உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடான சீனாவில், விஸ்வரூபம் எடுத்தும் ஆடி வரும் கொரோனா வைரஸால், அந்த நாட்டின் தொழில்நுட்ப துறையில் இது பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
Recommended Video
சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் கோவிட் -19 தாக்கம் ஆரம்பித்ததில் இருந்து, அலிபாபா குழுமம் மற்றும் மூதுவான் டயான்பிங் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் சந்தை மதிப்பினை 28 பில்லியன் டாலர் குறைத்துள்ளனவாம்.
ஏனெனில் சீனாவில் நிலவி வரும் சிக்கலான நிலையில், நாடு முழுவதும் போக்குவரத்துக்கள் பெரும்பாலான இடங்களில் தடை செய்யப்பட்டுள்ளன. மக்கள் உணவு பொருட்களை மற்றும் பல தேவைகளுக்காக ஒரு பொருளை மற்ற இடங்களுக்கு எடுத்து செல்ல லாரிகளையே பெரிதும் நம்பியுள்ளனர். இந்த நிலையில் பெரும்பாலான வர்த்தகமும் இதனால் முடங்கி போயுள்ளன.
வருவாய் வீழ்ச்சி
வேறு எந்த நிறுவனத்தினையும் விட சீனாவின் பொருளாதாரத்தோடு பின்னிப் பிணைந்துள்ள அலிபாபா குழுமத்தின் மொத்த வருவாயும் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது. ஏனெனில் இவ்வாறு மதிப்புமிக்க ஒரு நிறுவனம் பொருட்களை டெலிவரி செய்ய முடியாமல் தவித்து வரும் நிலையில், அதன் வருவாயை முற்றிலும் இழக்க வாய்ப்பாக இது அமைந்துள்ளது.
டெலிவரி செய்ய முடிவதில்லை
ஏனெனில் ஆர்டர்கள் எடுப்பது என்னவோ ஆன்லைனில் என்றாலும், ஆர்டர்கள் ஹோம் டெலிவரி செய்யப்படவேண்டும். இதற்காக நிறுவனத்தில் டெலிவரி செய்ய ஆட்கள் வேண்டும். ஆனால் நிறுவனத்திற்கு ஆட்கள் வேலைக்கு வராத பட்சத்தில் நிறுவனம் சரியான நேரத்தில் டெலிவரி செய்ய முடியாமல் தவித்து வருவதோடு, அதை பேக்கிங் செய்ய, மற்ற பணிகளுக்கு ஆட்கள் குறைவாகத் தான் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
வருவாயை இழக்கும் சூழல்
இதனால் சரியான ஆர்டர்கள் இருந்தும் அதை டெலிவரி செய்ய முடியாமல் தவித்து வருகின்றன இ-காமர்ஸ் நிறுவனங்கள். இதனால் அலிபாபா குழுமம் பெரிய அளவில் தங்களது வருவாயை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. சாதாரணமாக அலிபாபா குழுமம் ஒரு நாளைக்கு பில்லியன் கணக்கான பொருட்களை டெலிவரி செய்யும் நிலையில், தற்போது அவையெல்லாம் முற்றிலும் முடங்கி போயுள்ளன.
குறைவான ஊழியர்கள் மட்டுமே உள்ளனர்
மேலும் கொரோனாவால் மக்கள் அதிகமாக கூடும் இடங்களை தவிர்க்க அந்தநாட்டு அரசு கூறிய நிலையில், பல ஊழியர்கள் வேலைக்கு வருவதில்லையாம். இந்த நிலையில் குறைவான ஊழியர்களே தற்போது உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஆக இதே கொரோனாவின் இந்த கொடிய தாண்டவத்தை சமாளிக்க முடியாமல் சீனாவின் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் தள்ளாடி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
வரவிருக்கும் காலாண்டில் பாதிப்பு
இதனால் வரவிருக்கும் காலாண்டில் சீனாவில் சில்லறை வர்த்தகம் சுருங்கக் கூடும். இதனால் அலிபாபா உள்ளிட்ட பல கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாயும் குறையக்கூடும் என்றும் கூறப்படுகிறது. எனினும் 2003ம் ஆண்டு சார்ஸ் வைரஸ் தாக்கத்தின் போது கூட அலிபாபா குழுமம் தனியாக நின்று தனது சேவையினை தொடர்ந்து செய்து வந்தது. அதனால் பெருத்த நஷ்டத்தினை குறைத்தது. எனினும் கொரோனாவின் தாக்கம் நீண்ட காலத்திற்கு இருக்கும் நிலையில் நிறுவனங்கள் நிச்சயம் கணிசமான அளவு வருவாயை இழக்க கூடும் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications