கொரோனா வைரஸ் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பல நாடுகளில் கொரோனாவால் புலம்பெயர் தொழிலாளர்களின் நிலைமை மோசமாக உள்ளதாகவும், அவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருவதாகவும் செய்திகள் கூறுகின்றது.
குறிப்பாக சிங்கப்பூரில் கொரோனாவின் பாதிப்பினைக் குறைக்க அதிகாரிகள் வேகமாக செயல்பட்டு வந்தாலும், லாக்டவுன் தளர்வுகளுக்கு பிறகு, புலம் பெயர் தொழிலாளர்கள் தங்குமிடங்களில் இருந்து கொரோனா வழக்குகள் அதிகரித்து வருகின்றன என்று கூறப்படுகிறது.
வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பிரச்சனை
வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு இந்த கொரோனாவானது பல அவல நிலையினை உருவாக்கியுள்ளது. குறிப்பாக பொருளாதார ரீதியாக அவர்களுக்கு பெரும் பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளது. பயண கட்டுப்பாடுகள் காரணமாக வீட்டுக்கு திரும்ப செல்வதையும் கடினமாக்கியுள்ளது. மேலும் பணப்பரிமாற்ற அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளதால், தங்கள் குடும்பங்களுக்கு பணம் அனுப்ப முடிவதில்லை.
நீடித்து வரும் அவல நிலை
மேலும் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியில், பல வெளிநாட்டு ஊழியர்கள் தங்களது வேலையினை இழக்கும் நிலையும் உள்ளது. அவ்வாறு அவர்கள் தங்களது வேலையினை இழக்கும் போது அது இன்னும் பிரச்சனையாகவே அமையும். இந்த சமயத்தில் அவர்கள் தங்கள் குடும்பத்தினர் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு பணம் அனுப்ப வேண்டிய நிலை இருந்தாலும் அதனையும் அனுப்ப முடியாது. அப்படியே பணம் அனுப்பினாலும் அதனை வெளிநாடுகளில் உள்ளவர்கள் எடுக்க முடியாத நிலையே நீடித்து வருகிறது.
வேலையினை பெற சிறிது காலம் ஆகும்
மேலும் தற்போது வேலையினை இழந்த வெளிநாட்டு தொழிலாளர்கள் மீண்டும் வேலையினை பெற மீண்டும் சிறிது காலம் அல்லது வருடம் கூட ஆகலாம். ஆக இதன் காரணமாக பல பிரச்சனைகள் ஏற்படலாம். உலகெங்கிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான வீடுகளுக்கு அவை ஆதாரமாக இருக்கலாம். சொல்லப்போனால் பல நாடுகளில் தேசிய வருமானத்தில் பெரும் பகுதியினை கொண்டுள்ளன.
பணம் அனுப்புவது குறையும்
இந்த பிரச்சனையால் எழும் முதல் பிரச்சனையே பணப்பரிமாற்ற விகிதம் வெகுவாக குறைந்து விடும் என்பது தான். 2020ம் ஆண்டில் இந்த பரிமாற்ற விகிதமானது 20 சதவீதம் குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 109 பில்லியன் டாலர் குறைந்து, 445 பில்லியன் டாலராக குறையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதே அன்னிய நேரடி முதலீடுகளில் 37% சரிவினைக் காணலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு நெருக்கடி தான்
சில நாடுகளின் வருமானத்தின் மூன்றில் ஒரு பங்காக உள்ளது இந்த பணப்பரிமாற்றம். உதாரணத்திற்கு கஜகஸ்தான், கிர்கிஸ்தான், நேபாளம், ஹைட்டி, சோமாலியா உள்ளிட்ட 60 நாடுகள், தங்களது தேசிய வருமானத்தில் 5% அதிகமாக பணம் அனுப்பப்படுகின்றது. இதே இந்தியாவில் பணம் அனுப்புவது அன்னிய நேரடி முதலீட்டி இரு மடங்காகும். ஆக இந்த தொகையில் குறையும் எனில், அதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகள் பெரும் நெருக்கடியினை சந்திக்ககூடும்.
வேலையினை இழக்க நேரிடலாம்
இந்த நெருக்கடியுடன், கொரோனாவால் தடை செய்யப்பட்டுள்ள போக்குவரத்து, சமூக இடைவெளி விதிகள் உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளால், புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது வேலையினை இழக்க நேரிடலாம். இதனால் அவர்களின் பணம் அனுப்பும் திறனும் குறையும். குறைந்து வரும் எண்ணெய் விலையும் பணம் பரிமாற்றத்தில் கணிசமான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபிள் கணிசமாக பலவீனமடைந்துள்ளது.
சொந்த நாடுகளுக்கு திரும்ப வேண்டிய கட்டாயம்
இப்படி வெளிநாடுகளில் வேலை செய்து வரும் தொழிலாளர்கள் கொரொனாவின் காரணமாக பலர் தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்பும் கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக இந்தியாவில் கேராளவை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் வளைகுடா நாடுகளில் இருந்தவர்கள். அவர்களின் பல ஆயிரம் பேர் வீடு திரும்பியுள்ளனர்.
மோசமான நெருக்கடி
இந்த நெருக்கடி நிலையானது 2009ம் வருடத்தில் இருந்ததை விட மோசமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இது ஒவ்வொரு மட்டத்திலும் உள்ள மக்களையும் பாதித்துள்ளது. ஆனால் உண்மையான நெருக்கடியினை நாம் அடுத்த 12 -24 மாதங்களில் காணலாம். ஏற்கனவே இந்த பரிமாற்ற விகிதம் குறையத் தொடங்கியுள்ளது. இனி வரும் காலங்களில் இன்னும் குறையலாம் என்ற நிலையில், இது இன்னும் நெருக்கடியான நிலையினைத் தான் உருவாக்கும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications