பெங்களூரு: இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனம் தான் . இதன் நிறுவனர்களுள் ஒருவான நாராயணமூர்த்தி கடந்த ஆண்டு இந்திய இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் எனக் கூறி சர்ச்சையில் சிக்கினார். ஆனால் தற்போது அவருடைய இன்போசிஸ் நிறுவனம் தான் ஊழியர்கள் work life balanceக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறது.
இன்போசிஸ் நிறுவனம் ஊழியர்கள் அனைவரும் வேலை வேலை என இருக்காமல் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறது. இது தொடர்பாக தங்கள் நிறுவன மனித வளத்துறை அதிகாரிகள் மூலம் ஊழியர்கள் எவ்வளவு நேரம் வேலை செய்கிறார்கள் என்பதை கண்காணிக்கின்றனர். குறிப்பிட்ட அளவுக்கு மேல் வேலை செய்யக்கூடிய ஊழியர்களிடம் வழக்கமான வேலை நேரத்தை மட்டுமே பின் தொடருங்கள் கூடுதலாக வேலை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தி மின்னஞ்சல் அனுப்புகிறதாம்.

நிறுவனம் குறிப்பிட்டு இருக்கும் நேரத்தை தாண்டி வேலை செய்யக்கூடிய ஊழியர்களுக்கு ஹெச்ஆர் சார்பாக தனிப்பட்ட முறையில் இன்போசிஸ் நிறுவனம் மின்னஞ்சல் அனுப்பி உங்களுடைய வழக்கமான பணி நேரத்தில் மட்டுமே வேலை செய்யுங்கள் அதை தாண்டி வேலை செய்ய வேண்டாம் உங்களுடைய ஆரோக்கியமும் முக்கியம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள் என மின்னஞ்சல் அனுப்புவதாக எக்னாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டு இருக்கிறது.
வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை செய்யுங்கள் ஒரு நாளைக்கு 9 மணி நேரம் 15 நிமிடங்களுக்கு மேல் வேலை செய்யாதீர்கள் என மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளதாம். குறிப்பாக ரிமோட் முறையில் வேலை செய்யும் ஊழியர்கள் சில சமயங்களில் குறிப்பிட்ட நேரம் தாண்டி வேலை செய்யும்போது தானாகவே அவர்களுக்கு இந்த எச்சரிக்கை மின்னஞ்சல் அனுப்பப்படுகிறது. குறிப்பிட்ட ஊழியர் எவ்வளவு மணி நேரம் வேலை செய்திருக்கிறார், கூடுதலாக அவர் எவ்வளவு நேரம் வேலை செய்திருக்கிறார் என தெளிவாக மின்னஞ்சல்கள் அனுப்பப்படுகிறது. தொடர்ச்சியாக வேலையே செய்து கொண்டிருக்காமல் வேலையிலிருந்து சிறிது ஓய்வெடுத்து உங்களை புதுப்பித்துக் கொள்ளுங்கள் என கூறுகிறார்களாம்.
இன்போசிஸ் நிறுவனத்தில் ஊழியர்கள் மாதத்திற்கு 10 நாட்கள் அலுவலகத்திலும் மீதமுள்ள நாட்கள் வீட்டில் இருந்தும் வேலை செய்யலாம். ஐடி உள்ளிட்ட துறைகளில் வேலை செய்யக்கூடிய ஊழியர்கள் பலரும் மன அழுத்தம் மற்றும் போதிய உறக்கமின்மை, சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளாமல் இருப்பது, நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்வதால் ஏற்படக்கூடிய அழுத்தங்கள் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. இந்நிலையில் தான் இன்போசிஸ் நிறுவனம் இப்படி ஒரு முன்னெடுப்பை எடுத்து ஊழியர்கள் கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டாம் என கூறியுள்ளது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications