இயற்கை வளங்கள் கொழிக்கும் அருணாச்சல பிரதேசத்தில் வண்ணமயமான மலர்ந்து ஜொலிக்கும் ஆர்கிட் மலர்கள், வெண்மையாய் படர்ந்து கிடக்கும் பனிச்சிகரங்கள், தூய்மையான பள்ளத்தாக்குகள், செழிப்பான பசுமைக்காடுகள், அழகிய சிற்றோடைகள், ஆன்மீக மணம் பரப்பும் கோவில்கள், எழில் கொஞ்சும் மலைகள் என சுற்றுலா வாசிகளின் கண்ணுக்கு விருந்தாக அமையும் வண்ணம் உள்ளன.
கடந்த 2017ம் ஆண்டு நிலவரப்படி ஆண்டுக்கு உள்நாட்டு சுற்றுலா வாசிகளின் வருகை சுமார் 26 லட்சம் பேர் ஆகும்.
இதே வெளிநாட்டினர் வருகையானது ஆண்டுக்கு சுமார் 52,000 பேராகும். ஆக இதன் மூலம் பல கோடி ரூபாய் வருவாயை கண்டு வருகிறது அருணாச்சல பிரதேசம்.
அனுமதி
இப்படி சுற்றுலாத்துறை மூலம் கணிசமான அளவு வருவாயை கொண்டுள்ள அருணாச்சல பிரதேசத்தில், பல நாடுகளில் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பாதுகாப்பு கருதி, வெளிநாட்டவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுமதி வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அருணாச்சல பிரதேச அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அனுமதி கொடுக்க வேண்டாம்
சீனாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் இம்மாநிலத்திற்குள் நுழைய வெளிநாட்டினருக்கு PAS க்கள் தேவை. இந்த நிலையில் தலைமைச் செயலாளர் நரேஷ்குமார் அனைத்து பிஏபி வழங்கும் அதிகாரிகளுக்கும், அடுத்த உத்தரவு வரும் வரை அனுமதி வழங்குவதை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸினால் 35 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவற்றின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவது முதன்மையாக சமீபத்தில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்தவர்களிடம் இருந்து அறியப்பட்ட நிலையில், அங்கு இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மூலம் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
அதிரடி முடிவு
இந்த நிலையில் தான் அருணாச்சல பிரதேசத்தில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க, பாதுகாக்கப்பட்ட பகுதி அனுமதி வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் சிக்கிம் வெளிநாட்டினரின் வருகைக்கு இதேபோன்ற தடைகளை அறிவித்த சில நாட்களுக்கு பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எவ்வளவு பாதிப்பு
இமாலய இராச்சியமான பூட்டான் இந்த நோயின் தாக்கத்தைக் குறைக்கும் முயற்சியில் வெளிநாட்டு பார்வையாளர்களுக்கான எல்லைகளை இரண்டு வாரங்களுக்கு மூடியுள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டில் சீனாவில் தோன்றிய இந்த வைரஸ் தற்போது பல நாடுகளுக்கு பரவியுள்ள நிலையில் 1,00,000 மேற்பட்டோருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், சுமர் 3,500 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எப்படியோங்க, மக்கள் பாதுகாப்பு கருதி எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை நல்ல விஷயமே.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications