டெல்லி: இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் எதிரொலியாக பல நாட்டிற்கு விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதன் எதிரொலியாக பல விமான நிறுவனங்கள் தங்களது வருவாயினை பெரிதும் இழந்துள்ளனர்.
இதனால் வருவாய் இழப்பினை ஈடுகட்டும் விதமாக மூத்த அதிகாரிகளுக்கான சம்பள விகிதத்தினை குறைத்து வருகின்றன.
சம்பளம் குறைப்பு
கடந்த வாரத்தில் இண்டிகோ, ஸ்பெஸ்ஜெட் மற்றும் ஏர் இந்தியா என பல நிறுவனங்கள் இந்த சம்பள குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டன. இந்த நிலையில் தற்போது கோஏர் நிறுவனம் தங்கது மூத்த அதிகாரிகளுக்கு 50% சம்பளத்தினை குறைத்துள்ளதாக அந்த விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வினய் துபே தனது ஊழியர்களிடம் சனிக்கிழமையன்று மின்னஞ்சலில் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பணி நீக்கம்
கொரோனா வைரஸின் பரவலுக்கு மத்தியில், கோஏர் நிறுவனம் தனது பெரும்பகுதியான வருவாயை இழந்துள்ளது. அதிலும் ஏற்கனவே வெளிநாட்டு விமானிகளை பணி நீக்கம் செய்து, அதன் ஊழியர்கள் பலரினை ஊதியம் இல்லாமல் விடுப்பு அளித்துள்ளது. இந்த நிலைட்யில் உயர் மட்ட அதிகாரிகள் பலருக்கு 50% சம்பள குறைப்பை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மோசமான நிலையை மேம்படுத்த போராடுவோம்
எனினும் இந்த நடவடிக்கை தற்காலிகமானவை. கோஏர் கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள இந்த கடுமையான சவாலை எதிர்த்துப் போராடும் நோக்கத்தில் உள்ளது. இது மகாராஷ்டிரா மக்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக்காக பணியிடங்களை முற்றிலும் மூடுவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாங்கள் எங்கள் ஊழியர்களைக் வலியுறுத்தி வருகிறோம் என்றும் கோஏர் தெரிவித்துள்ளது.
பாதிப்பு அதிகரிக்கலாம்
கொரோனாவின் உக்கிர தாண்டவத்தினால் பல்வேறு நாடுகளும் தங்களது நாடுகளுக்கு விமான சேவையினை தடை செய்துள்ள நிலையில், இந்தியாவிலும் அனைத்து நாடுகளுக்கான விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. அதிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கத்தினால் இன்னும் விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்படலாம் என்றும் சில தினங்களுக்கு முன்பு வெளியான அறிக்கைகளில் கூறுகின்றன.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications