சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. வரும் சனிக்கிழமை அன்று திரைப்படத்தின் பாடல் வெளியிட்ட விழா சென்னையில் பிரமாண்டமான முறையில் நடைபெற இருக்கிறது.
கூலி படம்: கூலி திரைப்படம் 2025 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படக்கூடிய ஒரு திரைப்படமாக இருக்கிறது. கூலி திரைப்படத்திற்கு தான் 50 கோடி ரூபாயை சம்பளமாக வாங்கி இருப்பதாக படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அண்மையில் ஒரு நேர்காணலில் தெரிவித்தார். லோகேஷ் கனகராஜே 50 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார் என்றால் படத்தில் நடிக்கக்கூடிய நடிகர்களுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்பட்டிருக்கும் என்ற ஆர்வம் எழுகிறது.

எவ்வளவு பட்ஜெட்: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பழமொழிகளில் இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது . இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட் நடிகர் ஆமிர் கான், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். இந்த திரைப்படம் 375 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி வருவதாக மணி கண்ட்ரோல் தளம் வெளியிட்டு இருக்கும் செய்தி கூறுகிறது.
ரஜினிகாந்த் சம்பளம் எவ்வளவு: இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த்திற்கு மட்டும் 150 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டிருக்கிறது . இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கக்கூடிய ஒரு நடிகராக ரஜினிகாந்த் இருக்கிறார். இந்த திரைப்படத்தில் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் 50 கோடி ரூபாயை சம்பளமாக பெற்று இருக்கிறார். இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் திரைப்பட இயக்குனர் என்ற பெருமை இதன் மூலம் லோகேஷ் கனகராஜூக்கு கிடைத்திருக்கிறது. மற்ற நடிகர்களுக்கான சம்பளம் மற்றும் திரைப்பட தயாரிப்புக்காக 150 கோடி ரூபாயை சன் பிக்சர்ஸ் ஒதுக்கி இருக்கிறதாம்.

ஏற்கனவே ரூ.240 கோடி வருமானம்: படத்தின் மார்க்கெட்டிங் மற்றும் விளம்பரங்களுக்கு 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 375 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த திரைப்படம் தயாரிக்கப்படுகிறது என்றாலும் திரைப்படத் தயாரிப்பாளர்கள் 240 கோடி ரூபாயை படம் வெளியாவதற்கு முன்னரே வருமானமாக ஈட்டிவிட்டனர். இந்த திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை 130 கோடி ரூபாய்க்கும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்ய செய்வதற்கான சேட்டிலைட் உரிமத்தை 90 கோடி ரூபாய்க்கும் விற்பனை செய்திருக்கின்றனர்.
எதிர்பார்ப்பு அதிகம்: திரைப்படத்தின் இசைக்கான உரிமம் 20 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இதுவரை வெளியான கைதி ,மாஸ்டர், விக்ரம் , லியோ ஆகிய அனைத்து படங்களுமே வெற்றி படங்களாகவே அமைந்திருக்கின்றன . முதன்முறையாக ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இணைந்திருப்பது இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பை எகிர வைத்திருக்கிறது.
அமீர் கான் சிறப்பு தோற்றம்: இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் முன்னணி கதாபாத்திரத்திலும் நாகர்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோரும் நடித்திருக்கின்றனர் . இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் அமீர்கான் தோன்றுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது . இதற்காகவே அமீர்கானுக்கு 25 கோடி ரூபாய் வரை வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அனிருத் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications