கொரோனாவின் கொடூர தாண்டவம்.. ஸ்மார்ட்போன் விலை 6-7% அதிகரிக்குமாம்.. இப்பவே வாங்கிடுங்க..!

எல்லையை தாண்டி விஸ்வரூபம் எடுத்து ஆடிக் கொண்டிருக்கும் கொரோனாவின் தாக்கத்திற்கு, இதுவரை சுமார் 1,665 பேர் இறந்துள்ளதாகவும், சுமார் 68,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இது ஒரு புறம் எனில், சீனாவே மரண அமைதி காணுவது போல், சீனாவில் அனைத்து தொழிற்சாலைகளும், சில்லறை கடைகள், சிறு உற்பத்தியாளர்கள், உணவகங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக சீனாவில் பெரிய அளவிலான பணி நிறுத்தங்கள் உள்ளன. இது இந்தியாவில் ஸ்மார்ட்போன்களின் விலையை உயர்த்தக்கூடும்.

விலை அதிகரிக்கலாம்

விலை அதிகரிக்கலாம்

மேலும் இதன் தாக்கம் அடுத்த 15 நாட்களுக்கு முன்பே காணப்படலாம். இது மலிவு விலை போன்களிலும், சிறப்பு அம்ச தொலைப்பேசிகளிலும் விலைகள் எதிரொலிக்கலாம் என்று எதிர்பார்க்கிறார்கள். சிறப்பம்சங்களுடன் உள்ள விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்கள் விலை மிக அதிகமாக பாதிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக megUS Mobile தலைமை விற்பனை அதிகாரி நிகில் சோப்ரா தெரிவித்துள்ளார்.

விலை 10% அதிகரிக்ககூடும்

விலை 10% அதிகரிக்ககூடும்

போன்களின் விலையானது megUS Mobile 10% வரை அதிகரிக்கக்கூடும் என்று இந்த நிறுவனம் எதிர்பார்க்கிறது. அதே நேரத்தில் ஸ்மார்ட்போன் விலை 6-7% ஆக உயரலாம் என்றும், இது அடுத்த 15-20 நாட்களில் நடக்கும் அதன் தாக்கத்தை நீங்கள் காண்பீர்கள் என்றும் அவர் கூறினார். எனினும் இது பிரிமியம் ஸ்மார்ட்போன் விலை அதிகம் பாதிக்கப்படாததற்கு ஒரு காரணம், இந்தியாவில் அவற்றின் தேவை ஏற்கனவே குறைவாக இருப்பதால், அதில் அவ்வளவாக பாதிப்பு இருக்காது என்றும் கூறியுள்ளார்.

ஐபோன்களும் விலை அதிகரிக்கலாம்

ஐபோன்களும் விலை அதிகரிக்கலாம்

ஆப்பிள் நிறுவனத்தின் சில ஐபோன்களைப் சீனாவிலிருந்து முழுமையாக இறக்குமதி செய்யப்படும் தொலைப்பேசிகளும் பணி நிறுத்தங்களால் நிச்சயமாக பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறேன் என்று கனலிஸின் ஆராய்ச்சி ஆய்வாளர் அத்வைட் மார்டிகர் கூறியுள்ளார். மேலும் அடுத்து வரும் ஆறு மாதங்கள் வரை இந்த தாக்கம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

எத்தனை நாட்களுக்கு இந்த பிரச்சனை நீடிக்கும்

எத்தனை நாட்களுக்கு இந்த பிரச்சனை நீடிக்கும்

ஆக சீனாவில் நிலவி வரும் இந்த தாக்கம் அடுத்து வரும் 60 முதல் 180 நாட்கள் வரை நீடிக்கும் என்றும் மதிப்பீடுகள் கூறுகின்றன. மேலும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, ஏற்கனவே சில அசல் உபகரண உற்பத்தியாளர்கள் ஏற்கனவே விலைகளை உயர்த்த தொடங்கியுள்ளனர். இந்தியாவின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் விற்பனையாளரான சியோமி, அதன் பிரபலமான ரெட்மி 8 ஸ்மார்ட்போனின் விலையை கடந்த வாரம் உயர்த்தியது.

இருப்பு அதிகமாக இருக்கும்

இருப்பு அதிகமாக இருக்கும்

இந்திய ஸ்மார்ட்போன் விற்பனையாளர்கள் மற்றும் இந்தியாவில் விற்பனை செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள் இதுவரை பணி நிறுத்தங்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பாக இருந்தன. ஆனால் தற்போது விஷயங்கள் மாறத் தொடங்கியுள்ளன. சீனாவின் புத்தாண்டு காரணமாக ஜனவரி மாத இறுதியில் சீனா வணிகங்கள் நிறுத்தப்படும், இதனால் பொதுவாகவே இந்த காலத்தில் பிராண்டுகள் அதிகமாக சேமிக்கப்படும்.

விலை அதிகரிக்கலாம்

விலை அதிகரிக்கலாம்

ஆக சேமிக்கப்பட்ட பிராண்டுகள் தற்போது நிறுவனங்களில் இறுதி கட்டத்தினை தொடங்கியுள்ளன. இந்தியாவின் முதல் ஐந்து மொபைல் வினியோகஸ்தர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் இத்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது சீனா தவிர மற்ற நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ள நிலையில், கொரோனா மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டினால் விலை இன்னும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+