நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தின் மத்தியில், பல அறிக்கைகள் தொடர்ந்து வர்த்தகம் பாதிக்கப்படுவதாகவும், உற்பத்தி பாதிக்கப்படுவதாகவும், விநியோக சங்கிலிகள் பாதிக்கப்படுவதாகவும் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் இந்த கோவிட் - 19 வைரஸால் எப்படி விநியோக சங்கிலி எப்படி பாதிக்கப்படுகிறது. இது உற்பத்தி நடவடிக்கைகளை எப்படி சீர்குலைக்கிறது என்பதை பற்றித் தான் இந்த கட்டுரையில் பார்க்க போகிறோம்.
இந்த கொடிய கொரோனாவின் உச்ச தாக்கம் விநியோக சங்கிலியில் மார்ச் நடுப்பகுதியில் நிகழும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
பாதிக்கப்படலாம்
கொரோனாவின் தாக்கம் தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பகுதிகளில் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ள நிலையில், ஆயிரக்கணக்கான உற்பத்தி ஆலைகள் உற்பத்தியை குறைக்கவோ அல்லது தற்காலிகமாக மூடவோ கட்டாயப்படுத்தப்படலாம். ஏனெனில் மூலப் பொருட்களுக்காக சீனாவினை முழுக்க நம்பியிருக்கும் நிறுவனங்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடிய சூழல் உள்ளது.
பிரச்சனை தான்
நீங்கள் நினைக்கலாம் அதான் தற்போது சீனாவில் கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறதே. அப்புறம் எப்படி பாதிக்கும் என்று. விற்பனை செய்பவர் மட்டும் சரியாக இருந்தால் போதுமா?, பொருட்களை வாங்குபவரும் சூழலுக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும் அல்லவா. இந்த நிலையில் சீனாவில் இருந்து மூலப் பொருட்களை வாங்குபவர்கள் யார் யார். அவர்களும் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எப்படி பொருட்களை வாங்குவார்கள். ஆக இங்கு உற்பத்தியாளர் பொருளை உற்பத்தி செய்திருந்தாலும், வாங்குபவர் வாங்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஆப்பிள் உற்பத்தி பாதிப்பு
உதாரணத்திற்கு ஆப்பிள் நிறுவனம் அதன் பெரும்பாலான உதிரி பாகங்களை சீனாவில் இருந்து தான் பெற்று வருகிறது. கடந்த பல வாரங்களாக சீனாவில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையால் தங்களுக்கு தேவையான பாகங்கள் கிடைக்கவில்லை. இதனால் உற்பத்தி முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது சீனாவில் இருந்த நிலை தற்போது அமெரிக்காவை ஆட்கொள்ள தொடங்கியுள்ளது. இதனால் உற்பத்தி பாதிப்பு மேலும் தொடரலாம் என்றே கூறப்படுகிறது.
சார்ஸை மிஞ்சிய கொரோனா
கொரோனாவை சார்ஸ் வைரஸுடன் பல ஆய்வாளார்கள் ஒப்பிடுகின்றனர். ஆனால் கொரோனா அதையெல்லாம் மிஞ்சி விட்டது. சார்ஸ் தொற்று நோய் 2002ல் தொடங்கி 2003 வரையில் தொடர்ந்தது. இது சுமார் 8,000 வழக்குகளுக்கு வழிவகுத்தது. அந்த ஆண்டின் சீனாவின் ஜிடிபி மொத்த உலகளாவிய ஜிடிபி விகிதத்தில் 4.31%ஐ ஆட்கொண்டது. ஆனால் தற்போது உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சீனா நான்கு மடங்கு அதிகரித்து 16% ஜிடிபியை தன்னகத்தே கொண்டுள்ளது. இதே நேரம் கொரோனாவோ இது வரை 80,000 பேருக்கு மேல் தாக்கியுள்ளது. இதனால் உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும் வீழ்ச்சி காண வாய்ப்புள்ளது.
உற்பத்தி நிறுத்தப்படலாம்
இந்த நிலையில் ஏற்கனவே சில உற்பத்தியாளர்கள் சீனாவுக்கு வெளியே உற்பத்தியை தற்காலிமாக நிறுத்த முடிவு செய்துள்ளனர். Fiat Chrysler ஆட்டோமொபைல் நிறுவனம் செர்பியாவில் உள்ள ஒரு கார் தொழில்சாலையை தற்காலிமாக (பிப்ரவரி 14 அன்று அறிவித்தது) நிறுத்தியுள்ளது. ஏனெனில் சீனாவில் இருந்து கார் உதிரி பாகங்களை பெற முடியாது என்பதால் நிறுத்தி வைத்தது. இதே கொரியாவில் உள்ள ஹூண்டாய் ஆலைகளை இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இப்படியாக பல நாடுகளில் உள்ள பல தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
திருமண ஆடை உற்பத்தி
இதே போல் உலகம் முழுக்க திருமண ஆடைகளை சப்ளை செய்யும் சீனாவில் தற்போது உற்பத்தி நிறுத்தமானது, வரவிருக்கும் கோடைகால திருமண பருவத்திற்கு கணிசமான அளவு விநியோக பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது. இப்படியாக பல துறைகளிலும் பல விதங்களில் பாதிப்பு இருக்கத்தான் செய்யும். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் உலகளாவிய உற்பத்தியில் நிச்சயம் ஒரு பெரிய விளைவை இந்த கொரோனா ஏற்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும் இரண்டு முதல் மூன்று வாரங்களில் தனது முழு சக்தியைக் கொண்டு தாக்கத் தொடங்கலாம். மேலும் இதன் தாக்கம் பல மாதங்களுக்கு நீடிக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் மத்தியில் கூறப்படுகிறது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications