சந்திரபாபு நாயுடு-க்கு யோகம்.. ஆந்திராவுக்கு வரும் புதிய முதலீடு.. அதுவும் இந்த துறையில்..!!

மும்பை: கோரமண்டல் நிறுவனம் ஆந்திராவில் புதிய நானோ உர ஆலையை அமைக்க இருப்பதாக செய்தி வெளியானதை அடுத்து இந்த நிறுவனத்தின் பங்குகள் ஜூன் 10ஆம் தேதி அன்று பங்குச்சந்தையில் 3% உயர்வை கண்டது.

கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 41,768 கோடி ரூபாயாகும். இந்த நிறுவனம் ஆந்திராவில் புதிதாக நானோ பெர்டிலைசர் பிளான்ட்(Nano Fertilizer plant) அமைக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

 சந்திரபாபு நாயுடு-க்கு யோகம்.. ஆந்திராவுக்கு வரும் புதிய முதலீடு.. அதுவும் இந்த துறையில்..!!

கோரமண்டல் நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 7ஆம் தேதி) 1,392.10 ரூபாய் என முடிவடைந்த நிலையில். இன்றைய தினம் இந்த பங்கின் மதிப்பானது 1450 ரூபாய் என உச்சம் கண்டது. இந்த நிறுவன பங்கின் 52 வார கால உச்சபட்ச மதிப்பு இதுவாகும். பங்குச்சந்தை முடிவு நேரத்தில் ஒரு பங்கின் மதிப்பானது 1438.65 ரூபாய் என வர்த்தகமானது.

மும்பை பங்குச் சந்தையில் இந்நிறுவனம் தாக்கல் செய்த ஆவணத்தில் ஆந்திராவின் காக்கிநாடாவில் நானோ ஆலையை நிறுவப்போவதாக அறிவித்தது. ஏற்கனவே இந்நிறுவனம் காக்கிநாடா ஆலையிலிருந்து ஆண்டுக்கு 2 மில்லியன் மெட்ரிக் டன்கள் உரங்களை தயாரிக்கிறது. இது இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது இந்தியாவிற்கு தேவையான நவீன உர தயாரிப்பில் ஈடுபட்டிருப்பதாக கோரமண்டல் நிறுவனம் கூறியுள்ளது. இது இந்தியாவின் விவசாய துறையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என கோரமண்டல நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்த புதிய நானோ உர தயாரிப்பு ஆலையானது ஒரு ஆண்டுக்கு ஒரு கோடி நானோ பெர்டிலைசர் பாட்டில்களை தயாரிக்கும் திறன் கொண்டது எனக் கூறியுள்ளது. அடுத்தடுத்த ஆண்டுகளில் இது மேலும் விரிவுபடுத்தப்படும் என அறிவித்துள்ளது.

ஏற்கனவே கோரமண்டல் நிறுவனம் ஐஐடி மும்பை உடன் சேர்ந்து நானோ டிஏபி மற்றும் நானோ யூரியா ஆகியவற்றுக்கான ஒரு தொழில்நுட்ப மையத்தை அமைத்து ஆய்வு செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் நிதி சூழல்களை பார்த்தால் 2023 ஆம் நிதி ஆண்டில் இந்த நிறுவனத்தின் வருவாய் 29,799 கோடி ரூபாய் ஆகும்.

நிறுவனத்தின் லாபம் இதில் 2013 கோடி ஆகும். நிறுவனத்தின் நிகர மதிப்பு 7098 கோடி ரூபாயாக இருக்கிறது. நிறுவன பங்கின் ஃபேஸ் வேல்யூ 1, புக் வேல்யூ 319.92 ஆகும்.

இந்த நிறுவனத்தின் பங்குகளில் 57 சதவீதம் புரமோட்டோர்களிடமும் ,மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களிடம் 15.75 சதவீதமும், சில்லறை முதலீட்டாளர்கள் வசம் 14.67 சதவீத பங்குகளும், வெளிநாட்டு நிறுவனங்களிடம் 7.34 சதவீத பங்குகளும், உள்நாட்டு நிறுவனங்கள் வசம் 4.92 சதவீத பங்குகளும் உள்ளன.

