கொரோனாவா விடுங்க.. நெருக்கடியான காலகட்டத்திலும் லாபம் தரும் 14 பங்குகள்.. அசத்தல் பரிந்துரைகள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டில் நிலவி வரும் நெருக்கடியான காலக்கட்டத்தில் முதலீடு என்றாலே, ஒரு கேள்விக்குறியாகத் தான் உள்ளது. அதிலும் பங்கு சந்தையில் முதலீடு என்றால் பயந்து ஒதுங்குபவர்கள் தான் அதிகம்.

 

அதிலும் தற்போது கொரோனா இரண்டாம் கட்ட பரவலுக்கு மத்தியில், பங்கு சந்தைகள் அதிக ஏற்ற இறக்கத்தில் காணப்படுகின்றன. இப்படி இருக்கையில் எதில் முதலீடு செய்வது? லாபம் இல்லாவிட்டாலும், முதலீடாவது பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே பலரின் எண்ணமாக உள்ளது.

5.64 சதவீதமாக உயர்ந்தது ரீடைல் பணவீக்கம்..!

அப்படி நினைப்பவர்களுக்காகவே நிபுணர்கள் சில பங்குகளை பரிந்துரை செய்துள்ளனர். அதனை பற்றித் தான் இந்தக் கட்டுரையில் பார்க்க இருக்கிறோம்.

மூலதன செலவினம் – பங்கு பரிந்துரை

மூலதன செலவினம் – பங்கு பரிந்துரை

மூலதன செலவினங்களுக்கான செலவிடப்படும் துறை சார்ந்த சில பங்குகள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இந்த பங்குகள் நடப்பு நிதியாண்டில் நல்ல லாபம் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் அல்ட்ராடெக் சிமெண்ட், அசோக் லேலண்ட், கே என் ஆர் கன்ஸ்டிரக்சன், எல் & டி உள்ளிட்ட பங்குகள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

ஜே எஸ் டபள்யூ எனர்ஜி

ஜே எஸ் டபள்யூ எனர்ஜி

ஜே எஸ் டபள்யூ எனர்ஜி- முதலீட்டாளர்கள் அரசாங்கத்தின் அறிவிப்புகளுக்கு ஏற்ப, தங்களது போர்ட்போலியோவில் இந்த எனர்ஜி பங்குகளை சேர்க்கலாம். அதோடு இந்த நிறுவனம் நல்ல லாபம் மற்றும் வலுவான செயல்பாட்டினை கொண்டுள்ளது. இதனால் இந்த பங்கினை வாங்கலாம் என பரிந்துரைத்துள்ளனர்.

Jubilant Ingrevia
 

Jubilant Ingrevia

Jubilant Ingrevia நிறுவனம் சமீபத்தில் தான் ஜீபிலண்ட் லைஃப் சயின்ஸில் இருந்து நீக்கப்பட்டது. இந்த பங்கின் PE விகிதம் 17 ஆகும். இது ஒரு கெமிக்கல் பங்கு என்பதால், இதுவும் முதலீட்டாளர்களுக்கு பெரியளவில் இல்லாவிட்டாலும் நிலையான ஒரு லாபகரமான பங்காக இருக்கலாம் என கூறப்படுகிறது. CESC என்பது ஒரு ஒருங்கிணைந்த மின்சார பயன்பாடாகும். இதுவும் நல்ல லாபம் கொடுக்கும் பங்காக நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

ஜெ குமார் இன்ஃப்ராபுராஜக்ட்ஸ் லிமிட்டெட்

ஜெ குமார் இன்ஃப்ராபுராஜக்ட்ஸ் லிமிட்டெட்

இந்த துறையை சார்ந்த நிறுவனங்கள் பலவும் கடனால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜெ குமார் இன்ஃப்ராபுராஜக்ட்ஸ் லிமிட்டெட் கடன் இல்லாத ஒரு நிறுவனமாகும். ஏற்கனவே 12,000 கோடி ரூபாய்க்கான ஆர்டர் புத்தகத்தினை கொண்டுள்ளது. இதற்கான ஆதாரத்தினையும் கொண்டுள்ளது. ஆக இந்த பங்கானது நல்ல லாபத்தினை கொடுக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

டாடா கன்சியூமர் பரிந்துரை

டாடா கன்சியூமர் பரிந்துரை

டாடா நுகர்வோர் தற்போதைய லெவலில் ஒரு முதலீடாகவே கருதலாம். ஏனெனில் மக்கள் தொடர்ந்து நுகர்வோர் பொருட்களை வாங்குவார்கள். இதனால் இதன் பங்கு விலையும் நிலையான லாபத்தினை கொடுக்கலாம்.

ஜே எஸ் டபள்யூ எனர்ஜி - மின்சார பயன்பாடானது மீண்டும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த துறையில் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க கட்டுப்படுத்தப்படாது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதன் பங்கு விலையும் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்த்தி டிரக்ஸ் லிமிட்டெட்

ஆர்த்தி டிரக்ஸ் லிமிட்டெட்

ஆர்த்தி டிரக்ஸ் லிமிட்டெட் நிறுவனம் மருந்து துறையில் செயல்படும் ஒரு ஸ்மால் கேப் நிறுவனமாகும். இது ஒரு API, கெமிக்கல்ஸ், பார்மா துறையில் இண்டர்மீடியேட்ஸ் சேவை செய்து வருகின்றது. ஆக தற்போதைய நிலையில் மருத்துவ பங்குகள் உன்னிப்பாக கவனித்து வரப்படுகின்றன. ஆக இதுவும் நல்ல லாபம் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மருந்து பங்குகள்

மருந்து பங்குகள்

டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டரீஸ், டாக்டர் லால் பாத் லேப்ஸ், தற்போதைய நெருக்கடியான நிலையில் மருத்துவ துறையின் பங்கு என்பது, எவ்வளவு முக்கியம் என்பது அறிந்த ஒரு விஷயம் தான். அதோடு டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டரீஸ் கொரோனா தடுப்பூசியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆக மேற்கண்ட இரு பங்குகளுமே நல்ல லாபத்தினை கொடுக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிட்டெட்

ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிட்டெட்

ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் விரைவாக நுகரப்படும் நுகர்வோர் பொருட்கள் சந்தையை சார்ந்த ஒரு நிறுவனமாகும். இந்த நிறுவனம் வலுவான விநியோக சங்கிலி மற்றும் தேவையை கொண்டுள்ளது. ஆக கொரோனா காலமாக இருந்தாலும், இந்த பங்கின் விலை ஏற்றம் காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. (இந்த பங்குகள் மணிக்கன்ட் ரோல் தளத்தில் வெளியானதை அடிப்படையாகக் கொண்டது. உங்களுக்கு நம்பகரமான ஆலோசகர்களுடன் ஆலோசித்து பின் இறுதி முடிவினை எடுக்கலாம்)

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Coronavirus impact: Here are 14 stocks for stable returns

Stock recommendations.. Here are 14 stocks for stable returns
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X