இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது அத்தியாவசிய பொருட்கள் தவிர மற்ற பொருட்களை எடுத்து செல்ல இயலாத நிலை நிலவி வருகிது.
இது தான் இப்படி எனில், மறுபுறம் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் இன்னும் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், இன்னும் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஊரடங்கு உத்திரவினால் சில துறைகள் ஏற்கனவே பலத்த அடி வாங்கி வருகின்றன. அதில் ஒரு முக்கிய துறை தான் ஏற்றுமதி துறை.
ஆபத்தில் பல லட்சம் வேலைகள்
ஏற்றுமதி துறையில் உள்ள பொருளாதார சுணக்கம், இதனால் சுமார் 1.5 கோடி பேரின் வேலையும் ஆபத்தில் உள்ளதாகவும் இத்துறை சார்ந்த அதிகாரிகள் மத்தியில் கூறப்படுகிறது. இது குறித்து வெளியான அறிக்கையில் நாட்டில் பரவி வரும் கொரோனாவின் தாக்கம் காரணமாக நாட்டில் 1.5 கோடி பேர் வேலை இழக்கும் அபாயம் உருவாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் கொரோனா காரணமாக நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவே என்றும் கூறப்படுகிறது.
ஏற்றுமதி ஆர்டர்கள் முடக்கம்
இந்த கொடிய கொரோனாவின் காரணமாக பெரும்பாலான தொழில் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கியுள்ளன. இதனால் 50% அதிகமாக ஏற்றுமதி ஆர்டர்கள் ரத்தாகியுள்ளன. மேலும் தற்போது நாட்டில் நிலவி வரும் நிலையில் இன்னும் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எப்போதும் போல வர்த்தகம் இருக்குமா?
இதன் காரணமாக இனி வரும் காலங்களிலும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் போது ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகங்கள் முடங்கலாம். ஆக இந்த பிரச்சனையே முடிந்தாலும், முன்பு போல வர்த்தகம் இருக்குமா என்ற சந்தேகம் தான் நிலவி வருகிறது. ஆக இப்படி ஒரு சூழலில் தான், நாட்டில் 1.5 கோடி பேரின் வேலை கேள்விக்குறியாக உள்ளது.
சவாலான நிலையினை சந்தித்து வருகின்றன
அதுமட்டும் அல்ல இத்துறையில் ஈடுப்பட்டுள்ள நிறுவனங்கள் வங்கிகளில் வாங்கிய கடனை திரும்ப செலுத்துவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இந்தியா ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து எஃப்ஐஓ தலைவர் சரத்குமார் சராஃப் கூறிய அறிக்கையில், தற்போது நாட்டில்; நிலவி வரும் நெருக்கடியின் மத்தியில் ஏற்றுமதியாளார்கள் குறைவான ஆர்டர்களையே பெற்று வருகின்றனர்.
அரசு அனுமதி அளிக்க வேண்டும்
ஆக நிலுவையில் உள்ள ஆர்டர்களையாவது முடிக்க அரசு குறைந்த ஊழியர்களை கொண்டு உற்பத்தியை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட வேண்டும். அப்படி அனுமதி வழங்கப்படாவிட்டால், நிலைமை இன்னும் மோசமாகக் கூடும். ஆக அரசு இதனை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
போதிய நிவாரணம் அளிக்க வேண்டும்
அதுமட்டும் அல்லாது ஏற்றுமதி துறைக்கு நிவாரண திட்டங்கள் அளிக்கப்பட வேண்டும். வட்டியில்லா மூலதன் கடன்கள் வழங்குவதோடு, இபிஎஃப் மற்றும் இஎஸ் ஐ ஆகியவற்றுக்கும் போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
பொருளாதார இழப்பு
கொரோனா பெரும் தொற்று நோயினால் 2020ம் ஆண்டில் ஈடுசெய்ய முடியாது இழப்புகளை சந்திக்க வேண்டி இருக்கும். குறிப்பாக உலக வர்த்தகம் 2020ம் ஆண்டில் 13% முதல் 31% வரை குறைய வாய்ப்புள்ளது என உலக வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையில் கொரோனா வைரஸ் காரணமாக 21 நாள் லாக்டவுனால் பொருளாதாரம் கிட்டதட்ட 100 பில்லியன் இழப்பினை சந்திக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதாரத்தில் பெருத்த அடி விழலாம்
இந்த லாக்டவுனின் ஒவ்வொரு நாளும் 4.5 பில்லியன் டாலர் செலவினைத் தான் பொருளாதாரம் எதிர்கொள்கிறது. ஏற்கனவே பிரதமர் மோடியால் ஏப்ரல் 14 வரை அறிவிக்கப்பட்ட ஊரடங்கினால் 5 - 6% வரையில் பொருளாதாரம் குறைய வாய்ப்புள்ள நிலையில், இது நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டிலும் இரண்டாவது காலாண்டிலும் பெருத்த அடியினை விளைவிக்க கூடும் என்றும் ஆய்வாளர்கள் மத்தியில் கூறப்படுகிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications