எச்சரிக்கும் அரசு.. அத்தியாவசிய தேவை இல்லாமல் யாரும் சிங்கப்பூர் போகதீங்க.. காரணம் என்ன..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: சுமார் இதுவரை 2,400 பேரை காவு வாங்கியுள்ள கொரொனாவால், 77,000 பேர் தாக்தலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சீனா தவிர தற்போது ஜப்பான் மற்றும் ஈரான், சிங்கப்பூர் என பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டி வரும் கொரோனாவால், இன்னும் எத்தனை பேர் இந்த கொடிய வைரஸால் பாதிக்கப்படுவார்களோ என்று பயமும் நிலவி வருகிறது.

இந்த நிலையில் அத்தியாவசிய பயணங்களை தவிர்த்து மற்ற யாரும் சிங்கப்பூருக்கு செல்ல வேண்டாம் என இந்திய அரசு கடந்த சனிக்கிழமையன்று அறிவுறுத்தியுள்ளது.

கண்கானிக்க உத்தேசம்

கண்கானிக்க உத்தேசம்

ஏனெனில் சீனாவைத் தவிர்த்து தற்போது படுவேகமாக பரவி வரும் கொரோனாவுக்கு, சிங்கப்பூரிலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சிங்கப்பூர் செல்வது அவ்வளவு நல்லதல்ல எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் வரும் திங்கட்கிழமையிலிருந்து காத்மாண்டு, இந்தோனேசியா, வியட்நாம், மலேசியாவில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமான பயணிகளுக்காக விமான நிலையங்களில் கண்கானிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கண்கானிக்கப்பட்டு வருகிறார்கள்

கண்கானிக்கப்பட்டு வருகிறார்கள்

தற்போது சீனா, ஹாங்காங், தாய்லாந்து, தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் ஜப்பன் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பயணிகளை, நாட்டின் நியமிக்கப்பட்ட 21 விமான நிலையங்களில் கொரோனா பாதிப்பு ஏதேனும் உள்ளதா என கண்கானிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

பயணங்களை தவிருங்கள்

பயணங்களை தவிருங்கள்

இதுபற்றிய ஆய்வு கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும், கொரோனாவின் தாக்கம், அதை எப்படியெல்லாம் நிர்வகிப்பது என மத்திய நலத்துறை அமைச்சகம் இது குறித்து ஆலோசித்தாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆக சிங்கப்பூருக்கு அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களைத் தவிர்க்குமாறு குடிமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது என்று அமைச்சகம் ஒர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பலர் கண்கானிப்பட்டு வருகின்றனர்

பலர் கண்கானிப்பட்டு வருகின்றனர்

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று வரையில், சுமார் 21,805 பேர் கண்கானிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இதே 3,97,152 விமான பயணிகள், கடல் துறைமுகங்களில் 9,695 பயணிகள் கண்கானிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. விரிவான மறு ஆய்வுக்கு பிறகே இப்படி ஒரு முடிவினை அரசு எடுத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

நல்ல நடவடிக்கை தான்

நல்ல நடவடிக்கை தான்

சீனாவில் நிலவி வரும் பதற்றமான நிலையினால், அங்கு கொரோனாவால் பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு நிலையில், பொருளாதாரமும் வீழ்ச்சி கண்டு வருகிறது. இந்த கொரோனா பற்றி ஆரம்பத்திலேயே நடவடிக்கை இல்லாததால் தான் இந்தளவுக்கு பிரச்சனை அதிகமாகியது என்று கூறப்படும் இப்படி ஒரு நிலையில் மத்திய அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை நல்ல விஷயம் தானே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Corona virus impact: Indian govt advised citizens to avoid non-essential travel to Singapore

The government advised citizens to avoid all non essential travel to Singapore, also said screening at airports is now being planned for flight passengers coming to India from Kathmandu, Indonesia, Vietnam and Malaysia from Monday.
Story first published: Sunday, February 23, 2020, 8:12 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X