சென்னை: விவசாயம் துவங்கி ராணுவ பாதுகாப்பு வரையில் பல்வேறு துறைகளில் ட்ரோன் தொழில்நுட்பத்தின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. சீனா உட்பட பல வெளிநாட்டு நிறுவனங்கள் இத்துறையில் மாஸ் காட்டி வந்தாலும் தமிழ்நாட்டில் பிரபலமான சில டிரோன் அமைப்புகளும், நிறுவனங்களும் உள்ளது.
இதில் குறிப்பாக சென்னையை சேர்ந்த நிறுவனத்தில் கோரமண்டல் குழுமம் பெரும்பான்மையான பங்குளை வாங்கியுள்ளது.

இந்தியாவில் பல்வேறு துறையில் டிரோன்-க்கு இருக்கும் டிமாண்ட் மற்றும் முக்கியத்துவக்கத்தைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டின் நிறுவனங்களில் ஒன்றான கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் (Coromandel International Limited), சென்னை-யை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ட்ரோன் உற்பத்தி நிறுவனமான தக்ஷா அன்மேன்ட்டு சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் (Dhaksha Unmanned Systems Private Limited) நிறுவனத்தில் கூடுதலாக 7 சதவீத பங்குகளைப் புதிதாக வாங்கியுள்ளது.
கோரமண்டல் இன்டர்நேஷனல்-ன் துணை நிறுவனமான கோரமண்டல் டெக்னாலஜி லிமிடெட் (CTL) மூலமாக இந்த பங்குகள் வாங்கப்பட்டு உள்ளது. தக்ஷா அன்மேன்ட்டு சிஸ்டம்ஸ் விற்பனை செய்யும் இந்த 7 சதவீத பங்குகள் மூலம் ரூ.150 கோடி முதலீடு செய்து தக்ஷா நிறுவனத்தில் தனது பங்கு இருப்பை 58 சதவீதமாக அதிகரிக்க கொரோமண்டல் திட்டமிட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு சென்னையில் நிறுவப்பட்ட தக்ஷா, இந்தியாவில் ட்ரோன் தொழில்நுட்பத் துறையில் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது. வேளாண்மை, பாதுகாப்பு, கண்காணிப்பு மற்றும் தொழில் துறை பயன்பாடுகள் என பல்வேறு துறைகளில் முழுமையான ட்ரோன் தொழில்நுட்ப சேவைகளை வழங்கி வருகிறது.
இதோடு மட்டுமல்லாமல், ரிமோட் பைலட் பயிற்சி சேவைகளையும் (RPTO) வழங்கி இதுவரை பல ட்ரோன் பைலட்டுகளைப் பயிற்றுவித்துள்ளது தக்ஷா அன்மேன்ட்டு சிஸ்டம்ஸ். இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் என்ட் டூ என்ட் வர்த்தகம் செய்யும் முக்கியமான நிறுவனமாகும்.
கடந்த ஆண்டில், பாதுகாப்பு மற்றும் வேளாண்மை உள்ளீட்டு நிறுவனங்களிடமிருந்து பல்வேறு ஆர்டர்களை தக்ஷா பெற்றுள்ளது. தற்போது இதன் ஆர்டர் புக் மதிப்பு ரூ.265 கோடியாக உள்ளது. மேலும், சென்னை புறநகரில் அதிநவீன உற்பத்தி ஆலை ஒன்றை நிறுவி தனது உற்பத்தித் திறனைச் சமீபத்தில் விரிவாக்கம் செய்துள்ளது.

இந்த முதலீட்டின் மூலம் பெறப்படும் நிதி தக்ஷாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளை வலுப்படுத்துவதற்கும், பெரிய ஆர்டர்களை சமாளிப்பதற்கும், அதன் பணப்புழக்க தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் உதவும்.
கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அருண் அழகப்பன் அவர்கள் இது குறித்துப் பேசுகையில், "தக்ஷா நிறுவனம் தொடங்கப்பட்ட ஆரம்பக் கட்டத்திலிருந்தே கோரமண்டல் நிறுவனம் அதனுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. கடந்த ஒரு வருடத்தில் இந்நிறுவனம் தனது தொழில்நுட்ப திறனை மேம்படுத்தியுள்ளது, இதேபோல் ஆராய்ச்சி, புதிய ப்ராடெக்ட் & அப்பிளிகேஷன்ஸ் உருவாக்கத்தில் அதிகளவிலான முதலீட்டைச் செய்துள்ளது என தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

போயஸ்கார்டனே இனி நம்ம ஏரியா தான்!! லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பக்கா பிளான்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications