இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதமானது கடந்த 2020 - 21ம் நிதியாண்டில் 6.6% வீழ்ச்சி கண்டுள்ளதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த வீழ்ச்சி விகிதமானது 7.3 ஆக வீழ்ச்சி கண்டதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 202- - 21ம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்றின் மத்தியில் பொருளாதாரம் மிக மோசமான வீழ்ச்சியினை கண்டது.
முழு லாக்டவுன்
அந்த சமயத்தில் நாடு மழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக நாடு தழுவிய முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பொருளாதார நடவடிக்கைகள் அனைத்தும் முடங்கின. இந்த காலக்கட்டத்தில் அத்தியாவசியம் தவிர மற்ற நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன. மொத்தத்தில் நாடே ஸ்தம்பித்து போயிருந்தது எனலாம். இந்த நிலையில் தான் பொருளாதார வளர்ச்சி விகிதமானது மோசமான சரிவினைக் கண்டது.
தேசிய புள்ளியியல் ஆணையம்
இதற்கிடையில் தேசிய புள்ளியியல் ஆணையம் இந்தியாவின் ரியல் ஜிடிபி விகிதமானது 2020 - 21ம் நிதியாண்டில் 3.7% வளர்ச்சி இருந்ததாக கூறியுள்ளது. இது முன்னதாக 4% ஆக மதிப்பிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக வெளியிடப்பட்ட தரவுகளில் சில தொழிற்துறை தரவுகள் சேர்க்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது அவற்றின் தரவுகள் சேர்க்கப்பட்டுள்ளதே இதற்கு காரணம் என்றும் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
ஜிவிஏ
2020 - 21ம் நிதியாண்டில் ரியல் ஜிவிஏ விகிதமானது 4.8% சரிவடைந்துள்ளது. இது 2019 - 20ல் 3.8% வளர்ச்சி கண்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
202- -21ம் ஆண்டில் முதன்மைத் துறை (விவசாயம், மீன்பிடித்தல் மற்றும் சுரங்கம், குவாரிகள்), இரண்டாம் நிலைத் துறை (உற்பத்தி, மின்சார உற்பத்தி, கேஸ், தண்ணீர் சப்ளை, பயன்பாட்டு சேவைகள், கட்டுமானம்), மூன்றாம் நிலைத் துறை (சேவைத் துறைகள்) வளர்ச்சி விகிதமானது முறையே 1.6%, -2.8%, -7.8% ஆக வீழ்ச்சி கண்டுள்ளது. இதே வளர்ச்சி விகிதமானது முன்னதாக முறையே 1.9%, -6.8% மற்றும் -8.4% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தனி நபர் வருமானம்
பெயரளவிலான நிகர தேசிய வருமானம் (NNI) 2020 - 21ல் 171.94 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது கடந்த 2019 - 20ல் 177.17 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்கக்கது. இது முந்தைய ஆண்டினை காட்டிலும் 2.9% வீழ்ச்சி கண்டுள்ளது.
இதே தனி நபர் வருமானம் என்பது 1,32,115 ரூபாய் மற்றும் 1,26,855 ரூபாய் முறையாக 2019 - 20 மற்றும் 2020 - 21ம் ஆண்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஓமிக்ரான் அச்சம்
மொத்தத்தில் தனி நபர் வருமானம் முதல், நாட்டின் வருவாய், தொழிற்துறை வளர்ச்சி, சேவைத் துறை வளர்ச்சி என ஒட்டுமொத்த துறையும் 2020 - 21ம் ஆண்டில் பெரும் சரிவினைக் கண்டுள்ளன. இவைகள் தற்போது மீட்சி கண்டு வந்து கொண்டு இருந்தாலும், ஓமிக்ரான் மத்தியில் நிலையற்றதாகவே பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications