IT ஊழியர்களுக்கு அடுக்கடுக்காய் வரும் பிரச்சனைகள்.. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அதிகரிக்கும் பிரச்சனை!

மும்பை: கொரோனாவின் தாக்கத்தினால் உலகமே சற்று நிலைகுலைந்து போய் தான் உள்ளது. அதிலும் குறிப்பாக அமெரிக்கா மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது எனலாம்.

பொதுவாக வல்லரசு நாடான அமெரிக்கா பொருளாதாரத்தில் மட்டும் அல்ல, கொரோனாவின் தாக்கத்திலும் முதலிடம் வகித்து வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவில் லாக்டவுன் காரணமாக ஏராளமான நிறுவனங்கள், வர்த்தக மையங்கள், உற்பத்தி ஆலைகள் என பலவும் மூடப்பட்டுள்ளன.

அதிகரிக்கும் வேலையிழப்பு

அதிகரிக்கும் வேலையிழப்பு

அமெரிக்காவின் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியில் லட்சக்கணக்கானோர் வேலையிழந்து தவித்து வருகின்றனர். இதற்கு சரியான உதாரணம் தான் அங்கு வரலாறு காணாத அளவு வேலையின்மை நலனுக்காக அதிகளவில் விண்ணப்பித்து வருகின்றனர். இந்த நிலையில் தான் அமெரிக்காவில் மற்ற வெளி நாட்டினர் குடியேற தற்காலிக தடை விதிக்கப் போவதாக கடந்த ஏப்ரல் 21 அன்று அறிவித்தார்.

பணி இழப்பு ஏற்படலாம்

பணி இழப்பு ஏற்படலாம்

அதன் பின்னர் அமெரிக்காவில் நிலவி வரும் நிலைத் தன்மையற்ற பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல் என பல காரணங்களால், ஐடி நிறுவனங்கள் ஒப்பந்த செலவுகளை குறைத்து வருகின்றன. இதனால் செலவினை குறைக்கும் வகையில் பல ஆயிரம் ஊழியர்களின் வேலைகளை குறைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

H-1B விசா ஊழியர்களின் வேலை

H-1B விசா ஊழியர்களின் வேலை

இதனால் H-1B விசா வைத்திருக்கும் ஊழியர்களின் வேலைகள் அதிக ஆபத்தில் உள்ளன. அமெரிக்காவில் பணிபுரிய வெளிநாட்டினருக்கு ஹெச்-1 பி விசா வழங்கப்படுகிறது. இந்த விசாவில் குறிப்பிட்ட காலம் தங்கி பணியாற்றினால் நிறுவனத்தின் பரிந்துரையின் பேரில் கிரீன் கார்டும், பின்னர் நிரந்தர குடியுரிமையும் பெறலாம்.

அதிகரித்து வரும் பிரச்சனை

அதிகரித்து வரும் பிரச்சனை

ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் பின் அதிரடி நடவடிக்கைகளால், வெளி நாட்டினருக்கு சோதனைக் காலம் தொடங்கியது எனலாம். ஹெச்-1 பி விசாவிற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த விசாவில் பணியாற்றுவோருக்கும் பிரச்னைகள் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை ஹெச்-1 பி விசா மூலம் அமெரிக்காவில் இருப்பவர்கள் வேறு நிறுவனங்களுக்கு மாற்றிக் கொள்ளலாம்.

குறிப்பிட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி

குறிப்பிட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி

ஆனால் இப்போது விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. முன்பு அனைத்து வேலைகளுக்கும் ஹெச்-1 பி விசா வழங்கப்பட்டது. ஆனால் தற்போது உயர் தகுதி வேலைகள் என பட்டியல் உருவாக்கப்பட்டு அதில் உள்ள பணிகளுக்கு மட்டுமே ஹெச்-1 பி விசா வழங்க அனுமதியளிக்கப்பட்டு வருகிறது.

வேலையை மாற்றம் செய்து கொள்ளலாம்

வேலையை மாற்றம் செய்து கொள்ளலாம்

மேலும் இதுவரையில் விசாவில் வரும் ஒருவர் பணியாற்றி வரும் ஒரு நிறுவனத்தில் இருந்து அதே மாதிரியான வேலையில் மற்றொரு நிறுவனத்திற்கு மாறிக்கொள்ள முடியும். ஆனால் தற்போது அதுவும் மாற்றப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இரு நிறுவனங்களிலும் அந்த வேலை உயர் தகுதி பட்டியலில் இருந்தால் மட்டுமே மாறிக் கொள்ள முடியும் எனவும் விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளது.