இதுக்குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் வேளாண் தீர்வுகளை வழங்குவதில் முன்னணி வகிக்கும் நிறுவனமான கோரமண்டல் இண்டர்நேசனல் லிமிடெட் [Coromandel International Limited], ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள தனது காக்கிநாடா வளாகத்தில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடைய நானோ உரத் தொழிற்சாலையை [Nano Fertiliser plant] இன்று (ஜூன் 9, 2024) தொடங்கியிருக்கிறது. புதிய உர உற்பத்தி ஆலையை இந்நிறுவனத்தின் ஊட்டச்சத்து வணிகப் பிரிவின் நிர்வாக இயக்குநர் திரு. சங்கரசுப்ரமணியன் எஸ் திறந்து வைத்தார். இந்த மாபெரும் நிகழ்வில் இந்நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகள் குழு மற்றும் நாடு முழுவதும் உள்ள முக்கிய நிறுவன பங்குதாரர்கள் கலந்து கொண்டனர்.

கோரமண்டலின் காக்கிநாடா உர உற்பத்தி ஆலை ஆண்டுக்கு 2 மெட்ரிக் டன் உரங்களை உற்பத்தி செய்யும் திறனுடன், பல்வேறு வகைகளிலான என்பிகே க்ரேடுகளை [Gromor NPK grades] உற்பத்தி செய்து வருகிறது. இதன் மூலம், இந்தியா முழுவதிலும் உள்ள விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் காக்கிநாடா வளாகத்தில் புதிய அதிநவீன நானோ உற்பத்தி ஆலையைத் தொடங்கியதன் மூலம், கோரமண்டல் புதிய தலைமுறை உரங்கள் தயாரிப்பில் களமிறங்கியுள்ளது. இம்முயற்சியானது, இந்திய விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்தி நேர்மறையான பலன்களை உருவாக்கும் என உறுதியாக நம்பப்படுகிறது.

புதிய நானோ உர ஆலையானது, பாட்டில்களை கையாளும் திறன் கொண்ட ரோபோ வசதியுடன் முழுவதும் தானியங்கி முறையில் உற்பத்தி செய்யும் வகையில், அதிநவீன ஆற்றல் சேமிப்பு தொழில்நுட்பத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்த புதிய உர ஆலை ஆண்டுக்கு 1 கோடி பாட்டில்கள் நானோ உரங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. மேலும் பல்வேறு வகைகளிலான நானோ உரங்களை உற்பத்தி செய்வதோடு, உரங்களின் உற்பத்தி அளவையும் கணிசமாக உயர்த்துமளவிற்கு ஆற்றல் கொண்டது.

