உலகெங்கிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஒவ்வொரு துறையும் பெரும் வீழ்ச்சியினை சந்தித்து வருகின்றன.
இதற்கிடையில் கொரோனா வைரஸ் தாக்கம் நீடித்து வரும் நிலையில், எரிபொருளுக்கான தேவை மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதால் எண்ணெய் விலையானது குறைந்து வருகிறது.
முந்தைய அமர்விலேயே குறைந்த எண்ணெய் விலையானது, இன்றும் குறைந்துள்ளது. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் அமெரிக்காவின் எண்ணெய் இருப்பு குறித்தான டேட்டாவில், எதிர்பார்த்ததை விட இருப்புகள் குறைவாக இருப்பதாக வெளியாகியுள்ளது.
WTI கச்சா எண்ணெய் விலை
இந்த நிலையில் இன்று டபள்யூடிஐ கச்சா எண்ணெய் விலையானது 2.97% வீழ்ச்சி கண்டுள்ளது. இது தற்போது பேரலுக்கு 1.29 டாலர் குறைந்து, 41.81 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. கடந்த மூன்று தினங்களாகவே ஏற்றம் கண்டு வந்த WTI கச்சா எண்ணெய் விலையானது, இன்று வீழ்ச்சி கண்டுள்ளது.
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை
இதுவே பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையானது 2.76% வீழ்ச்சி கண்டுள்ளது. தற்போது பேரலுக்கு 1.25 டாலர்கள் குறைந்து 44.12 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இதுவும் மூன்று தினங்களாக ஏற்றம் கண்டு வந்த நிலையில், தற்போது கிட்டதட்ட 3% வீழ்ச்சி கண்டுள்ளது.
எம்சிஎக்ஸ் கச்சா எண்ணெய் விலை
எம்சிஎக்ஸ் கச்சா எண்ணெய் விலையானது பேரலுக்கு 2.60% வீழ்ச்சி கண்டுள்ளது. தற்போது பேரலுக்கு 85 ரூபாய் குறைந்து, 3,144 ரூபாய் குறைந்தும் வர்த்தகமாகி வருகிறது. எம்சிஎக்ஸ் சந்தையிலும் கடந்த மூன்று தினங்களாகவே ஏற்றம் கண்டு வந்த நிலையில், இன்று வீழ்ச்சி கண்டு வருகிறது.
எரிபொருள் தேவை
கடந்த நான்கு வாரங்களில் எண்ணெய் தேவையானது 14% குறைந்துள்ளது என இஐஏ தரவுகள் காட்டுகின்றன. உலகளாவிய எண்ணெய் தேவையானது விரைவில் தொற்று நோய்க்கு மத்தியில், நான்காவது காலாண்டில் மீள வேண்டும் என்றும் சவுதி எரிசக்தி அமைச்சர் புதன் கிழமையன்று தெரிவித்தார்.
பெட்ரோல், டீசல் விலை
இதற்கிடையில் ஒபெக் நாடுகள் மீண்டும் உற்பத்தி குறைப்பை அமல்படுத்த திட்டமிட்டு வருகிண்றன. எனினும் உலகெங்கிலும் பரவி வரும் கொரோனா காரணமாக எண்ணெய் தேவையானது எப்போது மீண்டு வரும் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலையானது குறைந்து வருகிறது. எனினும் பெட்ரோல் டீசல் விலையில் இதன் எதிரொலி இருக்குமா? என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
More From GoodReturns

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications