இ-காமர்ஸ் நிறுவனங்கள் இனி இதெல்லாம் டெலிவரி செய்யக்கூடாது.. செக் வைத்த இந்திய அரசு..!

டெல்லி: கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க இந்திய அரசு மே-4 வரை ஊரடங்கினை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஏப்ரல் 20க்கு மேல் சில தளர்வுகள் அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நாளை முதல் அமேசான் பிளிப்கார்டு மற்றும் சில ஆன்லைன் நிறுவனங்கள் அத்தியாவசிய பொருட்களை மட்டும் டெலிவரி செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தற்போது இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் மீண்டும் அனுமதி கொடுத்துள்ளது. ஆனால் கூடவே சில கட்டுப்பாடுகளையும் கொடுத்துள்ளது.

இதெல்லாம் ரத்து

இதெல்லாம் ரத்து

அதன்படி ஆன்லைன் இ-காமர்ஸ் நிறுவனங்கள் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை மட்டும் டெலிவரி செய்து கொள்ளலாம். எனினும் ஏப்ரல் 20 முதல் அத்தியாவசியமற்ற பொருட்களை டெலிவரி செய்யக் கூடாது என்று உள்துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமையன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவித்துள்ளது.

லாக்டவுன் முடியும் வரை இது தான் ரூல்ஸ்

லாக்டவுன் முடியும் வரை இது தான் ரூல்ஸ்

இந்த தடையானது லாக்டவுன் முடிவுக்கு வரும் வரையில் அமலில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அது மட்டும் அல்ல இந்த பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு தேவையாக அனுமதிகள் மற்றும் பாஸ்கள் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் செக் வைக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களுக்கு அனுமதி

அத்தியாவசிய பொருட்களுக்கு அனுமதி

உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா வெளியிட்டுள்ள அறிக்கையின் படி வரும் திங்கட்கிழமை முதல் கொண்டு, அரசின் வழிகாட்டுதல் பின்பற்றப்பட வேண்டும். ஆக ஏப்ரல் 14 வரை உணவு மருந்து பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை டெலிவரி செய்து வந்த பிளிப்கார்ட் அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏப்ரல் 14க்கு பிறகு, அனுமதி வழங்கப்படலாம் என உத்தேசிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வீழ்ச்சி

ஏற்கனவே வீழ்ச்சி

மேலும் சில இடங்களில் அனுமதிகள் கொடுக்கப்பட்டாலும் நாடு முழுவதிலும் அனுமதிகள் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே முதன் முறை லாக்டவுன் செய்யப்பட்ட நிலையிலேயே எம்.எம்.சி.ஜி பொருட்கள் விற்பனையில் ஒரு கூர்மையான வீழ்ச்சி கண்டதாகவும் நீல்சன் தரவு கூறியுள்ளது.

பாதிப்பு இருக்கும்

பாதிப்பு இருக்கும்

பெரும்பாலான சில்லறை வர்த்தக கடைகள் பூட்டப்பட்டதன் விளைவாக இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக இ-காமர்ஸ் மற்றும் ரொக்க கடைகள் கடும் சரிவினைக் கண்டன. இந்த நிலையில் இந்த தடை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் விற்பனையில் நிச்சயம் வீழ்ச்சி காணக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+