நிறைய ஆர்டர்களும் கிடைக்குது.. ஆனா கூடவே பிரச்சனையும் வருது..என்ன செய்ய.. எல்லாம் கொரோனாவின் மாயம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்கள் மனதில் பரவி அச்சமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தற்போது எதற்கெடுத்தாலும் ஆன்லைன் என்ற ஆப்சனை நாடத் தொடங்கியுள்ளனர் மக்கள்.

பொதுவாக இந்த தொற்று நோய் பரவாமல் இருக்க பயணங்களை தவிர்க்கவும், மக்கள் அதிகமாக கூடும் இடங்களை தவிர்க்கவும் அரசு பரிந்துரைத்து வருகிறது.

இந்த நிலையில் மக்கள் கொரோனா அச்சம் காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்க ஆரம்பித்துள்ளனர்.

அதிகரித்து வரும் தாக்கம்

அதிகரித்து வரும் தாக்கம்

இந்தியாவில் சுமார் 50 பேருக்கு மேல் கொரோனாவால் தாக்கம் அடைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவினால் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வீட்டுக்குத் தேவையான பொருட்கள் மற்றும் பல பொருட்களுக்கு ஆன்லைனில் ஆர்டர்கள் அதிகரிக்கும் என்றும் கூறப்படுக்கிறது.

ஆர்டர்கள் அதிகரிப்பு

ஆர்டர்கள் அதிகரிப்பு

நாட்டின் மிகப்பெரிய ஆன்லைன் மருந்தகமான மெட் லைஃப்பில் தேடல்கள் 40% அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஃபேஸ் மாஸ்க் மற்றும் ஹேண்ட் சானிட்டைசர் போன்ற அத்தியாவசிய பொருட்கள் ஆர்டர்கள் கடந்த சில நாட்களில் 100% உயர்ந்துள்ளதாக அறிவித்துள்ளது. இது தவிர துப்புரவு மற்றும் கிருமி நாசினி துடைப்பான்களுக்கான ஆர்டர்கள் பல மடங்கு உயர்வைக் கண்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

சுகாதார ஆலோசனைகள்

சுகாதார ஆலோசனைகள்

நுகர்வோர் வெளியே செல்வதில் மிகவும் அக்கறை கொண்டுள்ளனர். சப்ளிமென்ட்ஸ் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் தயாரிப்புகளுக்கான தேவை தவிர, நுகர்வோர் ஆன்லைன் யோசனைகளையும், வீட்டில் இருந்து கண்டறியும் பிற சேவைகளையும் ஆன்லைனில் இருந்தே தேர்வு செய்கின்றனர். மேலும் ஈபார்மசி மற்றும் டெலிமெடிசின் உள்ளிட்ட டிஜிட்டல் சுகாதார மாதிரிகள், நுகர்வோருக்குத் தேவையான மருந்துகள் மற்றும் சுகாதார ஆலோசனைகளை அணுகுவதை சாத்தியமாகியுள்ளன என்றும் 1MG தலைவர் பிரசாந்த் டாண்டன் தெரிவித்துள்ளார்.

இணைய ஆர்டர்கள் அதிகரிக்கலாம்

இணைய ஆர்டர்கள் அதிகரிக்கலாம்

மால்கள் மற்றும் உணவகங்களும் கடந்த பதினைந்து நாட்களில் ஐந்தில் ஒரு பங்கு மக்கள் வருகை குறைந்துள்ளதாகக் கூறியுள்ள நிலையில், நுகர்வோர் இணைய நிறுவனங்கள் சுகாதார மற்றும் பாதுகாப்பு சம்பந்தமான பொருட்களுக்கான ஆர்டர்கள் ஆன்லைனில் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கின்றன.

டெலிவரி பார்ட்னர்களுக்கு ஆலோசனை

டெலிவரி பார்ட்னர்களுக்கு ஆலோசனை

மளிகை மற்றும் உணவு டெலிவரி, சவாரி, இணையவழி வணிகங்கள், அனைத்தும் தங்களது விநியோக சுகாதார நலன்களையும் உயர்த்தியுள்ளனர். குறிப்பாக உணவு டெலிவரி நிறுவனங்களான ஸ்விக்கி மற்றும் சோமேட்டோ தங்களது டெலிவரி பார்ட்னர்களுக்கு தினசரி ஆலோசனைகளை வழங்கி வருகின்றது.

ஆன்லைன் விற்பனை ஊக்கம்

ஆன்லைன் விற்பனை ஊக்கம்

இதே போல மளிகை நிறுவனமான குரோப்பர்ஸ் கூட தனது வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் விற்பனையை ஊக்கப்படுத்தி வருகின்றது. அதிலும் குறிப்பாக கேஸ் ஆன் டெலிவரியும் செய்து வரும் குரோப்பர்ஸ், இது தான் பெரும்பாலானவர்களின் விருப்பமாகும். எனினும் இது தனி நபர்கள் இடையே வைரஸை மாற்றுவதற்கான ஆதாரமுமாகவும் மாறக்கூடும். ஆக வாசலில் மாற்றத்தை தேடுவதையும், பரிமாறிக் கொள்வதையும் தவிர்க்கவும் என்று குரோப்பர்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி அல்பிந்தர் திண்ட்சா கூறியுள்ளார்.

ஓட்டுனர்களுக்கு ஆலோசனை

ஓட்டுனர்களுக்கு ஆலோசனை

இதே வாகன நிறுவனங்களான ஓலா மற்றும் உபெர் ஆகியவை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒட்டுனர்களுக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளதாகவும் கூறியுள்ளது. சுகாதாரத்தினை வலிமைப்படுத்தும் பொருட்கள் மற்றும் முகமூடிகள், சுத்திகரிப்பான்களை உபயோகிக்க ஓலா மற்றும் உபெர் வலியுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Corona virus brings both orders and worries of start-ups

According to the sources, E-pharmacies are witnessing a spike in orders. Such as face masks and hand sanitizer rise by 100% in the past few days.
Story first published: Wednesday, March 11, 2020, 18:32 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X