சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இதன்மூலம் மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் கொள்ளை லாபம் அடைகின்றனர். இதன் காரணமாக விவசாயிகள், நடுத்தரக் குடும்பத்தினர், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உரிமையாளர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில், டீசல் ஒரு லிட்டருக்கு கலால் வரி ரூ. 2 என்ற அளவில் மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும் அபாயம் உள்ளது.
அதாவது, கடந்த 2022-ல் பெட்ரோல் ரூ.8, மற்றும் டீசல் ரூ.6 என கலால் வரி குறைக்கப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் கலால் வரியை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.13 ஆகவும், டீசல் மீதான கலால் வரி ரூ.10 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால் மக்களுக்கு எதுவும் பாதிப்பில்லை. இந்த விலை உயர்வு நாளை முதல் (ஏப்.8) அமலாகும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த கூடுதல் வரி மூலம் அரசுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சமீபத்திய கலால் வரி உயர்வு, நுகர்வோர் மீது சுமையை ஏற்படுத்தும் நோக்கில் அல்ல என்றும், மானிய விலை எரிவாயு விலைகளால் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட ரூ.43,000 கோடி இழப்பை ஈடுசெய்ய உதவும் நோக்கம் கொண்டது என்றும் பூரி தெளிவுபடுத்தினார்.
இந்தநிலையில், சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளதாக பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இன்று அறிவித்துள்ளார். இந்த விலை உயர்வுடன், பொதுமக்கள் பயன்படுத்தும் 14.2 கிலோ எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.803 லிருந்து ரூ.853 ஆக உயர்ந்துள்ளது. உஜ்வலா திட்டத்தின் கீழ் பயனடையும் பயனாளிகள் 14.2 கிலோ சிலிண்டருக்கு ரூ.503க்கு பதிலாக ரூ.553 செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"ஒரு சிலிண்டர் ரூ.50 உயர்வு என்பது, உஜ்வலா பயனாளிகளுக்கும், உஜ்வலா அல்லாதவர்களுக்கும் சமமாகவே பொருந்தும் எனவும் இந்த விலை மாற்றம் ஒவ்வொரு 15 நாட்கள் அல்லது ஒரு மாதத்திற்கு ஒருமுறை நடைமுறையில் உள்ள முறைப்படி மறுபரிசீலனை செய்யப்படும் எனவும் பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி குறிப்பிட்டுள்ளார். மேலும் இதில், குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், 14.2 கிலோ வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டரின் விலை ஆகஸ்ட் 2024 முதல் இப்போது வரை மாற்றமின்றி இருந்தது. இப்போது தான் அதில் முதன்முறையாக ரூ.50 உயர்வு ஏற்பட்டுள்ளது.
ஏப்ரல் 1ஆம் தேதி, புதிய நிதியாண்டில் பொதுமக்களுக்கு சிறிய அளவில் நிவாரணம் வழங்கும் வகையில், எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் வணிகத் துறைக்கான எல்பிஜி சிலிண்டரின் விலையை குறைத்தன. அதனடிப்படையில், 19 கிலோ வணிக எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.41 குறைக்கப்பட்டது. இந்த புதிய விலையுடன், தேசிய தலைநகர் டெல்லியில் ஒரு சிலிண்டரின் சந்தை விலை ரூ.1,762 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications