டெல்லி: கொரோனா தொற்று நோய் காரணமாக பல்வேறு சில்லறை விற்பனையாளர்களால் சுமார் 80,000 பேரின் வேலை பறிபோகலாம் என தொழில்துறை அமைப்பான RAI நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்திய சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் 768 சில்லறை விற்பனையாளர்களிடம் ஆய்வினை நடத்தியது. இந்த நிலையில் இந்தியா முழுவதும் சில்லறை விற்பனையகங்களில் சுமார் 3,92,963 பேர் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் கொரோனாவினால் ஏற்படும் தாக்கம் அவர்களது வர்த்தகம் மற்றும் ஊழியர்கள் மீது எந்த அளவு பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதினை கண்டறியவும் இந்த ஆய்வினை நடத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
சிறு சில்லறை விற்பனையாளர்கள் பணி நீக்கம்
இதில் சிறு விற்பனையாளர்கள் 30% பணி நீக்கம் செய்யலாம் என எதிர்பார்ப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிய வந்துள்ளது. இந்த எண்ணிக்கையானது நடுத்தர அளவிலான சில்லறை விற்பனையாளார்கள் 12% பேரினையும், இதே பெரிய சில்லறை விற்பனையாளர்கள் 5% பேரினையும் பணி நீக்கம் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.
20% ஊழியர்களை குறைக்கலாம்
ஆக மொத்தத்தில் இந்த ஆய்வில் ஒட்டுமொத்தமாக பங்களித்த சில்லறை விற்பனையாளர்களில், தங்கள் ஊழியர்களில் 20% பேரினை பணி நீக்கம் செய்யலாம் என்று எதிர்பார்ப்பதாகவும் ராய் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த 20% பேரில் சுமார் 78,592 பேர் இடம் பெறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுவதாகவும் ராய் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பணி புரியும் மொத்த ஊழியர்கள்
தொழில் துறை அமைப்பின் கூற்றுப்படி, ஆய்வில் இடம்பெற்றுள்ள சிறிய சில்லறை விற்பனையாளார்கள் 100க்கும் குறைவான நபர்களையே பயன்படுத்துகின்றனர். பதிலளித்தவர்களில் 65% பேர் இதில் உள்ளனர். நடுத்தர சில்லறை விற்பனையாளார்களில் பதில் அளித்தவர்களில் 24% பேர், 100 - 1000 ஊழியர்களைக் கொண்டுள்ளனர்.
விற்பனை நிலையங்கள் மூடல்
இதே பெரிய சில்லறை விற்பனையாளர்களில் பதில் அளித்தவர்களில் 11% பேர், 1000 பேருக்கும் மேல் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் மார்ச் 25 லாக்டவுனுக்கு பிறகு உணவு அல்லாத சில்லறை விற்பனையாளர்களில் 95% அதிகமானவர்கள் தங்கள் விற்பனை நிலையங்களை மூடி விட்டனர். மேலும் இந்த காலகட்டத்தில் அவர்கள் எந்தவித வருவாயினையும் பார்க்கவில்லை.
வருவாய் அதிகரிப்பது கஷ்டம் தான்
இவர்களில் பெரும்பாலானவர்கள் அடுத்த ஆறு மாதங்களில் கடந்த ஆண்டு வருவாயில் 40% கிடைத்தாலே அது பெரிய விஷயம் என்றும் எதிர்பார்க்கிறார்கள் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதே உணவு பொருட்கள் சில்லறை விற்பனையாளர்கள் அடுத்த ஆறு மாதங்களில், கடந்த ஆண்டு வருமானத்தில் 56% மட்டுமே கிடைக்கும் என்றும் எதிர்பார்ப்பதாகவும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
உணவு அல்லாத துறை அதிக நஷ்டம்
மேலும் உணவு அல்லாத அத்தியாவசியமற்ற சில்லறை விற்பனையாளர்கள் தான் அதிகளவில் நஷ்டத்தினை காண்பார்கள் என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும் சில்லறை விற்பனையாளர்களில் 70% பேர் அடுத்த ஆறு மாதங்களில் அவர்களின் விற்பனை மீண்டு வரலாம் என எதிர்பார்ப்பதாகவும், இதே 20% பேர் 1 வருடத்திற்கும் மேல் ஆகலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
எண்ணிக்கையை குறைக்க வேண்டிய கட்டாயம்
மேலும் அரசின் உதவி இல்லாவிட்டால் சில்லறை விற்பனையாளர்கள் 20% ஊழியர்களை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் தான் உள்ளனர் என்று ராய் தெரிவித்துள்ளது. அதோடு அவர்களுக்கு ஜிஎஸ்டி சலுகை, வரி,கடன் சலுகை கொடுக்க வேண்டும். இதன் மூலம் அவர்களின் வணிகத்தினை ஊக்கப்படுத்த வேண்டும். இதன் மூலம் 2020 - 21ல் நஷ்டத்தினை தவிர்க்க உதவ வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications