ஹவுரா-வில் இருந்து கிளம்பிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று மாலை பாலசோர் (Balasore) மாவட்டத்தில் வரும் போது விபத்தில் சிக்கியுள்ளது. பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வந்த போது கோரமண்டல் ரயில் தடம் புரண்டுள்ளது, இதில் தடம் புரண்ட 10க்கும் அதிகமான பெட்டிகள் மீது யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் மோதியதால், அதன் 3-4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து உள்ளாகி இருக்கிறது.
இந்த விபத்தில் இதுவரையில் 30க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், 100க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற 700க்கும் அதிமான மக்கள், அரசு ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுப்பட்டு உள்ளனர்.

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் இந்திய ரயில்வே துறையின் மிகவும் முக்கியமான ரயில்களில் ஒன்றாகும், இந்திய கிழக்குக் கடற்கரை வழித்தடத்தில் மேற்கு வங்காளத்தின் ஹவுரா நகரததில் உள்ள ஷாலிமார் ரயில் நிலையம் மற்றும் சென்னையில் உள்ள MGR சென்னை சென்ட்ரல் நிலையம் இடையே தினமும் இயக்கப்படும் ரயிலாகும்.
இந்திய ரயில்வே துறையின் முதல் அதிவிரைவு ரயில்களில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் முக்கியமான ஒன்று. சென்னை மெயில் ரயிலை விட வேகமாக வருவதால் மேற்கு வங்காளம், ஓடிஷா, ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகள் அதிகளவில் விரும்பும், தேர்வு செய்யும் ரயில்களில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ்-ம் ஒன்று.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பெயர் உருவாக முக்கிய காரணம் தோழர்களின் நிலத்தில் இருந்து இந்த ரயில் பயணிக்கும் காரணத்தால் இந்த பெயர் கொடுக்கப்பட்டது என கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் வங்காள விரிகுடாவை ஒட்டிய இந்தியாவின் கிழக்குக் கடற்கரை கோரமண்டல் கடற்கரை என்று அழைக்கப்படுகிறது, எனவே இந்த ரயில் கோரமண்டல் கடற்கரையின் முழுவதையும் கடந்து செல்வதால் இந்த ரயில் பெயரிடப்பட்டது.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் முதன் முதலில் 1977 ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் முதலில் ஹவுரா மற்றும் சென்னை சென்ட்ரல் இடையே இயங்கியது, ஆனால் ஜனவரி 2022 இஸ் இருந்து ஹவுராவிற்கு பதிலாக ஷாலிமார் என மாற்றப்பட்டு சென்னை வரையில் இயக்கப்படுகிறது.
ஹவுரா - சென்னை பாதையில் இயங்கும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், விஜயவாடா மற்றும் சென்னை இடையே Non Stop ஆக இயக்கப்படுகிறது. விசாகப்பட்டினம் வரை எலுரு மற்றும் ராஜமுந்திரியில் இரண்டு நிறுத்தங்களுடன் இயக்கப்படுகிறது.
விசாகப்பட்டினம் ரயில் நிலையத்திற்கு பின்பு பிரம்மபூர், குர்தா சாலை, புவனேஸ்வர், கட்டாக், பத்ரக், பாலசோர் வழியாக காரக்பூர் லரையில் செல்கிறது. இது ஆந்திராவில் ஐந்து நிறுத்தங்களையும், ஒடிசாவில் ஏழு, மேற்கு வங்கத்தில் இரண்டு நிறுத்தங்களையும் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications