியும். எனவே நாம் முகம் தெரியாத நபர்களிடம் வாட்ஸ் அப் நம்பரை கொடுத்து விட்டு அதைப் பற்றியே எண்ணி பயந்து கொண்டு இருக்க வேண்டிய தேவை கிடையாது. யூசர் நேம் மற்றும் நான்கு டிஜிட் கொண்ட யூசர் நேம் கீ என்ற இரண்டு வசதிகளை கொண்டு வருவதற்கு whatsapp திட்டமிட்டு இருக்கிறதாம்.
யாரிடமேனும் நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டும் என நினைத்தால் உங்களுடைய மொபைல் எண்ணை கொடுக்காமல் இந்த யூசர்நேம் அல்லது இந்த யூசர் நேம் கீ எனப்படும் இந்த நான்கு இலக்க எண்ணையோ கொடுத்தால் போதும் . அவர்கள் அதனை உள்ளீடு செய்து நேரடியாக உங்களை வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்வார்கள் . உங்களுடைய மொபைல் எண் அவர்களுக்கு தெரியாது. தனிநபர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய வகையில் இப்படி ஒரு வசதியை வாட்ஸ் அப் பரிசோதனை செய்து வருகிறது.
மேலும் ஜிமெயிலில் எப்படி நாம் நமக்கென gmail மின்னஞ்சல் பெயர்களை தேர்ந்தெடுக்கிறோமோ அதேபோல வாட்ஸ் அப்பிலும் நமக்கான யூசர்நேமை நாம் தேர்ந்தெடுத்து ரிசர்வ் செய்து கொள்வதற்கான வசதியையும் வாட்ஸ் அப் பரிசோதனை செய்து வருகிறது. இதன்படி ஒரே பெயர் கொண்ட நபர்கள் பலர் இருந்தால் அனைவருமே அதே பெயரை தானே யூசர்நேம்மாக பயன்படுத்துவார்கள். எனவே முன்கூட்டியே நாம் நம்முடைய பெயரைக் கொடுத்து வாட்ஸ் அப் யூசர்நேமாக ரிசர்வ் செய்து கொள்ளலாம். விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வர இருக்கிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications