Carbon Border Tax-ஐ எதிர்த்த இந்தியா.. COP27 கூட்டத்தில் நடந்தது என்ன..?

எகிப்த் நாட்டின் ஷர்ம் எல் ஷேக் நகரத்தில் நடைபெறும் காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பின் 27வது கட்சிகளின் மாநாடு (சிஓபி) அதன் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது.

இக்கூட்டத்தில் carbon border tax குறித்து ஒரு உறுதியான ஒப்பந்தத்தை எட்டுவதற்கான முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டது மூலம் தற்போது உலகளவில் இந்தப் புதிய வரி டிரெண்டாகியுள்ளது.

இதற்கு முதலில் நாம் அனைவரும் carbon border tax என்றால் என்ன..? காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு எதற்காக உருவாக்கப்பட்டது எனத் தெரிந்துகொள்ள வேண்டும்.

கார்பன் பார்டர் அட்ஜெஸ்ட்மென்ட் டாக்ஸ்

கார்பன் பார்டர் அட்ஜெஸ்ட்மென்ட் டாக்ஸ்

கார்பன் பார்டர் அட்ஜெஸ்ட்மென்ட் டாக்ஸ் என்பது ஒரு பொருளின் உற்பத்தி செய்வதன் வாயிலாக ஏற்படும் கார்பன் எமிஷன் அளவை அடிப்படையாகக் கொண்டு அந்தப் பொருட்களின் மீதான இறக்குமதியில் வரி விதிக்கப்படுவது.

கார்பன் எமிஷன் மீது வரி

கார்பன் எமிஷன் மீது வரி

கார்பன் எமிஷன் அளவின் மீது விலை விதிக்கப்படுமாயின், அதனைக் குறைக்கும் வழிகளை எதிர்நோக்கும் பாதையில் செல்ல முடியும் என்பதே இந்த வரியின் நோக்கம். ஆனால் இந்த வரி வர்த்தக அளவில் பார்த்தால் இது உற்பத்தி மற்றும் ஏற்றுமதியைக் கடுமையாகப் பாதிக்கும்.

வர்த்தகச் சந்தை

வர்த்தகச் சந்தை

கார்பன் பார்டர் வரி பற்றிப் பல ஆண்டுகளாகப் பல துறை நிபுணர்களால் விவாதிக்கப்பட்டு வருகிறது. இது ஒரு தலைப்பட்சமாக முடிவு செய்து வடிவமைக்கப்பட்டால், அது கட்டாயம் வர்த்தகச் சந்தை மட்டும் அல்லாமல் உலக நாடுகள் மத்தியிலான வர்த்தக நட்புறவை பாதிக்கும் என்பதால் இதற்கான முடிவை எட்டப்படாமல் இருந்தது.

ஐரோப்பிய ஒன்றியம்

ஐரோப்பிய ஒன்றியம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்குக் கார்பன் கசிவு என்பதைப் பெரும் ஆபத்தாகப் பார்க்கப்படும் நிலையில், இதைத் தடுக்க நடவடிக்கை தேவை. அந்த வகையில் கார்பன் பார்டர் அட்ஜஸ்ட்மென்ட் மெக்கானிசத்தை (CBAM) பரிந்துரையில் கார்பன் எமிஷன் குறித்துக் கவலைப்படாத நாடுகளுக்கு உற்பத்தி மாற்றப் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில் இது ஐரோப்பிய மற்றும் உலகளாவிய காலநிலை நோக்கங்களைக் குறைத்து மதிப்பிடக் கூடியதாகும் என அறிவித்துப் பின்வாங்கப்பட்டது.

 கட்சிகளின் மாநாடு (சிஓபி)

கட்சிகளின் மாநாடு (சிஓபி)

இந்த நிலையில் தான் காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பின் 27வது கட்சிகளின் மாநாடு (சிஓபி - (Conference of Parties - COP)) இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் உலக நாடுகள் பங்கேற்கும் இக்கூட்டத்தில், இந்தியா உட்படப் பல நாடுகளின் கூட்டமைப்பு கார்பன் பார்டர் டாக்ஸ் மூலம் வர்த்தகச் சந்தைச் சிதைவை விளைவித்து, நாடுகள் மத்தியிலான நம்பிக்கை பாதிக்கும், இதனால் இதைக் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சிமென்ட் மற்றும் ஸ்டீல்

சிமென்ட் மற்றும் ஸ்டீல்

ஐரோப்பிய யூனியன், கார்பன் பார்டர் அட்ஜஸ்ட்மென்ட் மெக்கானிசம் என்று அழைக்கப்படும் கொள்கையை முன்மொழிந்தது, இதில் சிமென்ட் மற்றும் ஸ்டீல் போன்ற கார்பன் எமிஷன் அதிகமாக இகுக்கும் பொருட்களுக்கு வரி விதிக்கவும், அவை 2026 முதல் நடைமுறைக்கு வரும் என அறிவித்திருந்தது.

BASIC நாடுகள்

BASIC நாடுகள்

BASIC - பிரேசில், இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளைக் கொண்ட குழு. பெரிய பொருளாதார நாடுகள் அனைத்தும் பல ஆண்டுகளாக நிலக்கரியைப் பெரிய அளவில் நம்பி இயங்கி வருகிறது. தற்போது பெரும்பாலான நாடுகள் கிளீன் எனர்ஜிக்கு மாறும் முயற்சியில் ஈடுபட்டு வரும் போது புதை படிவ எரிபொருளைப் பயன்படுத்துவதற்கான உரிமை இந்த இடைப்பட்ட காலத்தில் அவசியம் என வலியுறுத்தி வருகின்றன.

எதற்காக UNFCCC..?

எதற்காக UNFCCC..?

காலநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாடு (UNFCCC) காலநிலை அமைப்பில் மனிதர்களின் ஆபத்தான தலையீட்டை எதிர்த்து ஒரு சர்வதேச சுற்றுச்சூழல் ஒப்பந்தத்தை நிறுவியது.

ரியோ டி ஜெனிரோ 1992

ரியோ டி ஜெனிரோ 1992

1992 ஜூன் 3 முதல் 14 வரை ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற Earth Summit என்ற சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் (UNCED) பல நாடுகள் கையெழுத்திட்டு இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+