கோரமண்டல் நிறுவனம், நானோ டிஏபி [Nano DAP] மற்றும் நானோ யூரியா [Nano Urea] போன்ற உரங்களை [IIT Bombay-Monash Research Academy] மும்பையின் ஐஐடி பாம்பே-மோனாஷ் ரிசர்ச் அகாடமியில் [IIT Bombay-Monash Research Academy] உள்ள தனது உள்நிறுவன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் உருவாக்கியிருக்கிறது. நானோ-அளவுள்ள உரத் துகள்கள், அதிகப்பட்ச ஊட்டச்சத்து விநியோகத்துடன், தாவரங்களால் எளிதில் உறிஞ்சப்ப்படுவதால், நாம் வழக்கமாக பயன்படுத்தி வரும் உரங்களுக்கு மிகப்பெரும் மாற்றாக அமைந்திருக்கின்றன. அதேநேரம் இவை பயிர் விளைச்சலை அதிகரிக்கவும் செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிறுவனம் நானோ உரங்களை க்ரோமர் நானோ டிஏபி மற்றும் க்ரோமர் நானோ யூரியா ஆகிய ப்ராண்ட்களின் கீழ் சந்தைப்படுத்தி வருகிறது. விசாகப்பட்டினத்தில் உள்ள அதன் நானோ உர ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த உரமானது, பல்வேறு பகுதிகளிலிருந்தும், பல்வேறு பயிர்ப் பிரிவுகளிலும் இருந்து நேர்மறையான வரவேற்பைப் பெற்று வருகிறது. விவசாயிகளிடமிருந்து வரும் ஊக்கமளிக்கும் வகையிலான வரவேற்பின் காரணமாக, காக்கிநாடாவில் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுள்ள நானோ உர ஆலையைத் தொடங்கியிருக்கிறது. இந்த ஆலை நாடு முழுவதிலும் இருக்கும் தேவையை பூர்த்தி செய்யும். மேலும், இந்நிறுவனம் தனது இரு நானோ உரங்களின் செயல்திறனைக் கண்டறிவதற்காக விவசாயிகள் மூலமான கள சோதனைகள் மற்றும் பல்கலைக்கழகம் மூலமாக பல சோதனைகளை மேற்கொண்டுள்ளது.

விவசாயத்தில் நானோ பயன்பாடுகள் மற்றும் பல்வேறு நானோ தயாரிப்புகளின் தரத்தை உயர்த்தவும், கோரமண்டல் இண்டர்நேசனல் கோயம்புத்தூரில் நானோ தொழில்நுட்ப மையத்தை நிறுவியிருக்கிறது. தொடக்கவிழா நிகழ்வின் போது, ​​நானோ டிஏபி உரம் நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகளுக்கு எளிதில் கிடைக்க வழிவகை செய்யும் தனது சேனல் பங்குதாரர்கள் அனைவரையும் பாராட்டி கெளரவித்தது.

காக்கிநாடாவில் உள்ள நானோ உரத் தொழிற்சாலையின் தொடக்க விழாவில், கோரமண்டல் இண்டர்நேசனல் லிமிடெட்டின் ஊட்டச்சத்து வணிகப் பிரிவின் நிர்வாக இயக்குநர் திரு. சங்கரசுப்ரமணியன் எஸ் [Mr Sankarasubramanian S, Executive Director, Nutrient Business, Coromandel International Ltd,] பேசுகையில், காக்கிநாடாவில் உள்ள கோரமண்டலின் நானோ உரத் தொழிற்சாலையானது, இந்தியாவில் ஊட்டச்சத்து திறனை அதிகரித்தல், சுற்றுச்சூழல் பாதிப்பை குறைத்தல், விவசாயத்தின் பொருளாதார நம்பகத்தன்மையை மேம்படுத்துதல் போன்றவற்றில் எங்கள் நிறுவனம் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பு மற்றும் அக்கறைக்கு சான்றாக அமைந்திருக்கிறது.

நானோ டிஏபி தொடர்பாக, தொழில்நுட்பமும், நீடித்து நிலைக்கத்தக்க சுற்றுச்சூழலுக்கான அம்சங்களும் ஒன்றோடு ஒன்று கைக்கோர்க்கும் வகையில் இந்திய அரசாங்கம் அளித்துவரும் ஆதரவு இந்திய விவசாயத்தில் ஒரு புதிய சகாப்தத்தைக் குறிக்கும் வகையில் உள்ளது. இந்த புதுமையான தீர்வு விவசாய உற்பத்தித்திறன் மற்றும் சுற்றுச்சூழலின் நிலைத்தன்மையை மேம்படுத்தும் எங்கள் இலக்குகளை பிரதிபலிப்பதாக இருக்கிறது. இந்திய விவசாயத்தின் எதிர்காலத்தில் நானோ உரங்கள் முக்கிய பங்கினை வகிக்கும் என நாங்கள் நம்புகிறோம்.'' என்றார்.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+