ஹெச் 1 பி விசாவை தடை செய்ய திட்டம்

ஹெச் 1 பி விசாவை தடை செய்ய திட்டம்

இந்த நிலையில் அமெரிக்காவில் புதிய குடியேற்றம் கிரீன் கார்டு வழங்குவது 60 நாட்களுக்கு நிறுத்தப்படும் என்றும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு டிரம்ப் கையெழுத்திட்டார். அது மட்டும் அல்ல அமெரிக்காவில் பல லட்சம் பேர் வேலையின்மையால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்காவில் ஹெச்1 பி விசாவையும் தற்காலிகமாகத் தடை செய்ய நிர்வாகக் ரீதியாக உத்தரவு பிறப்பிக்க டிரம்ப் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

ஒப்பந்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படலாம்

ஒப்பந்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படலாம்

மேலும் பரவி வரும் கொரோனா உலகளாவிய பூட்டுதல்கள் வணிகங்களை தீவிர செலவு மேம்படுத்தல் நடவடிக்கைகளை எடுக்க அச்சுறுத்தியுள்ளது. இது பல தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் தங்கள் பணியாளர் செலவினை குறைக்க மதிப்பீடு செய்கின்றன. நிரந்தர ஊழியர்களின் வேலைகளைப் பாதுகாக்க அதிக தேவை உள்ள நிலையில் ஒப்பந்த ஊழியர்கள் முதலில் பணி நீக்கம் செய்யப்படலாம்.

60 நாட்கள் மட்டுமே அவகாசம்

60 நாட்கள் மட்டுமே அவகாசம்

மேலும் ஹெச்1பி விசா இல்லாமல் அமெரிக்காவில் 60 நாட்கள் மட்டுமே வசிக்க முடியும். அதற்குள் அவர்கள் புதிய வேலையினை தேடிக் கொள்ள அவகாசம் வழங்கப்படும். ஆனால் தற்போது பலர் 60 நாட்கள் முடிந்தும் அமெரிக்காவிலேயே தங்கும் நிலையில் உள்ளனர். அவர்கள் புதிய வேலையினையும் தேடிக் கொள்ள முடியாமல், தாய் நாட்டுக்கும் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

அதிக ஊழியர்கள் ஐடி ஊழியர்கள்

அதிக ஊழியர்கள் ஐடி ஊழியர்கள்

கடந்த மார்ச் காலாண்டிலேயே டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் மற்றும் இன்ஃபோசிஸ் லிமிடெட் ஆகியவை முறையே 7.8% மற்றும் 7.4% என செலவுகளைத் குறைவாக அறிவித்தன. ஆய்வாளர்களின் கூற்றுப்படி, விப்ரோவின் வருவாய் செலவில் கிட்டதட்ட 21% துணை ஒப்பந்த செலவு ஆகும். இப்படி நிறுவனங்கள் செலவினை குறைக்க ஒப்பந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்படலாம். ஹெச்1பி விசாக்களில் அமெரிக்காவில் அதிகம் உள்ள ஊழியர்களில் ஐடி துறையில் தான் உள்ளனர்.

குடியுரிமைக்காக விண்ணப்பம்

குடியுரிமைக்காக விண்ணப்பம்

ஆக இதனால் அதிகம் பாதிக்கப்பட போவது ஐடி ஊழியர்களே. சமீபத்திய அறிக்கையின் படி கிட்டதட்ட 2,75,000 பேர் குடியுரிமைக்காக பதிவு செய்தார்கள் என்றும், இப்படி பதிவு செய்தவர்களில் 67.7% இந்தியாவிலும், 13.2% பேர் சீனாவில் இருந்தும் பதிவு செய்துள்ளனர். ஆக அமெரிக்காவின் விசா நடவடிக்கையினால் அதிகம் பாதிக்கப்படபோவது இந்தியர்களே.

குறைத்து வருகின்றன

குறைத்து வருகின்றன

அமெரிக்காவில் உயர்மட்ட இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் இருந்து புலம்பெயர்ந்த ஊழியர்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்து வருகின்றன. மேலும் 50% வரை நிரந்தர உள்ளூர் ஊழியர்களையும் கொண்டுள்ளன. இந்த ஹெச்1 பி விசா மூலம், 2019 நிலவரப்படி, ஆப்பிள் இன்க் கிட்டதட்ட 2,300 ஊழியர்களையும், இதே கூகுள் 900 ஊழியர்களையும் கொண்டுள்ளதாக அமெரிக்கா தொழிலாளர் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+