இந்தியாவின் தரத்தை negative ஆக குறைத்த ஃபிட்ச்.. விளைவுகள் என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் இரண்டாம் கட்ட கொரோனாவின் தாக்கம் மிக மோசமாக அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் இது இந்தியாவின் பொருளாதார மீட்சியை தாமதப்படுத்த கூடும் என கருதி, ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் இந்தியாவின் தரத்தை BBB- என்று எதிர்மறையாக குறைத்துள்ளது.

 

தற்போது கொரோனாவின் இரண்டாம் கட்ட பரவலானது வேகமெடுத்து வரும் நிலையில், பொது நிதி நிலைமை கடுமையான சரிவினைக் கண்டு வருகின்றது.

இதனால் நிதி பற்றாக்குறை என்பது விஸ்வரூபம் எடுக்கலாம். ஏற்கனவே கடனில் இருக்கும் இந்தியா மேற்கோண்டு கடன் வாங்க நேரிடும். இப்படி இந்தியாவில் தொடர்ந்து நிச்சயமற்ற நிலையே நிலவி வருகின்றது.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

நடவடிக்கை எடுக்க வேண்டும்

இதன் எதிரொலியே இந்த தரக்குறைப்பு காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர். அரசு பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், கடனை குறைப்பதற்கும், ஜிடிபி விகிதத்தினை அதிகரிக்கரிக்கவும் நடவடிக்கை எடுங்கள் என பிட்ச் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நடப்பு ஆண்டிலும் வீழ்ச்சி தான்

நடப்பு ஆண்டிலும் வீழ்ச்சி தான்

மேலும் ஃபிட்ச் நிறுவனம் முன்னதாக நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி விகிதம் 12.8% ஆக இருக்கும் என்று கணித்திருந்தது. இதே 2023ம் நிதியாண்டில் 5.8% ஆக இருக்கும் என்றும் கணித்துள்ளது. இந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் காரணமாக மீண்டும் எதிர்மறையாக ஜிடிபியினை திருத்தம் செய்துள்ளது. 12.5% வளர்ச்சி காணலாம் என்று கூறியிருந்த நிலையில், தற்போது 7.5% வீழ்ச்சி காணலாம் என்றும் கணித்துள்ளது.

கொரோனாவில் இருந்து மீட்சி தாமதமாகும்
 

கொரோனாவில் இருந்து மீட்சி தாமதமாகும்

இரண்டாம் கட்ட பரவலானது மிக வேகமாக பரவி வரும் நிலையில், அதிலிருந்து மீட்பு என்பது தாமதமாகலாம். ஆக இது நடப்பு நிதியாண்டின் வளர்ச்சி விகிதத்தினை மேலும் சரிவுக்கு தள்ளுகின்றது என்றும் ஃபிட்ச் கணித்துள்ளது. எப்படி இருப்பினும் கடந்த நிதியாண்டின் பிற்பாதியில் தாக்கம், மீட்புக்கு உறுதுணை புரியலாம் எனவும் பிட்ச் கூறியுள்ளது.

பற்றாகுறை அதிகரிக்கும்

பற்றாகுறை அதிகரிக்கும்

மேலும் கடந்த ஆண்டில் நாடு தழுவிய முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. ஆனால் இந்த ஆண்டில் அப்படி இல்லை. முழு லாக்டவுன் இல்லை. மாறாக தடுப்பூசியும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. எனினும் அரசின் பொது பற்றாக்குறை ஜிடிபியில் 10.8% ஆக இருக்கும் (மத்திய அரசு 7.1%). அதேசமயம் பணவீக்கம் நடப்பு நிதியாண்டில் சராசரியாக 4.4% குறையலாம் என்றும் கணித்துள்ளது. இது கடந்த ஆண்டில் ரிசர்வ் வங்கி 2 - 6%க்குள் இருக்கலாம் என இலக்கு வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் பலவீனம்

இந்தியாவின் பலவீனம்

இந்தியாவின் நிதித்துறையின் பலவீனங்கள் பற்றியும் பிட்ச் சுட்டிக் காட்டியுள்ளது. இது சமீபத்திய வரவு செலவு திட்டத்தில் 20,000 கோடி ரூபாய் புதிய மூலதனத்தினை அரசு வங்கிகளுக்கு கொடுப்பதாக முன்மொழிந்ததை சுட்டிக் காட்டியது. அதனை வங்கிகளுக்கு செலுத்துமாறும் முன்மொழிந்துள்ளது.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

இதற்கிடையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,12,731 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளதி. இது தினசரி பாதிப்பில் மிக அதிகம். மேலும் இந்தியாவில் ஆங்காங்கே ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் மருந்து பற்றாக்குறைகளையும் சுட்டிக் காட்டியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Coronavirus impact: Fitch affirms India’s ratings at BBB, outlook negative due to coronavirus

Coronavirus impact.. Fitch affirms India’s ratings at BBB, outlook negative due to coronavirus
Story first published: Friday, April 23, 2021, 14:20 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X