மும்பை: சமூக ஊடகங்களில் தற்போது கன்டன்ட் கிரியேட்டர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வருகிறது. இவ்வாறு வீடியோக்களை ரெக்கார்ட் செய்து பதிவிடுபவர்கள் அதிக பார்வைகளை பெற வேண்டும் என்பதற்காக சில சமயங்களில் சில வித்தியாசமான முயற்சிகளை எடுப்பார்கள். அவ்வாறு மும்பையில் முகேஷ் அம்பானியின் விட்டிற்குள் நுழைந்து வீடியோ வெளியிட முயன்ற இருவர் அம்பானி வீட்டு செக்யூரிட்டி ஊழியர்களால் தடுக்கப்பட்டு பல்பு வாங்கினர்.
இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரும் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவருமான முகேஷ் அம்பானிக்கு சொந்தமான பிரம்மாண்டமான வீடு மும்பையில் இருக்கிறது. அன்டிலியா என அழைக்கப்படும் இந்த நவீன வசதிகள் கொண்ட ஆடம்பர குடியிருப்பில் அத்தனை எளிதாக யாரும் நுழைந்து விட முடியாது. இந்த வீட்டை சுற்றி 24 மணி நேரமும் பாதுகாவலர்கள் இருப்பார்கள்.

இந்த நிலையில் கன்டன்ட் கிரியேட்டர்கள் இருவர் அதிரடியாக முகேஷ் அம்பானியின் அன்டிலியா குடியிருப்புக்குள் நுழைய முயற்சி செய்து தோல்வி அடைந்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு வைரல் ஆகியுள்ளது.
பென் சுமடிவீரா (Ben Sumadiwira) மற்றும் அரிஸ் ஈகர் (Aris Yeager) ஆகிய இருவரும் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானியின் அன்டிலியா குடியிருப்புகள் நுழைய முயன்றனர். அப்போது அங்கு இருந்த பாதுகாவலர்கள் அவர்களை அனுமதிக்காமல் வெளியேற்றினர் .
நாங்கள் அம்பானியின் நண்பர்கள் அவரை சந்திக்க வந்திருக்கிறோம் என அவர்கள் என்னென்னவோ கூறி பார்த்தனர் இருந்தாலும் பாதுகாவலர்கள் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. இந்த வீடியோ சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டு சுமார் 46 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது , 10 லட்சம் பேர் இதனை லைக் செய்துள்ளனர், 8000-க்கும் அதிகமானவர்கள் இதில் கமெண்ட் செய்துள்ளனர்.
இருவரும் அங்கிருக்கும் பாதுகாவலர்களோடு தங்கள் பேசியதை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். ஆனந்த் மற்றும் ராதிகா மெர்சட்டின் திருமணத்தில் தாங்கள் கலந்து கொண்டதாகவும் அப்போது முகேஷ் அம்பானி தங்களை அன்டிலியா குடியிருப்பில் வந்து சந்திக்குமாறு அழைப்பு விடுத்தார் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
இருந்தாலும் பாதுகாவலர்கள் அதனை ஏற்கவில்லை. நாங்களும் வசதி படைத்தவர்கள் தான் அம்பானி குடும்பத்துடன் நெருக்கமானவர்கள் தான் என அவர்கள் கூறுகின்றனர் பாதுகாவலர்கள் அவற்றை நம்பவில்லை.
நாங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம் என அவர் எங்களிடம் கூறி இருக்கிறார், நீங்களே அவரிடம் இங்கு இருந்து தொலைபேசியில் நாங்கள் வந்திருக்கிறோம் என சொல்லிப் பாருங்கள் என இருவரும் கூறுகின்றனர்.
அதற்கு அம்பானி குடும்பத்தினர் தற்போது வீட்டில் இல்லை என்றும் வெளிநாட்டில் இருக்கிறார் என்றும் பாதுகாவலர்கள் பதிலளிக்கின்றனர். வீட்டிற்கு வெளியே காத்திருக்கிறோம் என இருவரும் கூறிய போது இது வீடு உணவகம் கிடையாது எனக் கூறி பாதுகாவலர்கள் அவர்களை அங்கிருந்து அப்புற படுத்துகின்றனர்.
Story written by: Devika
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications