மும்பை: இந்தியாவின் முன்னணி நுகர்வோர் நிறுவனங்கள் மற்றும் சில்லறை வர்த்தக நிறுவனங்கள் தங்களது வர்த்தகம் சிறு நகரங்களில் பெரும் வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்துள்ளன. ஆனால் நகரங்களில் அவர்களின் வளர்ச்சி பின் தங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளன.
இது குறித்து வெளியான இடி செய்திக் குறிப்பில், இந்தியாவின் டாப் கன்சியூமர் மற்றும் சில்லறை வர்த்தக நிறுவனங்கள், சிறு நகரங்களில் தங்களது எலக்ட்ரானிக் மற்றும் பேஷன், தினசரி பயன்படுதப்படும் மளிகை பொருட்கள் விற்பனையானது, சிறு நகரங்களில் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது
குறிப்பாக சிறு நகரங்களில் தேவையானது கொரோனாவுக்கு முந்தைய லெவவை விட அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளன. எனினும் நகரங்களில் இந்த விகிதம் மேம்படவில்லை என்றும் மேற்கண்ட நிறுவனங்கள் கூறியுள்ளன.
சீனாவில் சிங்கிள் பசங்க அதிகம் போல.. 56 பில்லியன் டாலருக்கு ஷாப்பிங்..!

ரிலையன்ஸ் ரீடெயில்
நாட்டின் மிகப்பெரிய சில்லறை வர்த்தக நிறுவனமான ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனம், கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில் அதன் பேஷன் வர்த்தகம் இரு மடங்கிற்கு மேலாக வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அது மட்டும் அல்ல அக்டோபர் -டிசம்பர் காலாண்டில் கொரோனாவுக்கு முநதைய நிலையை எட்டலாம் என்றும் கணித்துள்ளது.

மெக்டொனால்டு & சாம்சங்
இதே மெக்டொனால்டு நிறுவனம், சிறு நகரங்களில் 90 - 110% வளர்ச்சி கண்டுள்ளதாகவும், இது கொரோனாவுக்கு முன்பு இருந்த வளர்ச்சி என்றும் தெரிவித்துள்ளது.
இதே சாம்சங் இந்தியா நிறுவனம் அதன் மொத்த வளர்ச்சி விகிதம் 32% அதிகரித்துள்ளதாகவும், இதே சிறு நகரங்களில் 36% மேல் வளர்ச்சி கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

டல்லடிக்கும் மெட்ரோ நகரங்கள்
அரை டஜன் நிறுவனங்களுக்கும் மேலாக, சாம்சங், எல்ஜி மற்றும் ஆதித்யா பிர்லா பேஷன் அன்ட் ரீடெயில் உள்ளிட்ட பல நிறுவனங்களில் சிறு நகரங்களில் தங்களது விற்பனை வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்துள்ளன. இதே மெட்ரோ நகரங்களில் கொரோனா காரணமாக மால்களில் இருந்து விலகி செல்கின்றனர். அல்லது செலவினை குறைப்பதற்காக தவிர்க்கின்றனர் என்றும் கூறியுள்ளது.

எல்ஜி என்ன சொல்கிறது?
நாட்டின் மிகப்பெரிய அப்ளையன்ஸ் நிறுவனமான எல்ஜி, அதன் வருவாயில் பாதி டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களில் இருந்து வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது சரியான பருவமழை காரணமாக சிறு நகரங்களிலும் கிராமங்களிலும் உற்பத்தி அதிகரித்துள்ளது. இது மக்களின் கையில் பணப்புழக்கத்தினை அதிகரித்துள்ளது என்று எல் ஜி இந்தியாவின் தலைவர் விஜய் பாபு கூறியுள்ளார்.

நுகர்வு சரிவு
இதே பெரும் நகரங்களில் இருந்து சிறு நகரங்களில் உள்ள சொந்த ஊர்களுக்கு சென்ற வெள்ளை காலர் தொழிலாளர்கள் வீட்டில் இருந்து தொடர்ந்து வேலை செய்வதால், நுகர்வு குறைந்துள்ளது.
இதே சாம்சங் இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவர், ராஜூ புல்லன் விற்பனை விகிதம் அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக சிறு நகரங்களில் நன்கு வளர்ச்சி கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

பெரிய நகரங்களில் குறைவு
சிறிய நகரங்களில் குறிப்பாக உயர் தெரு கடைகளில் முந்தைய விற்பனையுடன் நெருக்கமாக உள்ளன. நாங்கள் பெரிய கடைகளுக்கு, பெரிய நகரங்களுக்கு வரும்போது தான் விற்பனை குறையத் தொடங்குகிறது என்று ஆதித்யா பிர்லா பேஷன் மற்றும் சில்லறை நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆஷிஷ் தீட்சித் முதலீட்டாளர்களுக்கான அழைப்பில் கூறியுள்ளார்.

பல இடங்களில் நல்ல வளர்ச்சி
மேற்கு மற்றும் தென்னிந்திய நகரங்களில் செயல்படும் மெக்டொனால்டு நிறுவனம், சில சிறு நகரங்களில் அதனை விற்பனை கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டியுள்ளதாகவும், சில இடங்களில் 90 - 110% வளர்ச்சி கண்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளது. ஆக இன்றளவிலும் நகர்புறங்களில் செலவழிப்பு குறைவாக உள்ளது என இத்துறையினர் கூறுகின்றனர்.