அங்கெல்லாம் போகாதீங்க.. விப்ரோ எடுத்த அதிரடி முடிவு.. காரணம் என்ன!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரு : நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ கொரோனா வைரஸ் தாக்கம் உள்ள சீனா, ஹாங்காங் மற்றும் மக்காவ், சிங்கப்பூர், தென் கொரியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு, தனது ஊழியர்களின் பயணத்தை நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

Corona virus is restricted to import goods from China but Tirupur garments due to the chemicals used for coloring the price rose by 20 per cent
 

இது குறித்து வெளியான அறிவிப்பில், சீனாவில் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் சிங்கப்பூர், இத்தாலி, தென் கொரியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு பயணங்களை தவிர்க்குமாறு தனது ஊழியர்களுக்கு விப்ரோ அறிவுறுத்தியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் விப்ரோ நிறுவனம் எந்த மாதிரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பதை பற்றித் தான் இந்தக் கட்டுரையில் பார்க்க போகிறோம்.

வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதி

வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதி

கடந்த சில நாட்களில் சீனாவில் பாதிக்கப்பட்ட இடத்திற்கு பயணம் செய்த எந்தவொரு ஊழியரும் மீண்டும் பணியினை தொடங்குவதற்கு முன்பு, 14 நாட்கள் வீட்டிலிருந்தே பணி புரிய அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஏனெனில் ஒரு வேளை அவர்களுக்கு கொரோனா அறிகுறி தென்பட்டால் அவர்களை விரைவில் சுகாதார மையத்தை அடையவும் கூறியுள்ளதாக விப்ரோ தெரிவித்துள்ளது.

விழிப்புணர்வுடன் இருங்கள்

விழிப்புணர்வுடன் இருங்கள்

நாங்கள் எங்கள் ஊழியர்களை மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்குமாறு கூறியுள்ளோம். குறிப்பாக சீனாவை தளமாகக் கொண்டுள்ளவர்கள் மற்றும் சமீபத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட நாட்டிற்கு வருகை தந்தவர்கள் என்று அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்குமாறு விப்ரோ தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளது. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் கொரோனா பாதிக்கப்பட்ட சீனாவின் மைப்பகுதியான வுகானில் அதிர்ஷ்டவசமாக தங்களுக்கு ஊழியர்கள் யாரும் இல்லை என்றும் விப்ரோ தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கை
 

பாதுகாப்பு நடவடிக்கை

எனினும் சீனாவின் மற்ற பகுதிகளில் உள்ள கணிசமான தொழில்நுட்ப வல்லுனர்களை வீட்டிலிருந்தே பணிபுரிந்து வேலை செய்து வருவதாகவும் விப்ரோ தெரிவித்துள்ளது. இது தவிர அங்குள்ள தங்களது அலுவலகத்தில் வெப்ப பரிசோதனை, screening, surgical masks and frequent sanitization உள்ளிட்ட பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் விப்ரோ தெரிவித்துள்ளது.

தொடர்ந்து கண்கானிப்பு

தொடர்ந்து கண்கானிப்பு

மேலும் உலகெங்கிலும் உள்ள அனைத்து ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியான சுகாதார மையத்தை அடையுமாறு அறிவித்துள்ளதாகவும் விப்ரோ தெரிவித்துள்ளது. மேலும் நாங்கள் தொடர்ந்து நிலைமையை கண்கானித்து வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளது. எனினும் தங்களது வர்த்தக ரீதியில் இது வரை ஏதேனும் பாதிப்பினை கண்டுள்ளதா என்பது போன்ற கருத்துகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Corona virus outbreak: IT giant Wipro suspended employee travel to many other countries

IT giant Wipro suspended employees travel to corona virus impact countries. Also wipro said any employees were travelled to an affected place in the last few days, they advised to work from home for 14 days before resuming work in office.
Story first published: Thursday, March 5, 2020, 12:40 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X