காலம் மாற மாற மக்கள் வியாபாரம் செய்யும் வழக்கம் படிப்படியாக உயர்ந்து கொண்டே போகிறது. கடந்த காலங்களில், 'அட சாத்தியமே இல்ல பா,' என கூறப்பட்ட ஸ்பேஸ் டூரிசம் எனப்படும் விண்வெளி சுற்றுலா தற்போது சாத்தியமாகி இருக்கிறது. உலக செல்வந்தர்களில் பலர் விண்வெளிக்கு சுற்றுலா செல்ல துவங்கவிட்டனர்.
மனிதன் நிலவுக்கு சென்று வர துவங்கியது முதல், விண்வெளி சார்ந்த விஷயங்கள் இன்றும் பலருக்கு வியப்பூட்டும் ஒன்றாகவே இருந்து வருகிறது.
விண்வெளி பற்றிய வியப்பு நம்மிடம் இருப்பதை சரியாக புரிந்து கொண்ட சர்வதேச பிராண்டுகள், இதனை வியாபாரமாக்க முடிவு செய்துவிட்டனர். இப்படியும் செய்வாங்களா, சரி வாங்கி பார்ப்போம் என்று எண்ணுவோரை அமுக்கிப்பிடித்த கதையாக காபெர்னி என்ற பிராண்டு கைப்பை ஒன்றை அறிமுகம் செய்து இருக்கிறது.
இந்த கைப்பையின் ஸ்பெஷல் எல்லோரையும் கவருமா என்பது கேள்விக்குறியான விஷயம் தான்.
காபெர்னி ஹேண்ட் பேக்
காபெர்னி அறிமுகம் செய்ய handbag-ஐ, வாங்க பலர் முன்பதிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி இந்த கைப்பையின் ஸ்பெஷல் தான் என்ன? இதுவும் அனைவரும் கைகளில் வைத்திருக்கும் சாதாரண கைப்பை தான். ஆனால், இதில் வானில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் விழுந்த விண்கற்கள் பொறிக்கப்பட்டு இருக்கின்றன. கைப்பையில் இதை ஏன் வைத்திருக்காங்கனு கேட்காதீங்க. இது தான் இந்த கைப்பையின் யு.எஸ்.பி. (அதிக விலைக்கான முக்கிய காரணம்)
லிமிடெட் எடிஷன் கைப்பை
ஃபிரெஞ்சு ஆடம்பர பிராண்டு காபெர்னி (Coperni) நிறுவனம் லிமிடெட் எடிஷன் கைப்பை-யை அறிமுகம் செய்து இருக்கிறது. லிமிடெட் எடிஷன் கைப்பை-யின் விசேஷ அம்சம் இது உருவாக்கப்பட்டு இருக்கும் மூலப்பொருளில் தான் உள்ளது.
மீடியோரைட் ஸ்வைப் பேக்
"காபெர்னி, லிமிடெட் எடிஷன் மினி மீடியோரைட் ஸ்வைப் பேக்" வானில் இருந்து விழுந்த உண்மையான விண்கல் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. லிமிடெட் எடிஷன் டார்க் கிரே ஸ்டோன் கொண்ட இந்த கைப்பை-யில் விண்கற்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு 40 ஆயிரம் யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 35 லட்சம் ஆகும்.
விண்கற்கள்
ஒவ்வொரு கைபை-க்கும் விண்கற்கள் பிரத்யேகமாக வாங்கப்படுவதாக காபெர்னி தெரிவித்து இருக்கிறது. விண்கற்கள் பூமியில் விழும் இடங்களுக்கு ஏற்ப இவை உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்படுகின்றன. 1.8 கிலோ எடை கொண்டிருக்கும் சிறிய மீடியோரைட் ஸ்வைப் பேக் 23 செ.மீ. உயரமாக உள்ளது. இந்த கைப்பை-யுடன் இதன் உண்மைத்தன்மைக்கான சான்று வழங்கப்படுகிறது.
55 ஆயிரம் ஆண்டுகள்
"Fall / Winter 23 ஒரு பகுதியாக, காபெர்னி பிரத்யேகமாக சிறிய அளவில் மீடியோரைட் கைப்பையை உருவாக்கி இருக்கிறது. இந்த கைப்பை தொல்லியல், டிசைன் மற்றும் பாரம்பரிய மற்றும் பழமையான கலை உள்ளிட்டவைகளை ஒருங்கிணைத்து இருக்கிறது. இந்த கைப்பை உருவாக்க பயன்படுத்தப்பட்டு இருக்கும் விண்கல் 55 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் விழுந்தது. இது 100 சதவீதம் வரை உண்மையானது என தியேட்ரம் முண்டி தெரிவித்து இருக்கிறது," என காபெர்னி வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
சமுக வலைத்தளம்
இந்த கைப்பை பற்றிய இன்ஸ்டாகிராம் பதிவு இதுவரை 12 ஆயிரத்திற்கும் அதிக லைக்குகளை குவித்துள்ளது. பலர் இப்படியும் செய்வார்களா என ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர். "காபெர்னி இது வேற லெவல் ஐடியா" என ஒருவர் கமெண்ட் செய்திருக்கிறார். மற்றொரு நபர் "அட, இது என்ன எப்படி செய்திருக்காங்க" என்று குறிப்பிட்டுள்ளார்.
கைகளால் உருவாக்கப்படுகிறது
ஒவ்வொரு யூனிட்டும் பிரத்யேகமாக கைகளால் உருவாக்கப்பட்டு இருப்பதால், இதன் வடிவம் மாறுப்படும். இதன் காரணமாக புகைப்படத்தில் இருப்பதை விட வித்தியாசமாகவும் காட்சியளிக்கலாம் என்று இதனை விற்பனை செய்யும் காபெர்னி தெரிவித்து இருக்கிறது.
போட்டி
காபெர்னி தவிர இத்தாலிய நிறுவனமான செமார் இதேபோன்ற கைப்பைகளை உருவாக்கி வருகிறது. இந்த கைப்பையில் காபெர்னி லோகோவும் இடம்பெற்றுள்ளது.
ரூ. 35 லட்சம்
இந்த கைப்பையை வாங்க முன்பதிவு செய்தால், ஆறு வாரங்கள் கழித்தே உங்களுக்கு டெலிவரி செய்யப்படும். முன்பதிவு தொகை திரும்ப வழங்கப்பட மாட்டாது. இந்த கைப்பையின் மதிப்பு 40 ஆயிரம் யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 35 லட்சம் ஆகும். இதனை வாங்குவோருக்கு, இது உண்மையான விண்கல் கைப்பை தான் என்பதை கூறும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications