கொரோனா மாஸ்கின் விலை ஜஸ்ட் 2 ரூபாய் தான்.. அசர வைத்த மெடிக்கல் உரிமையாளர்.. கேரளாவில் பரபரப்பு..!

கொச்சின்: நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பயத்தால் மக்கள் பயந்து போய் வீட்டிற்குள் முடங்க ஆரம்பித்துள்ளனர்.

அதே நேரசம் முகத்திற்கு அணியும் பேஸ் மாஸ்க்குகளின் விலை மற்றும் சில சுகாதார பொருட்களின் விலையானது ராக்கெட் வேகத்தில் சில இடங்களில் அதிகரித்து வருகிறது.

பேஸ் மாஸ்க் மட்டும் அல்ல, சானிட்டைசர் மற்றும் பல அடிப்படை சுகாதார பொருட்களின் விலையானது விமானத்தில் பறக்க ஆரம்பித்துள்ளது.

விலை அதிகரிப்பு

விலை அதிகரிப்பு

ஒரு புறம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தேவை, குறைவான இருப்பு என அனைத்தும் விலை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது. இந்த நிலையில் கேரளாவில் ஒரு சரிஜிகல் மெடிக்கல் கடை ஒன்று 2 ரூபாய்க்கு விற்று வருகிறது. இதே மற்ற இடங்களில் 25 ரூபாய்க்கு அதே மாஸ்கினை விற்று வருகின்றனர்.

அதிகரித்த விலைகள்

அதிகரித்த விலைகள்

கொரோனா வைரஸின் காரணமாக பல மருத்துவ பொருட்களுக்கு தேவை அதிகரித்து வருகிறது. குறிப்பாக முகமூடிகள், சுத்திகரிப்பான்களுக்கு அதிக தொகை வசூலிக்கும் நிலை நிலவி வருகிறது. இதனால் பல பொருட்கள் இயல்பை விட பல இடங்களில் அதிகமான விலைக்கு விற்கப்படுவதை கண்கூடாக காண முடிகிறது. ஆனால் கேரளாவில் உள்ள சர்ஜிகல் கடையில் மிக குறைந்த விலையில் 5,000 பேஸ் மாஸ்குகள் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் விற்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

யாருக்கெல்லாம் இந்த விலை?

யாருக்கெல்லாம் இந்த விலை?

இது குறித்து ஏஎன்ஐயில் வெளியான செய்தியில் ஒரு மாஸ்கின் விலை 2 ரூபாய் என இது வரை அவர்கள் 5,000 மாஸ்குகளை விற்றுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. அதிலும் இந்த பேஸ் மாஸ்குகள் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மாணவர்கள், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மற்ற கடைகளில் இது தான் விலை

மற்ற கடைகளில் இது தான் விலை

இது குறித்து அந்த கொச்சின் சர்ஜிகல்ஸின் இணை உரிமையாளர் தஸ்லீம் பிகே கடந்த 8 ஆண்டுகளாக தாங்கள் அந்த மாஸ்கின் விலையை 2 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், அதை அவர்கள் 8 - 10 ரூபாய்க்கு வாங்குவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இதே மாஸ்கினை மற்றவர்கள் 25 ரூபாய்க்கு விற்பனை செய்வதாகவும் கூறியுள்ளார்.

பதுக்கல் வேண்டாம்

பதுக்கல் வேண்டாம்

கொரோனா வைரஸிக்கு எதிரான இந்த போராட்டத்தில், இது போன்ற பொருட்களை பதுக்கி வைப்பதை அரசாங்கம், இந்த பொருட்களை அத்தியாவசிய பொருட்களாக அறிவித்துள்ளனர். இருக்கும் விலையை விட இது நல்ல வாய்ப்பு என அதிகரித்து விற்பனை செய்யும் உரிமையாளர்கள் மத்தியில் இது போன்ற நல்ல உள்ளங்களும் இருக்கதான் செய்கின்றன. ஆக நாமும் அவரை மனதார வாழ்த்துவோமே.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+