நாட்டில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் 2020ம் ஆண்டில் இந்தியாவில் வளர்ச்சியை 5.3% ஆக குறைத்துள்ளது மூடிஸ்.
இதன் முந்தைய கணிப்பின் படி 5.4% ஆக மதிப்பிட்டிருந்தது.
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக, நாட்டில் தேவை குறைந்துள்ளது.
கொரோனா பரவல்
முதன் முதலில் சீனாவில் ஆரம்பித்த வைரஸ் பரவலானது தற்போது சீனாவில் தற்போது சற்று கட்டுப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் தற்போது சீனாவினை விட இத்தாலி, தென் கொரியா, சிங்கப்பூர், அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஈரான் உள்ளிட்ட பல நாடுகளில் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது.
பயணக் கட்டுப்பாடு
சீனா உள்ளிட்ட பெரும் பொருளாதார நாடுகளின் பொருளாதாரத்தினையே என்ன சேதி என்று கேட்டுள்ள இந்த வைரஸ், நிச்சயம் உலகப் பொருளாதாரத்தில் ஒரு பகுதியை கொள்ளையடித்துக் கொள்ளும் என்றும் நம்பப்படுகிறது. மேலும் நாளுக்கு நாள் உலகளவில் அதிகரித்து வரும், கொரோனா தாக்கத்தினால் உலகின் பல்வேறு நாடுகளுக்கு பயணத்தை கட்டுபடுத்தியுள்ளது.
விநியோக சங்கிலியை பாதிக்கலாம்
இது சர்வதேச அளவில் விநியோக சங்கிலியில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது. இது கொரோனாவினால் நுகர்வு மற்றும் முதலீட்டினையும் குறைக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் இது எண்ணெய் மற்றும் மற்ற காமாடிட்டிகளின் விலையும் மேலும் ஜூன் வரையிலும் சற்று குறைவாக தற்போதுள்ள நிலையிலேயே இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வளர்ச்சி கணிப்பு
இதே போல் ஜி20 நாடுகளுக்கான வளர்ச்சி கணிப்புகளை மூடிஸ் 2.1% ஆக திருத்தியுள்ளது. அதே போல் சீனாவின் வளர்ச்சி கணிப்பினை 2020ல் 4.8% ஆக குறைத்துள்ளது. இது முன்பு 5.2% ஆக இருந்துள்ளது. இதே அமெரிக்காவை பொறுத்தவரையில் 1.5% வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. இது முன்பு 1.7% ஆக மதிப்பிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
வீழ்ச்சி கண்டு வரும் பொருளாதாரம்
சர்வதேச அளவில் அதிகரித்து வரும் மந்த நிலைக்கு மத்தியில், கொரோனாவினால் மேலும் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டு வருகிறது. குறிப்பாக நுகர்வில் தொடர்ச்சியான பின்னடைவு, வணிக நிறுவனங்கள் தொடர்ந்து மூடல், இது வருவாயை தொடர்ந்து வீழ்ச்சியடைய வைக்கும். மேலும் இது பணி நீக்கங்களை உண்டாக்கலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. ஆக இதற்கு மத்தியில் தான் மூடிஸ் வளர்ச்சி விகிதத்தை மீண்டும் 5.3% ஆக குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications