டெல்லி: இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்த தகவல்களை அரசு வெளியிட்ட வண்ணம் இருக்கிறது. எனவே மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு மத்திய மாநில அரசுகள் கேட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்தியாவில் மே 26 ஆம் தேதி நிலவரப்படி 1010 பேர் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கிறார்கள். நொய்டா, லக்னோ ,கர்நாடகா ,மும்பை , அருணாச்சல பிரதேசம், வாரணாசி என பல்வேறு பகுதிகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழலில் கொரோனா பெருந்தொற்று பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு ஒரு புறம் எடுத்தாலும் மக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தடுப்பு ஊசிகள் கையிருப்பு இருக்கின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகளிடம் தகவல்களை பெற்று வெளியிட்டுள்ள இந்தியா டுடே எந்த ஒரு சூழலையும் எதிர்கொள்வதற்கு அரசு தயாராக இருப்பதாக அரசு தரப்பில் தெரிவித்திருப்பதாக கூறியுள்ளது. நம் குடிமக்களுக்கு தேவையான அளவு மருந்துகள் கையிருப்பு இருக்கின்றன, குறிப்பாக கொரோனா தடுப்பு மருந்துகள் கைவசம் இருக்கின்றன என்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய அளவில் கூடுதலாகவே தடுப்பு மருந்துகள் நம்மிடம் இருக்கின்றன என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக இந்தியா டுடே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிடுகிறது.
இந்தியாவில் 1 பில்லியன் மக்கள் கோவிஷீல்டு அல்லது கோவாக்சின் ஆகிய இரண்டில் ஏதேனும் ஒரு கொரோனா தடுப்பு மருந்தை ஒரு தவணையாவது போட்டிருக்கின்றனர். இந்தியாவில் சீரம் இந்தியா நிறுவனம் அஸ்ட்ரோ ஸென்காவின் உரிமத்தின் கீழ் கோவிஷீல்டு தடுப்பு மருந்தினை உற்பத்தி செய்கிறது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் பெரும்பாலும் இந்தியாவில் இந்த தடுப்பூசியே போடப்பட்டது. 2021 டிசம்பருக்கு பிறகு இந்தியாவில் இந்த தடுப்பூசிக்கான தேவை குறைந்ததால் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
அதேவேளையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மற்றொரு கொரோனா தடுப்பு மருந்து தான் கோவாக்சின் இது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் பாரத் பயோடெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கிய கோவாக்சின் மருந்தும் இந்தியாவில் பலருக்கு இரண்டு தவணைகளாக போடப்பட்டது. இந்த மருந்து உற்பத்தியும் 2022 ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே நிறுத்தப்பட்டது.
மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் இந்தியாவிடம் போதிய அளவு கொரோனா தடுப்பூசிகள் இருக்கின்றனவா என்ற கேள்வி எழுந்ததற்கு தான் அரசு தரப்பில் நம்மிடம் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தாலும் போதிய அளவு மருந்து கையிருப்பு இருக்கிறது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் தற்போது LF.7, XFG, JN.1 , NB.1.8.1 ஆகிய மூன்று வகையிலான கொரோனா வைரஸ்கள் அதிக அளவில் பரவி வருவதாக மத்திய அரசு தெரிவிக்கிறது.
தொண்டை கரகரப்பு , காய்ச்சல், சளி, இருமல், தலைவலி உடல் வலி உள்ளிட்டவை இவ்வகை கொரோனா தொற்றுகளின் அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்று உருமாற்றம் அடைந்து வெவ்வேறு வகைகளாக பரவி வரக்கூடிய சூழலில் ஏற்கனவே நம்மிடம் இருக்கக்கூடிய தடுப்பூசிகள் இதனை தடுக்கும் திறன் கொண்டவையா என்ற கேள்வி எழுகிறது.
இந்த சூழலில் தான் அண்மையில் அரிசோனா பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் ஏற்கனவே கொரோனா தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு பல்வேறு வகையான கொரோனா வைரஸ் பரவினாலும் அதற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி அவர்களின் உடலில் இருக்கிறது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே தடுப்பூசி போட்டவர்கள் புதிய வகையிலான கொரோனா தொற்று தொற்றையும் எதிர்த்துப் போராடும் சக்தி கொண்டவர்களாக இருக்கின்றனர் என அதில் கூறப்பட்டிருக்கிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications