பெங்களுரு : நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ, அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஏப்ரல் 2021 வரை அதன் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணிபுரிய அனுமதித்துள்ளது.
இது குறித்து வெளியான அறிவிப்பில், பெங்களுரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் விப்ரோ நிறுவனம், அடுத்தாண்டு ஏப்ரல் 4 வரை அதன் ஊழியர்களை பணியில் இருந்து பணிபுரிய அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று நோயின் காரணமாக பல நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்தி வருகின்றன. அதிலும் ஐடி நிறுவனங்கள் பெரும்பாலும் அதன் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணி புரிய அனுமதித்துள்ளது.
WFH-க்கு அனுமதி
ஏனெனில் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக ஊழியர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க இயலாது என்பதால், ஐடி நிறுவனங்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய அனுமதித்து வருகின்றன. அந்த வகையில் தான் தற்போது விப்ரோ ஏப்ரல் 4 வரை அனுமதித்துள்ளது. இது முன்னதாக மார்ச் 2021 வரை அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
98% பேர் WFH தான்
விப்ரோ நிறுவனம் ஊழியர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் அதன் மொத்த ஊழியர்களில் 98% பேர் தற்போது வீட்டில் இருந்து பணிபுரிந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. இது மற்ற ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் மார்ச் 2021 வரை வீட்டில் இருந்து வேலை பார்க்க அறிவுறுத்தியுள்ளது.
கூகுள் நிறுவனம் அனுமதி
இதே ஆல்பாஃபெட்டின், கூகுள் நிறுவனம் கடந்த வாரத்தில் இது செப்டம்பர் 2021 வரையில் அதன் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதித்துள்ளது. அது மட்டும் அல்ல பிளக்ஸிபிள் யோசனையை அறிவித்திருந்தது. இதன் காரணமாக கூகுள் ஊழியர்கள் வாரத்தின் மூன்று நாட்களாவது அலுவலகத்திற்கு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவும் ஒரு காரணம்
இந்த பிளக்ஸிபிள் பணி மாதிரியானது அதிக உற்பத்தி திறன் மற்றும் நல்வாழ்வுக்கும் வழிவகுக்கும் என்று நாங்கள் எண்ணுகிறோம். கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதித்த முதல் நிறுவனம் கூகுள் ஆகும்.
உண்மையில் இது ஊழியர்களின் பாதுகாப்பினை மேம்படுத்தும். இந்த நெருக்கடியான காலகட்டத்தில் ஊழியர்கள் வெளியில் செல்வதும் குறையும்.


Click it and Unblock the Notifications